இந்த கையேடு துல்லியம், தெளிவு மற்றும் இயல்பான தன்மைக்காக வேதாகம மொழிபெயர்ப்புகளை பிற மொழிகளில் (OLs) எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை விவரிக்கிறது. (நுழைவாயில் மொழிகள் (GLs) சரிபார்க்கும் செயல்முறைக்கு, [நுழைவாயில் மொழி கையேடு] (https://gl-manual.readthedocs.io/en/latest/) -பார்க்க). இந்த மொழிபெயர்ப்பு சரிபார்ப்பு கையேடு, மொழிபெயர்ப்புக்கான ஒப்புதல் மற்றும் மொழிப் பகுதியின் திருச்சபைத் தலைவர்களிடமிருந்து மொழிபெயர்ப்பு செயல்முறைக்கு ஒப்புதல் பெறுவதன் முக்கியத்துவத்தையும் விவாதிக்கிறது.
மொழிபெயர்ப்புக்குழு ஒருவருக்கொருவர் வேலையை சரிபார்க்க பயன்படுத்தும் வழிமுறைகளுடன், மொழிபெயர்ப்பை சரிபார்க்கும் கையேடு தொடங்குகிறது. இந்த சரிபார்ப்புகளில் வாய்வழி கூட்டாளர் சோதனை மற்றும் குழு வாய்வழி துண்டின் சோதனை ஆகியவை அடங்கும். மொழிபெயர்ப்புமையத்தின் (translationCore) மென்பொருளுடன் மொழிபெயர்ப்பை சரிபார்க்க மொழிபெயர்ப்புக் குழுவுக்கு பயன்படுத்த வழிமுறைகள் உள்ளன. இதில் மொழிபெயர்ப்பு சொற்கள் சரிபார்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு குறிப்புகள் சோதனை ஆகியவை அடங்கும்.
இதற்கு பின், மொழிபெயர்ப்புக்குழு தெளிவு மற்றும் இயல்பான தன்மைக்கு மொழி சமூகம் உடன் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்க வேண்டும். இது அவசியம், ஏனென்றால் மொழியின் பிற பேச்சாளர்கள் பெரும்பாலும் மொழிபெயர்ப்புக்குழு நினைத்திருக்காத விஷயங்களைச் சொல்வதற்கான சிறந்த வழிகளை பரிந்துரைக்க முடியும். சில நேரங்களில் மொழிபெயர்ப்புக்குழு மொழிபெயர்ப்பை விசித்திரமாக செய்கிறது, ஏனெனில் அவை மூல மொழியின் சொற்களை மிக நெருக்கமாகப் பின்பற்றுகின்றன. மொழியின் பிற பேச்சாளர்கள் அதை சரிசெய்ய அவர்களுக்கு உதவலாம். இந்த கட்டத்தில் மொழிபெயர்ப்புக் குழு செய்யக்கூடிய மற்றொரு சோதனை OL போதகர் அல்லது திருச்சபைத்தலைவர் சோதனை. OL போதகர்கள் நுழைவாயில் மொழியில் (GL) வேதாகமத்தை நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் GL வேதாகமத்தின் துல்லியத்தன்மைக்கு மொழிபெயர்ப்பை சரிபார்க்கலாம். மொழிபெயர்ப்புக்குழு மிகவும் நெருக்கமாக தங்கள் வேலையில் ஈடுபடுவதால், மொழிபெயர்ப்புக்குழு காணாத தவறுகளையும் அவர்களால் பிடிக்க முடியும். மேலும், மொழிபெயர்ப்புக்குழுவில் அங்கம் வகிக்காத மற்ற OL போதகர்கள் கொண்டிருக்கக்கூடிய வேதாகமத்தின் நிபுணத்துவம் அல்லது அறிவு சிலவற்றை மொழிபெயர்ப்புக்குழுவில் இல்லாதிருக்கலாம். இந்த வழியில், இலக்கு மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பு துல்லியமானது, தெளிவானது மற்றும் இயல்பானது என்பதை உறுதிப்படுத்த முழு மொழி சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட முடியும்.
வேதாகம மொழிபெயர்ப்பின் துல்லியத்திற்கான கூடுதல் சோதனை, மொழிபெயர்ப்புமையத்தில் உள்ள சொல் சீரமைப்பு கருவியைப் பயன்படுத்தி வேதாகமத்தின் அசல் மொழிகளுடன் அதை சீரமைப்பதாகும். இந்த சரிபார்ப்புகள் அனைத்தும் செய்யப்பட்டு, மொழிபெயர்ப்பு சீரமைக்கப்பட்ட பின்னர், OL திருச்சபை கூட்டமைப்புகளின் தலைவர்கள் மொழிபெயர்ப்பை மறுஆய்வு செய்து, அவர்களின் ஒப்புதல் கொடுக்க விரும்புவார்கள். சபைக்கூட்டமைப்புகளின் பல தலைவர்கள் மொழிபெயர்ப்பின் மொழியை பேசாததால், பின் மொழிபெயர்ப்பு -யை உருவாக்குவதற்கான வழிமுறைகளும் உள்ளன, இது அவர்கள் பேசாத மொழியில் மொழிபெயர்ப்பை சரிபார்க்க மக்களை அனுமதிக்கிறது.
துல்லியமான, இயல்பான, தெளிவான மற்றும் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்க மொழிபெயர்ப்புக்குழுவிற்கு உதவுவதே சரிபார்ப்பின் இலக்காகும். மொழிபெயர்ப்புக்குழுவும் இந்த இலக்கை அடைய விரும்புகிறது. இது எளிதாக தோன்றலாம், ஆனால் உண்மையில் இதை அடைவது மிகவும் கடினம், மேலும் இதை அடைவற்கு பல்வேறு நபர்களையும், பல திருத்தங்களையும் மொழிபெயர்ப்பு எடுக்கிறது. இந்த காரணத்திற்காக, துல்லியமான, இயல்பான, தெளிவான மற்றும் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்க மொழிபெயர்ப்புக்குழுவுக்கு உதவுவதில் சோதனையாளர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
துல்லியமான ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்க போதகர்கள், திருச்சபைத் தலைவர்கள் மற்றும் திருச்சபைக்கூட்டமைப்புகளின் தலைவர்கள் என்கிற சோதனையாளர்கள் மொழிபெயர்ப்புக்குழுவிற்கு உதவுவார்கள். அவர்கள் மொழிபெயர்ப்பை மூல மொழியுடனும், முடிந்தால், வேதாகமத்தின் மூல மொழிகளுடனும் ஒப்பிட்டு இதை செய்வார்கள். (துல்லியமான மொழிபெயர்ப்புகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, துல்லியமான மொழிபெயர்ப்புகளை உருவாக்குங்கள் - பார்க்க.)
