வேதாகம மொழிபெயர்ப்புக்கு வருக! தேவனுடைய செய்தியை உங்கள் ஜனங்களின் மொழியில் மொழிபெயர்க்க நீங்கள் விரும்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது வேதாகம கதைகளின் மொழிபெயர்ப்பின் மூலமாகவோ அல்லது வேதவாக்கிய புத்தகங்களின் மூலமாகவோ இருக்கலாம். இந்த செயல்முறை கையேடு என்பது ஒரு திட்டத்தின் தொடக்கத்திலிருந்து அதன் நிறைவு வரை அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மொழிபெயர்ப்புக்குழுக்கள் அறிய உதவும் படிப்-படியான வழிகாட்டியாகும். இந்த வழிகாட்டி ஆரம்ப அமைப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தின் இறுதி வெளியீடு வரை ஒரு மொழிபெயர்ப்புக்குழுவுக்கு உதவும்.
மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலான பணியாகும், இது அர்ப்பணிப்பு, அமைப்பு மற்றும் திட்டமிடல் ஆகியவற்றைக் கொண்டது. முழுமையான, சரிபார்க்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட மற்றும் பயன்பாட்டில்-உள்ள மொழிபெயர்ப்பிற்கு ஒரு யோசனையிலிருந்து மொழிபெயர்ப்பை எடுக்க தேவையான பல படிகள் உள்ளன. இந்த செயல்முறை கையேட்டில் உள்ள தகவல்கள் மொழிபெயர்ப்பு செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து படிகளையும் அறிய உதவும்.
வேதாகமத்தை மொழிபெயர்க்க பல திறமைகள் தேவை, எனவே நீங்கள் முதலில் சிந்திக்க வேண்டியது எவ்வாறு குழுவைத் தேர்ந்தெடுப்பது அது இந்த பணியினை செய்யக்கூடியது.
நீங்கள் மொழிபெயர்ப்பு மற்றும் சரிபார்ப்பு குழுவை தேர்ந்தெடுக்கத் தொடங்கும் போது, வெவ்வேறு வகையான மக்கள் மற்றும் பாத்திரங்கள் தேவைப்படுகிறார்கள. ஒவ்வொரு குழுவிற்கு தேவைப்படும் குறிப்பிட்ட தகுதிகளும் உள்ளன.
மொழிபெயர்ப்புக்குழு எடுக்க வேண்டிய பல தீர்மானங்கள் உள்ளன, அவற்றில் பல திட்டத்தின் தொடக்கத்திலேயே உள்ளன. உள்ளடக்குகள் பின்வருமாறு:
மொழிபெயர்ப்புக்குழு இந்த முடிவுகளை எடுத்த பின், மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள அனைவரும் படிக்கக்கூடிய ஆவணத்தில் அவற்றை எழுதுவது நல்லது. இது அனைவருக்கும் ஒத்த மொழிபெயர்ப்பு முடிவுகளை எடுக்க உதவும், மேலும் இந்த விஷயங்களைப் பற்றிய கூடுதல் வாதங்களைத் தவிர்க்கும்.
மொழிபெயர்ப்புக்குழு தேர்ந்தெடுத்த பின், அவர்களுக்கு மொழிபெயர்ப்பு பயிற்சி கொடுக்கத் தொடங்குவதற்கான நேரம் இதுவாகும்.