மொழி சமூகத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சோதனையாளர்கள், தெளிவான மொழிபெயர்ப்பை உருவாக்க மொழிபெயர்ப்புக்குழுவிற்கு உதவுவார்கள். அவர்கள் மொழிபெயர்ப்பை கவனித்து, மொழிபெயர்ப்பில் குழப்பமான அல்லது அவர்களுக்கு புரியாத இடங்களை சுட்டிக்காட்டி இதை செய்வார்கள். பின்னர் மொழிபெயர்ப்புக்குழு அந்த இடங்களை தெளிவுபடுத்தும் வகையில் சரிசெய்ய முடியும். (தெளிவான மொழிபெயர்ப்புகளை பற்றிய கூடுதல் தகவலுக்கு, தெளிவான மொழிபெயர்ப்புகளை உருவாக்கு -பார்க்க.)
மொழி சமூகத்தில் உறுப்பினர்களாக உள்ள சோதனையாளர்கள் இயல்பான மொழிபெயர்ப்பை உருவாக்க மொழிபெயர்ப்புக்குழுவுக்கு உதவுவார்கள். அவர்கள் மொழிபெயர்ப்பை கவனித்து, மொழிபெயர்ப்பு விசித்திரமாகவும், தங்கள் மொழியை பேசும் ஒருவர் சொல்வதை போல ஒலிக்காத இடங்களையும் சுட்டிக்காட்டி இதை செய்வார்கள். பின்னர் அந்த இடங்களை இயல்பாக மாறும் வகையில் மொழிபெயர்ப்புக்குழு சரிசெய்ய முடியும். (இயல்பான மொழிபெயர்ப்புகளை பற்றிய கூடுதல் தகவலுக்கு, இயல்பான மொழிபெயர்ப்புகளை உருவாக்குங்கள் -பார்க்க.)
திருச்சபை உறுப்பினர்களாக மொழி சமூகத்தில் இருக்கும் சோதனையாளர்கள், அந்த சமூகத்தில் உள்ள திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்க மொழிபெயர்ப்புக்குழுவிற்கு உதவுவார்கள். அவர்கள் மொழி சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பிற திருச்சபைகளின் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இதை செய்வார்கள். ஒரு மொழி சமூகத்தின் திருச்சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றி, மொழிபெயர்ப்பு நல்லது என ஒப்புக்கொள்ளும்போது, அது அந்த சமூகத்தில் உள்ள திருச்சபைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும். (திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளை பற்றிய கூடுதல் தகவலுக்கு, திருச்சபை-அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்புகளை உருவாக்குங்கள் -பார்க்க.)
வேதாகமானது வரலாற்று (சரித்திரம் முழுவதும்) மற்றும் உலகளாவிய (உலகம் முழுவதிலும்) திருச்சபைக்கு சொந்தமானது. திருச்சபையின் ஒவ்வொரு பகுதியும் நாம் எவ்வாறு வேதாகமம் சொல்வதை விளக்குகிறோம், அறிவிக்கிறோம், வாழ்கிறோம் என்பதில் ஒவ்வொரு பிற பகுதி திருச்சபைக்கு பொறுப்புக்கூற வேண்டும். வேதாகம மொழிபெயர்ப்பை பொறுத்தவரை, உலகின் ஒவ்வொரு மொழியும் வேதாகமத்தில் உள்ள பொருளை வெளிப்படுத்த அதன் சொந்த வழியைக் கொண்டிருக்கும். அப்படியிருந்தும், ஒவ்வொரு மொழி பேசும் திருச்சபையின் பகுதி, அந்த அர்த்தத்தை அவர்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கு மற்ற திருச்சபை பகுதிகளுக்கு பொறுப்பாளியாக வைக்கப்படுகிறது. அந்த காரணத்திற்காக, வேதாகமத்தை மொழிபெயர்ப்பவர்கள் மற்றவர்கள் அதை எவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்பதைப் படிக்க வேண்டும். இவர்கள், வேதாகம மொழிகளிலும், திருச்சபை வரலாற்றின் மூலம் வேதாகமத்தை புரிந்துகொண்டு விளக்கிய வல்லுநர்கள் மூலமாக வழிநடத்தப்படவும் திருத்தப்படவும் வேண்டும்.
மேற்கண்ட புரிதலுடன், ஒவ்வொரு மொழி பேசும் திருச்சபைக்கு அவர்களின் மொழியில் நல்ல தரமான வேதாகம மொழிபெயர்ப்பு எது, அல்லாதது எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். ஒரு வேதாகம மொழிபெயர்ப்பைச் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் அதிகாரமானது (இது நிலையானது) திறனிலிருந்து வேறுபட்டது, அல்லது ஒரு வேதாகம மொழிபெயர்ப்பைச் சரிபார்க்கும் செயல்முறையை செயல்படுத்தும் திறன் (இதை அதிகரிக்கலாம்). ஒரு வேதாகம மொழிபெயர்ப்பின் தரத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரம், மொழிபெயர்ப்பின் மொழியை பேசும் திருச்சபைக்கு சொந்தமானது, அவற்றின் தற்போதைய திறன், அனுபவம் அல்லது வேதாகம மொழிபெயர்ப்பைச் சரிபார்க்க உதவும் ஆதாரங்களுக்கான அணுகல் ஆகியவற்றிலிருந்து சுயாதீனமாக உள்ளது. எனவே, ஒரு மொழி குழுவில் உள்ள திருச்சபைக்கு தங்களது சொந்த வேதாகம மொழிபெயர்ப்பைச் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க அதிகாரம் உள்ள நிலையில், இந்த மொழிபெயர்ப்பு கலைக்கூடத்தின் தொகுதிகள் (modules of translationAcademy) உட்பட, விரிவடையவார்த்தை கருவிகள் (unfoldingWord tools), ஒவ்வொரு திருச்சபைக்கும் தங்கள் வேதாகம மொழிபெயர்ப்பின் தரத்தை சரிபார்க்கும் திறன் உள்ளது என்பதை உறுதிப்படுத்த ஒரு சிறந்த செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் ஒவ்வொரு மொழி குழுவிலும் உள்ள திருச்சபைக்கு வேதாகமத்தைப் பற்றி வேதாம வல்லுநர்கள் கூறியுள்ள சிலவற்றையும், திருச்சபையின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் அதை மற்ற மொழிகளில் எவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்பதையும் அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பை சரிபார்க்கும் செயல்முறை எஞ்சியிருக்கும் இந்த சோதனை கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டத்தில், முதல் வரைவு எனப்படும் தொகுதியில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, உங்கள் மொழிபெயர்ப்பில் குறைந்தது ஒரு அத்தியாயத்தையாவது வரைவு செய்வதற்கான படிகளை நீங்கள் ஏற்கனவே கடந்துவிட்டீர்கள். அதை சரிபார்க்கவும், ஏதேனும் பிழைகள் அல்லது சிக்கல்களை கண்டறியவும், அதை சிறப்பாக செய்யவும் மற்றவர்கள் உங்களுக்கு உதவ இப்போது நீங்கள் தயாராக உள்ளீர்கள். மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்ப்புக்குழு வேதாகமத்தின் பல கதைகள் அல்லது அத்தியாயங்களை மொழிபெயர்ப்பதற்கு முன்பு அவற்றின் மொழிபெயர்ப்பை சரிபார்க்க வேண்டும், இதனால் மொழிபெயர்ப்பு செயல்முறையில் முடிந்தவரை அவர்கள் தவறுகளை சீக்கிரத்தில் சரிசெய்ய முடியும். மொழிபெயர்ப்பு முடிவடைவதற்கு முன்பு இந்த செயல்முறையின் பல படிகள் பல முறை செய்யப்பட வேண்டும். வாய்மொழி கூட்டாளர் சோதனை செய்ய, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.