நீங்கள் மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பு கையேடு -யினை அடிக்கடி கலந்தாய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் மொழிபெயர்ப்பைத் தொடங்குவதற்கு முன், எழுத்தியல்பான மொழிபெயர்ப்பிற்கும் அர்த்தம்-அடிப்படையிலான மொழிபெயர்ப்பிற்கும் உள்ள குறைந்தபட்ச வித்தியாசத்தை நீங்கள் அறியும் வரை மொழிபெயர்ப்பு கையேடு மூலம் உங்கள் வழிமுறையை செயல்படுத்த தொடங்குமாறு பரிந்துரைக்கிறோம். மொழிபெயர்ப்பு கையேட்டின் மீதமுள்ள பகுதியை "சரியான-நேரத்தில்" கற்றல் வழிமுறையாகப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புத் திட்டத்தை தொடங்குவதற்கு முன் மொழிபெயர்ப்புக்குழுவில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய சில முக்கியமான பாடங்கள் பின்வருமாறு:
நீங்கள் தொடங்கும்போது வேறு சில முக்கியமான தலைப்புகளும் பின்வருமாறு:
நீங்கள் மொழிபெயர்ப்புக்குழு அமைத்தல் மற்றும் உங்கள் மொழிபெயர்ப்பின் முதல் வரைவு -யை உருவாக்க விரும்பினால், மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தை -யைப் பயன்படுத்தவும். மொழிபெயர்ப்பு செயல்முறை என்பதை நீங்கள் பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
கதவு43 (Door43) நிகழ்நிலை சமூகத்தில் வேதாகம மொழிபெயர்ப்புகளை வரைவு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட தளம் மொழிபெயர்ப்புக்கலைக்கூடம் (http://ufw.io/ts/). The recommended platform for checking Bible translations is translationCore (http://ufw.io/tc/). You may set up translationStudio on Android, Windows, Mac, or Linux devices (see Setting up translationStudio மேலும் தகவலுக்கு). நீங்கள் Windows, Mac அல்லது Linux ஆகிய இயக்க-அமைப்புகளில் மொழிபெயர்ப்புமையத்தை (translationCore) அமைக்கலாம். இந்த தளங்ககளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அவர்கள் USFM வடிவத்தில் வேதாகம புத்தகங்களை பதிவேற்றம் செய்து பதிவிறக்கம் செய்கிறார்கள்.
உங்கள் குழுவிற்கு மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தை தெரிந்தெடுக்க விருப்பம் இல்லை என்றால், பிற நிகழ்நிலை (online) அல்லது அகல்நிலை (offline) கருவிகளை பயன்படுத்தலாம். தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தை பயன்படுத்தாமல் பிற வேதாகம மொழிபெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தினால், உங்கள் மொழிபெயர்ப்பின் உள்ளடக்கம் USFM வடிவத்தில் இருப்பதை உறுதிசெய்வது உங்களின் பொறுப்பாகும் (மேலும் தகவலுக்கு கோப்பு வடிவங்கள் பார்க்க).
மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தின் கைப்பேசிக்கான (Android) பதிப்பு Google Play Store -யிலிருந்து கிடைக்கிறது அல்லது http://ufw.io/ts/. -யிலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நீங்கள் Play Store -யிலிருந்து நிறுவினால், புதிய பதிப்பு கிடைக்கும்போது Play Store உங்களுக்கு அறிவிக்கும். இணையத்தை பயன்படுத்தாமல் மற்றவர்களுடன் மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தை பகிர நிறுவல் கோப்பை (apk) பிற செயல்கருவிகளிலும் நகலெடுக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேசைக்கணினி அல்லது மடிக்கணினிகளுக்கான (Windows, Mac அல்லது Linux) மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தின் சமீபத்திய பதிப்பு http://ufw.io/ts/ -யிலிருந்து கிடைக்கிறது. பயன்பாட்டு நிரலை நிறுவ, “மேசைக்கணினி” பகுதிக்குச் சென்று சமீபத்திய வெளியீட்டை பதிவிறக்கவும். இணையத்தைப் பயன்படுத்தாமல் மற்றவர்களுடன் மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தை பகிர நிறுவல் கோப்பையை மற்ற கணினிகளுக்கும் நகலெடுக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நிறுவப்பட்டதும், மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தின் இரு பதிப்புகளும் ஒத்த தன்மையுடன் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தைப் பயன்படுத்த உங்களுக்கு இணைய இணைப்பு தேவையில்லை! மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தை முதன்முறையாக பயன்படுத்தும்போது, மென்பொருள் உங்களை ஒரு திரைக்கு அழைத்துச் செல்லும், அங்கு நீங்கள் விசுவாச அறிக்கை, மொழிபெயர்ப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் பொதுவான உரிமம் ஆகிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
இந்த முதல் பயன்பாட்டு-திரைக்குப் பின், மென்பொருள் உங்களை முகப்புத்திரைக்கு அழைத்து செல்லும், அங்கு நீங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்க முடியும். நீங்கள் திட்டத்திற்கு ஒரு பெயரை (வழக்கமாக வேதாகம புத்தகம்) கொடுக்க வேண்டும், திட்டத்தின் வகையை (பொதுவாக வேதாகம அல்லது திறந்த வேதாகம கதைகள்) அடையாளம் காணவும், மேலும் இலக்கு மொழியை அடையாளம் காண வேண்டும். உங்கள் திட்டம் உருவாக்கப்பட்டதும், நீங்கள் மொழிபெயர்க்க தொடங்கலாம். நல்ல மொழிபெயர்ப்பின் கோட்பாடுகள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதையும், மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தில் கட்டமைக்கப்பட்ட மொழிபெயர்ப்பு உதவிகள் - யை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். மூல உரையை பற்றியும் அதை எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பதையும் நன்கு புரிந்துகொள்ள இவைகள் உங்களுக்கு உதவும். உங்கள் பணி தானாகவே சேமிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பல்வேறு இடைவெளிகளில் உங்கள் படைப்பினை காப்புப்பிரதி எடுக்க, பகிர அல்லது பதிவேற்றவும் நீங்கள் தேர்வு செய்யலாம் (இந்த செயல்பாடுகளுக்கு பட்டியினை பயன்படுத்தவும்). மொழிபெயர்ப்பை எவ்வாறு தொடங்குவது என்பதற்கான வழிகாட்டுதல்களுக்கு, மொழிபெயர்ப்பு கண்ணோட்டம் மற்றும் முதல் வரைவு உருவாக்குதல் பார்க்க.
மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவு செய்து https://ts-info.readthedocs.io/ -ல் உள்ள ஆவணங்களைப் பார்க்கவும்.
உலகின் பெரும்பாலான மொழிகளான "பிற மொழிகளுக்கு" (OLs, நுழைவாயில் மொழிகளை (Gateway Languages) தவிர வேறு மொழிகள்), பின்வருவது மொழிபெயர்ப்பின் செயல்முறையாகும், அந்த மொழிபெயர்ப்பு வளங்களை கருவிகளுடன் விரிவடையும்வார்த்தை (unfoldingWord) பரிந்துரைக்கிறது மற்றும் ஆதரிக்கிறது.
மொழிபெயர்ப்புக்குழுவை அமைத்தல் மற்றும் மொழிபெயர்ப்புக்கோட்பாடுகள் -ல் மொழிபெயர்ப்பாளர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் மொழிபெயர்ப்புக்கலைக்கூடம் எவ்வாறு பயன்படுத்துவது ஆகியவற்றிற்குப் பிறகு, இந்த செயல்முறையை பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
ஐம்பதையும் நீங்கள் முடிக்கும் வரையிலும், திறந்த வேதாகம கதைகளின் ஒவ்வொரு கதையுடனும் இந்த படிகளை மீண்டும் செய்யவும்.
திறந்த வேதாகம கதைகளை முடித்த பிறகு, வேதாகமத்தை மொழிபெயர்க்கத் தொடங்க உங்களுக்கு போதுமான திறமையும் அனுபவமும் கிடைத்திருக்கும். சிரம நிலை 2 என்ற புத்தகத்துடன் தொடங்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த செயல்முறையை பின்பற்றவும்:
மொழிபெயர்ப்புமையம் -ல் உள்ள மொழிபெயர்ப்புக்குறிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புசொற்கள் கருவிகளைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பைச் சரிபார்க்கவும்.
ஒவ்வொரு வேதாகம புத்தகத்திலும் இந்த படிகளை மீண்டும் செய்யவும்.
Door43 -ல் மொழிபெயர்ப்பை தொடர்ந்து வைத்திருக்கவும், பிழைகளை திருத்துவதற்கும் திருச்சபை சமூகத்தின் பரிந்துரைகளின்படி அதனை மேம்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்புக்குழுவில் இருந்து யாராவது திட்டமிடுங்கள். மொழிபெயர்ப்பை எளிதாக பதிவிறக்கம் செய்து மீண்டும் அச்சிடலாம்.
உங்கள் மொழிபெயர்ப்பை நீங்கள் சரிபார்க்கும்போது சரிபார்ப்பு கையேடு - யை அடிக்கடி கலந்தாய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் சரிபார்க்க தொடங்குவதற்கு முன், ஒவ்வொரு சரிபார்ப்புக்கும் என்ன தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும் வரை சரிபார்ப்பு கையேட்டின் மூலம் உங்கள் வழிமுறையை தொடங்க பரிந்துரைக்கிறோம். சரிபார்ப்பு செயல்முறையின் மூலம் நீங்கள் பணியாற்றும்போது, நீங்கள் அடிக்கடி சரிபார்ப்பு கையேட்டைப் பார்க்க வேண்டும்.