மொழிபெயர்ப்பு அசல் கதை அல்லது வேதாகம பத்தியின் பொருளை துல்லியமாக தெரிவிப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
ஒரு குழுவாக ஒரு பத்தியின் அல்லது அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பை சரிபார்க்க, குழுவின் வாய்மொழி துண்டின் சோதனை செய்யுங்கள். இதை செய்ய, ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தன் மொழிபெயர்ப்பை தனது குழுவின் மற்ற அங்கத்தினர்களுக்கு சத்தமாக வாசிப்பார். ஒவ்வொரு துண்டின் முடிவிலும், மொழிபெயர்ப்பாளர் நிறுத்துவார், இதனால் குழு அந்த துண்டை பற்றி விவாதிக்க முடியும். வெறுமனே, எழுதப்பட்ட ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் காட்சிப்படுத்தப்பட்டால், மொழிபெயர்ப்பாளர் உரையை வாய்மொழியாகப் படிக்கும்போது அனைவரும் அதைப் பார்க்க முடியும்.
குழு உறுப்பினர்களின் கடமைகள் பிரிக்கப்பட்டுள்ளன - ஒவ்வொரு குழு உறுப்பினரும் ஒரு நேரத்தில் பின்வரும் பாத்திரங்களில் ஒன்றை மட்டுமே வகிக்கிறார்கள் என்பது முக்கியம்.
அவர்களின் மொழிபெயர்ப்பில் குழு திருப்தி அடையும் வரை இந்த வழிமுறைகளை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
இந்த கட்டத்தில், மொழிபெயர்ப்பு முதல் வரைவாக கருதப்படுகிறது, மேலும் குழு பின்வருவனவற்றையும் செய்ய வேண்டும்.
மொழிபெயர்ப்புக்கலைக்கூடத்தைக் குழு பயன்படுத்துகிறது என்றால், குழு செய்த மாற்றங்கள் அனைத்தும் இந்த கட்டத்தில் உள்ளிட வேண்டும்.
மொழிபெயர்ப்புச்சொல் வருகிற இடத்தில் அனைத்து வசனங்களையும் தேர்வு செய்யப்பட்ட பின், அந்த வார்த்தையின் பட்டியலை மதிப்பாய்வு செய்யலாம். தொடர்ந்து வரும் வழிமுறைகள் மதிப்பாய்வாளருக்கு அல்லது மொழிபெயர்ப்பு குழுவினருக்கானவை.
ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்புச்சொல் -லிற்கான மொழிபெயர்ப்பு ஒரு குறிப்பிட்ட சூழலில் சரியாக இருக்கிறதா என்பது உங்களுக்கு தெரியாவிட்டால், மொழிபெயர்ப்பை உருவாக்கும்போது மொழிபெயர்ப்புக்குழு உருவாக்கிய மொழிபெயர்ப்புச்சொல் விரிதாளை கலந்தாலோசிப்பது உதவியாக இருக்கும். மொழிபெயர்ப்புக்குழுவில் உள்ள மற்றவர்களுடன் நீங்கள் ஒரு கடினமான சொல்லைப் பற்றி விவாதிக்க விரும்பலாம் மற்றும் ஒன்றாக ஒரு தீர்வை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். சில சூழல்களில் நீங்கள் வேறு சொல்லை பயன்படுத்த வேண்டியிருக்கலாம் அல்லது நீண்ட சொற்றொடரை பயன்படுத்துவது போன்ற மொழிபெயர்ப்புச்சொல் தெரிவிக்கக்கூடிய மற்றொரு வழியை கண்டறியலாம்.
சில குறிப்புகள் ஆராயப்படும் குறிப்பிட்ட வசனத்திற்கு பொருந்தக்கூடிய பொதுவான சிக்கலை குறிக்கின்றன. இந்த பொதுவான சிக்கலையும் தற்போதைய வசனத்திற்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதையும் புரிந்து கொள்ள, வலது பக்கத்தில் உள்ள பலகத்தின் தகவல்களை படிக்கவும்.
நீங்கள் ஒரு திருத்தம் செய்திருந்தால், உங்கள் தேர்வை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும்.
குறிப்பு பிரிவில் உள்ள அனைத்து வசனங்களும் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அந்த வகையில் உள்ள மொழிபெயர்ப்புகளின் பட்டியலை மதிப்பாய்வு செய்யலாம். தொடர்ந்து வரும் வழிமுறைகள் மதிப்பாய்வாளருக்கு அல்லது மொழிபெயர்ப்புக்குழுவினருக்கானவை.
குறிப்பு வகை அல்லது வேதாகம புத்தகத்தை மதிப்பாய்வு செய்தபின், சில வசனங்கள் அல்லது குறிப்பு சோதனைகள் குறித்து உங்களுக்கு இன்னும் கேள்விகள் இருக்கலாம். மொழிபெயர்ப்புக்குழுவில் உள்ள மற்றவர்களுடன் ஒரு கடினமான வசனத்தைப் பற்றி விவாதிக்க நீங்கள் விரும்பலாம், மேலும் ஒரு தீர்வை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம், அதிகமான வேதாகம மொழிபெயர்ப்பு ஆதாரங்களை படிக்கலாம் அல்லது கேள்வியை வேதாகம மொழிபெயர்ப்பு நிபுணரிடம் ஆலோசிக்கலாம்.
மொழிபெயர்ப்புக்குழு ஒரு குழுவாக வரைவு மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகளை முடித்து, மொழிபெயர்ப்புமையத்தில் (translationCore) சரிபார்த்தபின், மொழிபெயர்ப்பு இலக்கு மொழி சமூகத்தால் சோதிக்க தயாராக உள்ளது. இலக்கு மொழியில் மொழிபெயர்ப்பு அதன் செய்தியை தெளிவாகவும் இயல்பாகவும் தெரிவிக்க மொழிபெயர்ப்புக்குழுவுக்கு சமூகம் உதவும். இதை செய்ய, மொழிபெயர்ப்புக்குழு சமூக சோதனை செயல்பாட்டில் பயிற்சியளிக்கப்பட வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுக்கும். இவர்கள் மொழிபெயர்ப்பை செய்த அதே நபர்களாகவும் இருக்கலாம்.