மொழிபெயர்ப்புக்குழு சரிபார்க்க தொடங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்:
மொழிபெயர்ப்புமையம்® என்பது வேதாகமத்தின் மொழிபெயர்ப்புகளை சரிபார்க்க ஒரு திறந்த-மூல மற்றும் திறந்த-உரிமம் பெற்ற மென்பொருள் செயலியாகும். இது முற்றிலும் இலவசமாக பயன்படுத்தக்கூடியது. மேஜைகணினி அல்லது மடிக்கணினிகளுக்கான (Windows, Mac அல்லது Linux) மொழிபெயர்ப்புமையத்தின் சமீபத்திய பதிப்பு https://translationcore.com/ -யிலிருந்து கிடைக்கிறது. செயலி நிறுவ, “பதிவிறக்கு” என்பதை சொடுக்கி சமீபத்திய வெளியீட்டைப் பெறுங்கள். இணையத்தைப் பயன்படுத்தாமல் மற்றவர்களுடன் மொழிபெயர்ப்புமையத்தைப் பகிர்ந்து கொள்ள நிறுவல் கோப்பினை மற்ற கணினிகளுக்கும் நகலெடுக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மொழிபெயர்ப்புமையம் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த ஆவணங்களுக்கு, தயவுசெய்து https://tc-documentation.readthedocs.io/ பார்க்க. பின்வருபவை ஒரு கண்ணோட்டமாகும்.
தொடங்குவதற்கு, நீங்கள் பயன்படுத்தும் பயனர் பெயருடன் உள்நுழைய வேண்டும். உங்கள் மொழிபெயர்ப்பு கதவு43 (Door43) -ல் இருந்தால், உங்கள் கதவு43 பயனர் பெயரைப் பயன்படுத்தவும். நீங்கள் இணையத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்றால், நீங்கள் பயன்படுத்த விரும்பும் எந்த பெயரையும் உண்மையான அல்லது புனைப்பெயரில் பதிவிடலாம்.
நீங்கள் பயன்படுத்தும் கதவு43 பயனர் பெயருடன் நீங்கள் உள்நுழைந்திருந்தால், எந்த மொழிபெயர்ப்புகள் உங்களுக்கு சொந்தமானது என்பதை மொழிபெயர்ப்பாளர் அறிந்து, அவற்றை மொழிபெயர்ப்புமையத்தில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்படி செய்வார். நீங்கள் சரிபார்க்க விரும்பும் மொழிபெயர்ப்பு திட்டத்தை கதவு43 -ல் உள்ள உங்கள் திட்டங்களின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம். இணையத்தைப் பயன்படுத்தாமல் உங்கள் கணினியில் ஏற்கனவே சேமிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளையும் ஏற்றலாம்.
மொழிபெயர்ப்புமையத்தில் தற்போது மூன்று சோதனை கருவிகள் உள்ளன:
ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை மேலே உள்ள கருவியின் பெயரைக் சொடுக்குவதன் மூலம் காணலாம்.
எந்த நேரத்திலும், உங்கள் படைப்பினை Door43 by returning to the project list and clicking on the three-dot menu next to the project that you want to upload and choosing "Upload to Door43". You can also save your project to a file on your computer. Once uploaded, Door43 will keep your work in a repository under your user name and you can access your work there (see Publishing -ல் பதிவேற்றலாம்.
ஒரு பணியானது கதவு43-ல் (Door43) பதிவேற்றப்பட்டதும், அது உங்கள் பயனர் கணக்கின் கீழ் நிகழ்நிலையில் (Online) தானாகவே கிடைக்கும். இது சுய-வெளியீடு என குறிப்பிடப்படுகிறது. உங்கள் திட்டத்தின் சமூகவலை பதிப்பை http://door43.org/u/user_name/project_name - ல் அணுகலாம் (இங்கு பயனர்_பெயர் உங்கள் பயனர்பெயர் மற்றும் திட்ட_பெயர் உங்கள் மொழிபெயர்ப்பு திட்டம்). நீங்கள் பதிவேற்றும்போது மொழிபெயர்ப்புக்கலைக்கூடம் (translationStudio) மற்றும் மொழிபெயர்ப்புமையம் (translationCore) ஆகிய இரண்டுமே சரியான இணைப்பை வழங்கும். எல்லா படைப்புகளையும் http://door43.org - ல் தேடலாம்.