இந்த மக்கள் மொழி சமூகம் முழுவதும் சென்று மொழி சமூகத்தின் உறுப்பினர்களுடன் மொழிபெயர்ப்பை சரிபார்ப்பார்கள். அவர்கள் இந்த சோதனையை மொழிப்பகுதியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், முதியவர்கள், ஆண், பெண், மற்றும் பேச்சாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுடன் செய்தால் நல்லது. இது அனைவருக்கும் மொழிபெயர்ப்பை புரிந்துகொள்ள உதவும்.
மொழிபெயர்ப்பை இயல்புத்தன்மை மற்றும் தெளிவுக்காக சரிபார்ப்பது, அதனை மூல மொழியுடன் ஒப்பிடுவது உதவாது. சமூகத்துடனான இந்த சோதனைகளின் போது, யாரும் மூல மொழி வேதாகமத்தை பார்க்கக்கூடாது. துல்லிய சோதனை போன்ற பிற சோதனைகளுக்கு மக்கள் மீண்டும் மூல மொழி வேதாகமத்தை பார்ப்பார்கள், ஆனால் இந்த சோதனைகளின்போது அல்ல.
இயல்புத்தன்மையை சரிபார்க்க, மொழி சமூகத்தின் உறுப்பினர்களுக்கு மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியை வாசிப்பீர்கள் அல்லது அதன் பதிவை இயக்குவீர்கள். நீங்கள் மொழிபெயர்ப்பை படிக்க அல்லது அதன் பதிவை இயக்குவதற்கு முன், அதை கவனிக்கும் மக்களிடம் அவர்கள் மொழியில் இயல்புக்கு மாறான ஒன்றைக் கேட்டால் அதை நிறுத்த வேண்டும் என்று சொல்லுங்கள். (இயல்புத்தன்மைக்கு மொழிபெயர்ப்பை எவ்வாறு சரிபார்ப்பதை பற்றிய கூடுதல் தகவலுக்கு, இயல்பான மொழிபெயர்ப்பு -பார்க்க.) அவர்கள் உங்களை நிறுத்தும்போது, எது இயல்பானதல்ல என்று கேளுங்கள், மேலும் அதை அவர்கள் எப்படி இயல்பான முறையில் சொல்வார்கள் என்றும் கேளுங்கள். அவர்கள் பதிலை அந்த சொற்றொடர் இருந்த அத்தியாயம் மற்றும் வசனத்துடன் எழுதுங்கள் அல்லது பதிவுசெய்யுங்கள், இதன் மூலம் மொழிபெயர்ப்புக்குழு மொழிபெயர்ப்பில் உள்ள சொற்றொடரை இந்த வழியில் பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளலாம்.
தெளிவுக்கான மொழிபெயர்ப்பை சரிபார்க்க, ஒவ்வொரு திறந்த வேதாகம கதை மற்றும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய வேதாகமத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கேள்விகள் மற்றும் பதில்கள் உள்ளன. மொழி சமூகத்தின் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு எளிதாக பதிலளிக்கும்போது, மொழிபெயர்ப்பு தெளிவாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். (கேள்விகளுக்கு http://ufw.io/tq/ - பார்க்க.)
இந்த கேள்விகளை பயன்படுத்த, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:
இப்படி தான் மொழிபெயர்ப்பு தெளிவாக தெரிவிக்கிறதா இல்லையா என்பதை நாம் அறிந்து கொள்வோம். இதே காரணத்திற்காக, சமூக உறுப்பினர்கள் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது ஒரு வேதாகமத்தை பார்க்காமல் இருப்பது முக்கியம்.
சமூக உறுப்பினர்களிடம் அந்த பத்தியில் சில கேள்விகளைக் கேளுங்கள், ஒரு நேரத்தில் ஒரு கேள்வி. சமூக உறுப்பினர்கள் மொழிபெயர்ப்பை நன்கு புரிந்துகொள்கிறார்கள் என்று தோன்றினால், ஒவ்வொரு கதைக்கும் அத்தியாயத்துக்கும் எல்லா கேள்விகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொரு கேள்விக்கு பின், மொழி சமூகத்தை சேர்ந்த ஒருவர் கேள்விக்கு பதிலளிப்பார். “ஆம்” அல்லது “இல்லை” என்று பதிலளித்தால் மட்டுமே, கேள்வி கேட்பவர் மேலும் கேள்வியை கேட்க வேண்டும், இதனால் மொழிபெயர்ப்பு நன்றாக தெரிவிக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியும். மேலும் கேட்கப்படும் கேள்வி இது போன்றதாக இருக்கலாம், "உங்களுக்கு அது எப்படி தெரியும்?" அல்லது “மொழிபெயர்ப்பின் எந்த பகுதி அதை சொல்கிறது?”
அந்த நபர் அளிக்கும் பதிலை, வேதாகம அத்தியாயம் மற்றும் வசனம் அல்லது நீங்கள் பேசும் திறந்த வேதாகம கதைகள் குறித்த கதை மற்றும் சட்டக எண்ணுடன் எழுதவும் அல்லது பதிவு செய்யவும். அந்த நபரின் பதில் கேள்விக்கு வழங்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட பதிலுடன் ஒத்ததாக இருந்தால், மொழிபெயர்ப்பு அந்த நேரத்தில் சரியான தகவலை தெளிவாக தெரிவிக்கிறது. அது சரியான பதிலாக இருக்க பரிந்துரைக்கப்பட்ட பதிலை போலவே இருக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் அடிப்படையில் அதே தகவலை கொடுக்க வேண்டும். சில நேரங்களில் பரிந்துரைக்கப்பட்ட பதில் மிக நீண்டதாக இருக்கும். அந்த நபர் பரிந்துரைக்கப்பட்ட பதிலின் ஒரு பகுதியை மட்டும் பதிலளித்தால், அதுவும் சரியான பதில்.
பதில் எதிர்பாராத அல்லது பரிந்துரைக்கப்பட்ட பதிலை விட மிகவும் வித்தியாசமாக இருந்தால், அல்லது அந்த நபரால் கேள்விக்கு பதிலளிக்க முடியாவிட்டால், அந்த தகவலை தெரிவிக்கும் மொழிபெயர்ப்பின் பகுதியை மொழிபெயர்ப்புக் குழு மாற்றியமைக்க வேண்டும், இதனால் அந்த தகவல் இன்னும் தெளிவாக தெரிவிக்கும்.
சாத்தியமானால், மொழி சமூகத்தின் ஆண், பெண், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பலரிடமும், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடமும் முடிந்தால் ஒரே கேள்விகளை கேட்க மறக்காதீர்கள். ஒரே கேள்விக்கு பதிலளிக்க பலருக்கு சிரமம் இருந்தால், மொழிபெயர்ப்பின் அந்த பகுதியில் சிக்கல் இருக்கலாம். மக்களுக்கு இருக்கும் சிரமம் அல்லது தவறான புரிதலை பற்றி ஒரு குறிப்பை உருவாக்கவும், இதன் மூலம் மொழிபெயர்ப்புக்குழு மொழிபெயர்ப்பை திருத்தி மேலும் தெளிவுபடுத்த முடியும்.
மொழிபெயர்ப்புக்குழு ஒரு பத்தியின் மொழிபெயர்ப்பை திருத்திய பின்னர், மொழி சமூகத்தின் வேறு சில உறுப்பினர்களிடம் அந்த பத்தியின் அதே கேள்விகளை கேளுங்கள், அதாவது, அதே பத்தியை சரிபார்ப்பதில் ஈடுபடாத மொழியின் பிற பேச்சாளர்களை கேளுங்கள். அவர்கள் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால், அந்த பத்தியின் மொழிபெயர்ப்பு இப்போது நன்றாக தெரிவிக்கிறது.
மொழி சமூகத்தின் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு நன்கு பதிலளிக்கும் வரை ஒவ்வொரு கதை அல்லது வேதாகம அத்தியாயத்துடன் இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும், மொழிபெயர்ப்பு சரியான தகவல்களை தெளிவாக தெரிவிக்கிறது என்பதை காட்டுகிறது. இதற்கு முன்னர் மொழிபெயர்ப்பை கேட்காத மொழி சமூக உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும்போது திருச்சபைத்தலைவரின் துல்லிய சோதனைக்கு மொழிபெயர்ப்பு தயாராக உள்ளது.
சமூக மதிப்பீட்டு பக்கத்திற்கு சென்று அங்குள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும். (மொழி சமூக மதிப்பீட்டு கேள்விகள் - பார்க்க)
தெளிவான மொழிபெயர்ப்பை பற்றிய கூடுதல் தகவலுக்கு, தெளிவு - பார்க்க. மொழிபெயர்ப்பை சரிபார்க்க மொழிபெயர்ப்பு கேள்விகளை தவிர வேறு முறைகளையும் சமூகத்துடன் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த பிற முறைகளுக்கு, பிற முறைகள் - பார்க்க.
கேள்விகளைக் கேட்பதுடன், மொழிபெயர்ப்பு தெளிவானது, வாசிக்க எளிதானது, மற்றும் கேட்பவர்களுக்கு இயல்பாக ஒலிகிறது என்பதை உறுதிப்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிற சோதனை முறைகளும் உள்ளன. நீங்கள் முயற்சிக்க விரும்பும் வேறு சில முறைகள் இங்கே:
ஒரு மொழிபெயர்ப்பு தெளிவாக இருக்க வேண்டும். அதாவது, அதைப் படிக்கும் அல்லது கேட்கும் ஒருவர் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்பதை எளிதாக புரிந்துக்கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பை நீங்களே படிப்பதன் மூலம் தெளிவாக இருக்கிறதா என்று பார்க்க முடியும். ஆனால் நீங்கள் அதை மொழி சமூகத்தைச் சேர்ந்த வேறொருவருக்கு சத்தமாக படித்தால் இன்னும் நல்லது. மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் அல்லது நீங்கள் படிக்கும் நபரிடம் கேளுங்கள், மொழிபெயர்க்கப்பட்ட செய்தி தெளிவாக இருக்கிறதா என அறிந்துகொள்ள பின்வரும் கேள்விகளை கேளுங்கள். சோதனையின் இந்த பகுதிக்கு, புதிய மொழிபெயர்ப்பை மூல மொழி மொழிபெயர்ப்புடன் ஒப்பிட வேண்டாம். எந்த இடத்திலும் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைப் பற்றி ஒரு குறிப்பை உருவாக்கவும், இதன்மூலம் மொழிபெயர்ப்புக்குழுவுடன் சிக்கலைப் பற்றி விவாதிக்கலாம்.
கூடுதல் உதவி:
கவனித்த யாரையாவது கதையை திரும்பசொல்ல கேளுங்கள். அந்த நபர் உங்கள் செய்தியை திரும்ப எளிதில் தெரிவித்தால், எழுத்து தெளிவாக இருக்கிறது. மொழிபெயர்ப்பை சோதிக்கும் பிற முறைகளுக்கு, பிற முறைகள் -யைப் பார்க்கவும்.
வேதாகமத்தை இயல்பானதாக மொழிபெயர்ப்பது என்பது என்னவென்றால்:
மொழிபெயர்ப்பு இலக்கு மொழி சமூகத்தின் உறுப்பினரால் எழுதப்பட்டது போல் இருக்க வேண்டும்-வெளிநாட்டவரால் அல்ல. மொழிபெயர்ப்பு இலக்கு மொழியை பேசுபவர்கள் சொல்லும் விதத்தில் விஷயங்களைச் சொல்ல வேண்டும். ஒரு மொழிபெயர்ப்பு இயற்கையாக இருக்கும்போது, புரிந்துகொள்வது மிகவும் எளிதானது.
மொழிபெயர்ப்பு இயல்புத்தன்மையை சரிபார்க்க, அதை மூல மொழியுடன் ஒப்பிடுவது உதவாது. இயல்புத்தன்மைக்கான இந்த சோதனையின் போது, யாரும் மூல மொழி வேதாகமத்தை பார்க்கக்கூடாது. துல்லிய சோதனை போன்ற பிற சோதனைகளுக்கு மக்கள் மூல மொழி வேதாகமத்தை மீண்டும் பார்ப்பார்கள், ஆனால் இந்த சோதனையின்போது அல்ல.
மொழிபெயர்ப்பு இயல்புத்தன்மையை சரிபார்க்க, நீங்கள் அல்லது மொழி சமூகத்தின் மற்றொரு உறுப்பினர் அதை சத்தமாகப் படிக்க வேண்டும் அல்லது அந்த பதிவை இயக்க வேண்டும். மொழிபெயர்ப்பின் இயல்புத்தன்மையை நீங்கள் காகிதத்தில் மட்டுமே பார்த்து அதை மதிப்பீடு செய்வது கடினம். ஆனால் உங்கள் மக்கள் மொழியை கேட்கும்போது, அது சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை அவர்கள் உடனடியாக அறிந்து கொள்வார்கள்.
இலக்கு மொழியை பேசும் மற்றொரு நபரிடம் அல்லது குழுவினரிடம் நீங்கள் இதை சத்தமாக படிக்கலாம். நீங்கள் படிக்க தொடங்குவதற்கு முன், உங்கள் மொழி சமூகத்தை சேர்ந்தவர் சொல்வதை போல ஒலிக்காத ஒன்றை கேட்கும்போது அவர்கள் உங்களை நிறுத்த வேண்டும் என்று சொல்லுங்கள். யாராவது உங்களை நிறுத்தும்போது, அதே விஷயத்தை யாராவது இயல்பான முறையில் எப்படி சொல்வார்கள் என்பதை நீங்கள் ஒன்றாக விவாதிக்கலாம்.