உங்கள் கதவு43 (Door43) திட்ட பக்கத்திலிருந்து நீங்கள்:
உங்கள் திட்டத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதைக் குறித்து மேலும் அறிய, பகிர்ந்தளித்தல் பார்க்க.
வேதாகமத்தின் உள்ளடக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டு பயன்படுத்தப்படாவிட்டால் அது பயனற்றது. கதவு43 (Door43) மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீடுத்தளத்தை பயன்படுத்துவதன் ஒரு நன்மை என்னவென்றால், உள்ளடக்கத்தை பகிர்ந்தளிப்பதற்கான பல, எளிய வழிகளை இது வழங்குகிறது. கதவு43 -ல்:
உள்ளடக்க பகிர்ந்தளிப்பை இயக்கும் மிகப்பெரிய காரணி திறந்த உரிமம் ஆகும், இது கதவு43 -ல் உள்ள அனைத்து உள்ளடக்கங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த உரிமம் எல்லோருக்கும் தேவையான சுதந்திரத்தை அளிக்கிறது:
எந்தவொரு நோக்கத்திற்காகவும், வணிகரீதியாகவும், செலவு இல்லாமல். "இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்." (மத்தேயு 10:8)
உங்கள் மொழிபெயர்ப்புகளை நிகழ்-நிலையிலும் தொடர்பிலா-நிலையிலும் பகிர்ந்துக்கொள்வதற்கான வழிகளுக்கு, உள்ளடக்கத்தை பகிர்தல் பார்க்க.
மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தில் (translationStudio) உள்ள உள்ளடக்கத்தை பகிர்வது எளிதானது. அகல்நிலை (offline) பகிர்வுக்கு, tS பட்டியிலிருந்து காப்புப்பிரதி அம்சத்தை பயன்படுத்தவும். நிகழ்நிலை (online) பகிர்வுக்கு, tS பட்டியிலிருந்து பதிவேற்ற அம்சத்தை பயன்படுத்தவும். மொழிபெயர்ப்புமையத்தின் (translationCore), திட்டங்கள் பக்கத்தில் மூன்று-புள்ளி பட்டியைப் பயன்படுத்தவும். அகல்நிலை (offline) பகிர்வுக்கு, USFM -க்கு பதிவேற்றம் செய்யுங்கள் அல்லது CSV -க்கு பதிவேற்றம் செய்யுங்கள். நிகழ்நிலை (online) பகிர்வுக்கு, கதவு43 (Door43) பதிவேற்றத்தை பயன்படுத்தவும்.
மொழிபெயர்ப்புக்கலைக்கூடம் (translationStudio) அல்லது மொழிபெயர்ப்புமையத்தில் (translationCore) உங்கள் படைப்பை பதிவேற்றினால், அது நிகழ்நிலையில் கதவு43 -ல் தானாகவே தோன்றும். உங்கள் பயனர் கணக்கின் கீழ் நீங்கள் பதிவேற்றிய அனைத்து உள்ளடக்கங்களும் தோன்றும். எடுத்துக்காட்டாக, உங்கள் பயனர்பெயர் test_user எனில், உங்கள் எல்லா படைப்புகளையும் https://git.door43.org/test_user/ -ல் காணலாம். நீங்கள் பதிவேற்றிய திட்டங்களுக்கான இணைப்பை மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் உங்கள் படைப்புகளை அவர்களுடன் நிகழ்நிலையில் (online) பகிர்ந்து கொள்ளலாம்.
கதவு43 -ல் உங்கள் திட்ட பக்கங்களிலிருந்து ஆவணங்களை நீங்கள் உருவாக்கலாம் மற்றும் பதிவிறக்கலாம். நீங்கள் இவற்றை பதிவிறக்கம் செய்தவுடன், காகித நகல்களை அச்சிட்டு அதனை விநியோகிப்பது உட்பட, நீங்கள் விரும்புகிறப்படி மற்றவர்களுக்கு அவற்றை பரிமாற்றம் மாற்றலாம்.