மொழிபெயர்ப்பு பேசுகின்ற அதே வகையான விஷயங்களைப் பற்றி மக்கள் பேசுகின்ற விதமாக உங்கள் கிராமத்தின் சூழ்நிலையை பற்றி சிந்திப்பது உதவியாக இருக்கும். அந்த விஷயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவர்களை கற்பனை செய்து பாருங்கள், பின்னர் அதை சத்தமாக சொல்லுங்கள். அதை சொல்வதற்கு இது ஒரு நல்ல மற்றும் இயல்பான வழி என்று மற்றவர்கள் ஒப்புக்கொண்டால், அதை மொழிபெயர்ப்பில் எழுதுங்கள்.
மொழிபெயர்ப்பின் பத்தியை பல முறை படிக்க அல்லது அந்த பதிவை இயக்க இது உதவியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் மக்கள் அதைக் கேட்கும்போது வெவ்வேறு விஷயங்களை கவனிக்கக்கூடும் - மிகவும் இயல்பான முறையில் சொல்லக்கூடிய விஷயங்கள்.
புதிய மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது, இந்தக் கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். மொழி சமூகத்திற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நடையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவும் கேள்விகள் இவை:
தவறான நடையில் மொழியை பயன்படுத்தின இடம் மொழிபெயர்ப்பில் இருந்தால், அதைப் பற்றி ஒரு குறிப்பை உருவாக்கவும், அப்பொழுது அதை நீங்கள் மொழிபெயர்ப்பு குழுவுடன் விவாதிக்க முடியும்.
இந்த பக்கத்தை சமூக சோதனையாளர்களின் பணிக்கு சரிபார்ப்பு பட்டியலாகப் பயன்படுத்தலாம், மேலும் அச்சிடப்பட்டு, மொழிபெயர்ப்புக் குழு மற்றும் சமூகத் தலைவர்களால் நிரப்பப்பட்டு, இந்த மொழிபெயர்ப்பிற்காக செய்யப்பட்ட சோதனை செயல்முறையின் பதிவாக வைக்கப்படலாம்.
மொழிபெயர்ப்பு குழுவின் உறுப்பினர்களான நாங்கள், ________________ மொழிபெயர்ப்பை மொழி சமூகத்தின் உறுப்பினர்களுடன் சரிபார்த்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
தயவு செய்து பின்வரும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும். இந்த கேள்விகளுக்கான பதில்கள், பரந்த கிறிஸ்தவ சமூகத்தில் உள்ளவர்களுக்கு, இலக்கு மொழி சமூகம் மொழிபெயர்ப்பை தெளிவான, துல்லியமான மற்றும் இயல்பாக காண்கிறது என்பதை அறிய உதவும்.
சமூக தலைவர்கள் தங்கள் சொந்த தகவல்களை இதில் சேர்க்க விரும்பலாம் அல்லது உள்ளூர் சமூகத்திற்கு இந்த மொழிபெயர்ப்பு எவ்வளவு ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை பற்றிய சுருக்கமான அறிக்கையை வெளியிட விரும்பலாம். இந்த தகவலுக்கான அணுகலை பரந்த திருச்சபை தலைமை கொண்டிருக்கும், மேலும் இது இதுவரை செய்யப்பட்டுள்ள சோதனை செயல்பாட்டில் புரிந்துகொள்ளவும் நம்பிக்கையுடனும் இருக்க அவர்களுக்கு உதவும். துல்லியமான சோதனை செய்யும் போதும் இறுதி சரிபார்ப்பு சோதனை செய்யும் போதும் உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பை சரிபார்க்க இது அவர்களுக்கு உதவும்.
தெளிவு மற்றும் இயல்பான தன்மைக்காக சமூக உறுப்பினர்களால் மொழிபெயர்ப்பு சரிபார்க்கப்பட்ட பிறகு, அது திருச்சபைத் தலைவர்களால் துல்லிய சோதனை செய்யப்படும். துல்லியம் சோதனை செய்யும் இந்த திருச்சபைத் தலைவர்களுக்கான வழிகாட்டுதல்கள் இவை. அவர்கள் இலக்கு மொழியினை தங்கள் தாய்மொழியாக கொண்டிருக்க வேண்டும், மேலும் கிடைக்கக்கூடிய மூல உரை மொழிகளில் ஒன்றை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மொழிபெயர்ப்பைச் செய்தவர்களாக இருக்கக்கூடாது. அவர்கள் வேதாகமத்தை நன்கு அறிந்த திருச்சபைத் தலைவர்களாக இருக்க வேண்டும். பொதுவாக இந்த மதிப்பாய்வு செய்பவர்கள் போதகர்களாக இருப்பார்கள். இந்த திருச்சபைத் தலைவர்கள் முடிந்தவரை மொழி சமூகத்தில் உள்ள பல்வேறு திருச்சபைகளின் வலையமைப்பு பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.
மதிப்பாய்வு செய்பவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
புதிய மொழிபெயர்ப்பு துல்லியமானது என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம். அசலின் அதே அர்த்தத்தை தெரிவிக்குமானால் அது துல்லியமான மொழிபெயர்ப்பாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், மூல எழுத்தாளர் தெரிவிக்க விரும்பிய அதே செய்தியை ஒரு துல்லியமான மொழிபெயர்ப்பு தெரிவிக்கும். ஒரு மொழிபெயர்ப்பு அதிகமாக அல்லது குறைவாக சொற்களை பயன்படுத்தினாலும் அல்லது கருத்துக்களை வேறு வரிசையில் வைத்தாலும் துல்லியமாக இருக்க முடியும். பெரும்பாலும் அசல் மொழியை இலக்கு மொழியில் தெளிவுபடுத்துவதற்கு இது அவசியம்.
வாய்மொழி இணை சோதனை -ன் போது மொழிபெயர்ப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் துல்லியத்துடன் மொழிபெயர்ப்பை சரிபார்த்திருந்தாலும், பலரால், குறிப்பாக போதகர்கள் மற்றும் திருச்சபை தலைவர்களால் சரிபார்க்கப்படும்போது மொழிபெயர்ப்பு தொடர்ந்து மேம்படும். ஒவ்வொரு பத்தி அல்லது புத்தகத்தை ஒரு திருச்சபை தலைவரால் சரிபார்க்க முடியும், அல்லது, மேலும் பல தலைவர்கள் இருப்பார்களானால், ஒவ்வொரு பத்தி அல்லது புத்தகத்தை சரிபார்க்க பல திருச்சபை தலைவர்கள் இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரு கதையை அல்லது பத்தியை சரிபார்ப்பது உதவியாக இருக்கும், ஏனென்றால் பெரும்பாலும் ஒவ்வொரு சோதனையாளர்களும் வெவ்வேறு விஷயங்களைக் கவனிப்பார்கள்.
துல்லிய சோதனை செய்யும் திருச்சபை தலைவர்கள் மொழிபெயர்ப்பின் மொழியை பேசுபவர்களாக இருக்க வேண்டும், சமூகத்தில் மதிக்கப்பட வேண்டும், மூல மொழியில் வேதாகமத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். அவர்கள் சரிபார்க்கும் பத்தி அல்லது புத்தகத்தை அவர்கள் மொழிபெயர்த்ததாக இருக்கக்கூடாது. மூல மொழியில் உள்ள அனைத்தையும் மொழிபெயர்ப்பு கூறுகிறது என்பதையும், மூல செய்தியில் இல்லாத விஷயங்களை சேர்க்வில்லை என்பதையும் உறுதிப்படுத்த துல்லிய நிபுணர்கள் மொழிபெயர்ப்பு குழுவிற்கு உதவுவார்கள். எவ்வாறாயினும், துல்லியமான மொழிபெயர்ப்புகளில் உள்ளார்ந்த தகவல் உள்ளடங்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
மொழி சமூக சோதனை செய்யும் மொழி சமூக உறுப்பினர்கள் இயல்பான தன்மை மற்றும் தெளிவுக்கான மொழிபெயர்ப்பை சரிபார்க்கும்போது மூல உரையைப் பார்க்கக்கூடாது என்பது உண்மைதான். ஆனால் துல்லிய சோதனைக்கு, துல்லியத்தை சரிபார்ப்பவர்கள் மூல உரையை பார்க்க வேண்டும், இதனால் அவர்கள் அதை புதிய மொழிபெயர்ப்புடன் ஒப்பிடலாம்.
துல்லிய சோதனை செய்யும் திருச்சபை தலைவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
நீங்கள் புரிந்துகொள்ளும் எந்த மொழிகளிலும் பத்தியை பல பதிப்புகளில் படிக்கவும். குறிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புசொற்களுடன் ULT மற்றும் UST -ல் உள்ள பத்தியை படியுங்கள். நீங்கள் இதை மொழிபெயர்ப்புக்கூடம் (translationStudio) அல்லது வேதாம பார்வையாளானில் (Bible Viewer) படிக்கலாம்.
மொழிபெயர்ப்பில் செம்மையற்ற எதையும் கண்டுபிடிப்பதற்கு இந்த கேள்விகள் உதவக்கூடும்:
சரிபார்க்க வேண்டிய பொதுவான வகைகளுக்கு, சரிபார்க்கவேண்டிய வகைகள் -க்கு செல்லவும்.
எங்கள் மொழி சமூகத்தில் திருச்சபைத் தலைவர்களாகிய நாங்கள் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகிறோம்:
மீதமுள்ள ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், செல்லுபடி சோதனையாளர்களின் கவனத்திற்கு இங்கே ஒரு குறிப்பை உருவாக்கவும்.
துல்லியம் சோதனையாளர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள்:
ஒரு வசனத்திற்கான இந்த செயல்முறையை நீங்கள் முடித்ததும், இலக்கு சொல் வங்கி அல்லது அசல் மொழி பலகத்தில் வார்த்தைகள் எஞ்சியுள்ளனவா என்பதை காணுதல் எளிதாக இருக்கவேண்டும்.
சீரமைப்புக் கருவி ஒன்றுக்கு-ஒன்று, ஒன்று-முதல்-பல, பல-முதல்-ஒன்று, மற்றும் பல-முதல்-பல சீரமைப்புகளை ஆதரிக்கிறது. அதாவது, இரண்டு மொழிகளால் தெரிவிக்கப்படும் அர்த்தத்தின் மிகத் துல்லியமான சீரமைப்பைப் பெறுவதற்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கு மொழிச் சொற்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசல் மொழிச் சொற்களுடன் சீரமைக்க முடியும். எதையாவது வெளிப்படுத்த இலக்கு மொழி வார்த்தைகளை அசல் மொழியை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயன்படுத்தினால் கவலைப்பட வேண்டாம். மொழிகள் வேறுபட்டவை என்பதால், இதை எதிர்பார்க்க வேண்டும். சீரமைப்பு கருவி மூலம், நாங்கள் உண்மையில் சொற்களை மட்டும் அல்ல, அதனோடு பொருளை சீரமைக்கிறோம். இலக்கு மொழிபெயர்ப்பு அசல் வேதாகமத்தின் பொருளை நன்றாக செய்ய எத்தனை வார்த்தைகள் தேவைப்பட்டாலும், அதை வெளிப்படுத்துவது மிக முக்கியம். அசல் மொழியை வெளிப்படுத்தும் இலக்கு மொழிச் சொற்களை பொருளை சீரமைப்பதன் மூலம், அசல் மொழி பொருள் அனைத்தும் மொழிபெயர்ப்பில் உள்ளதா என்பதை காணலாம்.
ஒவ்வொரு இலக்கு மொழியிலும் வாக்கிய அமைப்புக்கு வேறுபட்ட தேவைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய வெளிப்படையான தகவல்கள் இருப்பதால், எந்தவொரு அசல் மொழி சொற்களுக்கும் சரியான பொருத்தம் இல்லாத சில இலக்கு மொழி சொற்கள் பெரும்பாலும் இருக்கும். இந்த வார்த்தைகள் வாக்கியத்தை அர்த்தப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களைக் கொடுக்க அல்லது வாக்கியத்தைப் புரிந்துகொள்ளத் தேவையான சில உள்ளார்ந்த தகவல்களை வழங்குவதற்காக இருந்தால், வழங்கப்பட்ட இலக்கு சொற்கள் அவற்றைக் குறிக்கும் அசல் மொழி வார்த்தையுடன் சீரமைக்கப்பட வேண்டும் , அல்லது அவை விளக்க உதவுகின்றன.
நீங்கள் ஒரு வேதாகம புத்தகத்தை சீரமைத்து, மொழிபெயர்ப்பைப் பற்றிய கேள்விகளையும் கருத்துகளையும் தெரிவித்தபின், மொழிபெயர்ப்பு குழுவுக்கு கேள்விகளை அனுப்பலாம் அல்லது மொழிபெயர்ப்புக் குழுவுடன் சேர்ந்து கலந்துரையாட திட்டமிடலாம். இந்த செயல்முறையை முடிப்பதற்கான படிகளுக்கு, நீங்கள் விட்டுச்சென்ற பக்கத்திற்குத் திரும்புங்கள் செல்லுபடி சோதனைக்கான படிகள்.
இவை செல்லுபடி சோதனை செய்யும்போது திருச்சபைக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டிய படிகள். மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்ப்புக்குழுவுடன் சோதனையாளருக்கு நேரடி அணுகல் இருப்பதாக இந்த படிகள் கருதுகின்றன, மேலும் சோதனையாளரும் மொழிபெயர்ப்புக்குழுவும் மொழிபெயர்ப்பை ஒன்றாக மதிப்பாய்வு செய்வதால் நேருக்கு-நேர் கேள்விகளை கேட்கலாம். இது முடியாவிட்டால், மொழிபெயர்ப்பாளர்க்குழு மதிப்பாய்வு செய்ய சோதனையாளர் கேள்விகளை எழுத வேண்டும். இது அச்சிடப்பட்ட மொழிபெயர்ப்பு வரைவின் ஓரங்களில் இருக்கலாம், அல்லது ஒரு விரிதாளில் அல்லது, முன்னுரிமை, மொழிபெயர்ப்புஉள்ளகத்தின் (translationCore) கருத்து அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் இலக்கு மொழியை பேசினால், நீங்கள் மொழிபெயர்ப்பை படிக்கலாம் அல்லது கேட்கலாம், அதை பற்றி நேரடியாக மொழிபெயர்ப்புக்குழுவிடம் கேட்கலாம்.
நீங்கள் இலக்கு மொழியைப் பேசவில்லை என்றால், நீங்கள் சீரமைப்பு செய்ய முடியாது. ஆனால் நீங்கள் நுழைவாயில் மொழியை பேசும் வேதாகம அறிஞராக இருக்கலாம், மேலும் மொழிபெயர்ப்புக்குழுவுக்கு அவர்களின் மொழிபெயர்ப்பை மேம்படுத்த உதவலாம். அந்த வகையில், நுழைவாயில் மொழியில் பின் மொழிபெயர்ப்பிலிருந்து நீங்கள் பணியாற்ற வேண்டும். இதை மொழிபெயர்ப்பிலிருந்து தனித்தனியாக எழுதலாம், அல்லது அதை ஒரு இடைவரியாக எழுதலாம், அதாவது, மொழிபெயர்ப்பின் ஒவ்வொரு வரியின் கீழும் பின் மொழிபெயர்ப்பின் ஒரு வரியுடன் எழுதப்படலாம். மொழிபெயர்ப்பை ஒரு இடைநிலையாக எழுதும்போது பின்மொழிபெயர்ப்புடன் ஒப்பிடுவது எளிதானது, மேலும் தனித்தனியாக எழுதப்பட்ட பின் மொழிபெயர்ப்பை படிப்பதும் எளிது. ஒவ்வொரு முறைக்கும் அதற்கென சொந்த பலம் உண்டு. பின்மொழிபெயர்ப்பை உருவாக்குபவர் மொழிபெயர்ப்பில் ஈடுபடாத ஒருவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பின்மொழிபெயர்ப்பு - பார்க்க.
எழுதப்பட்ட பின்மொழிபெயர்ப்பு எதுவும் இல்லையென்றால், இலக்கு மொழியை அறிந்த ஒருவரையும், நீங்கள் புரிந்துகொள்ளும் ஒரு மொழியையும் உங்களுக்காக வாய்மொழி பின்மொழிபெயர்ப்பை உருவாக்குங்கள். இது மொழிபெயர்ப்பில் ஈடுபடாத ஒரு நபராக இருக்க வேண்டும். நீங்கள் வாய்மொழி பின்மொழிபெயர்ப்பை கேட்கும்போது, தவறான பொருளை அல்லது பிற சிக்கல்களை காண்பிக்கும் சொற்கள் அல்லது சொற்றொடர்களின் குறிப்புகளை உருவாக்குங்கள். அவர் பத்தியை குறுகிய பகுதிகளாக மொழிபெயர்க்க வேண்டும், ஒவ்வொரு பிரிவிற்கும் இடையில் இடைநிறுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவையும் கேட்டபின் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.
சோதனை அமர்வுக்கு பிறகு சில கேள்விகளை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த கேள்விகளுக்கான பதில்களைப் பற்றி விவாதிக்க மீண்டும் சந்திக்க ஒரு நேரத்தை திட்டமிடுங்கள். இவை பின்வருமாறு:
மொழிபெயர்ப்புக்குழு அவர்கள் மொழிபெயர்க்கும் வேதாகம பத்திகளிலிருந்து முக்கிய சொற்களின் பட்டியல் (முக்கியமான சொற்கள், மொழிபெயர்ப்புசொற்கள் என்றும் அறியப்படுகின்றன), இந்த முக்கியமான ஒவ்வொரு பதங்களையும் பயன்படுத்த அவர்கள் தீர்மானித்த இலக்கு மொழியில் உள்ள பதத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்களும் மொழிபெயர்ப்புக்குழுவும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் மற்றும் வேதாகம மொழிபெயர்ப்பின் மூலம் நீங்கள் முன்னேறும்போது இலக்கு மொழியிலிருந்து பதங்களை மாற்ற வேண்டும். நீங்கள் மொழிபெயர்க்கும் பத்தியில் முக்கிய சொற்கள் இருக்கும்போது உங்களை எச்சரிக்க முக்கிய சொற்களின் பட்டியலை பயன்படுத்தவும். வேதாகமத்தில் ஒரு முக்கிய சொல் இருக்கும்போதெல்லாம், அந்த முக்கிய வார்த்தைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடரை மொழிபெயர்ப்பு பயன்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் ஒவ்வொரு முறையும் அது அர்த்தமுள்ளதாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இது அர்த்தமல்ல என்றால், ஏன் இது சில இடங்களில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது ஆனால் மற்ற இடங்களில் இல்லை என்பதை நீங்கள் விவாதிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த சொல்லை மாற்றியமைக்க அல்லது மாற்ற வேண்டியிருக்கலாம், அல்லது முக்கிய வார்த்தை பயன்படுத்தப்படும் வெவ்வேறு வழிகளில் பொருந்துமாறு இலக்கு மொழியில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை பயன்படுத்த முடிவு செய்யலாம். இதை செய்வதற்கு, ஒவ்வொரு முக்கியமான வார்த்தையையும், மூல மொழி பதங்களின் நெடுவரிசைகள், இலக்கு மொழி பதம், மாற்று பதங்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வேதாகம பதங்களையும் ஒரு விரிதாளில் கண்காணிப்பது ஒரு பயனுள்ள வழி. இந்த அம்சம் எதிர்கால மொழிபெயர்ப்புகலைக்கூடத்தின் (translationStudio) பதிப்புகளில் இருக்கும் என்று நம்புகிறோம்.
நீங்கள் ஒரு வேதாகம புத்தகத்திற்கான செல்லுபடி சோதனை முடித்ததும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும்: செல்லுபடி சோதனைக்கான கேள்விகள்.
இந்த எல்லாவற்றையும் சரிபார்த்து, திருத்தங்களை செய்தபின், மொழிபெயர்ப்புக்குழு ஒருவருக்கொருவர் அல்லது அவர்களின் சமூகத்தின் மற்ற உறுப்பினர்களிடம் மீண்டும் உரத்த குரலில் படித்து, எல்லாம் இயல்பாகவே செல்கிறது மற்றும் சரியான இணைப்பிகள் பயன்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஒரு திருத்தம் இயல்புக்கு மாறாக இருந்தால், அவர்கள் மொழிபெயர்ப்பில் கூடுதல் மாற்றங்களை செய்ய வேண்டும். இலக்கு மொழியில் மொழிபெயர்ப்பு தெளிவாக மற்றும் இயல்பாக தெரிவிக்கும் வரை இந்த சோதனை மற்றும் திருத்த செயல்முறை மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும்.
செல்லுபடி சோதனை செய்பவர்கள் புதிய மொழிபெயர்ப்பை படிக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை.
மொழிபெயர்ப்பு பகுதிகளை படித்த பிறகு அல்லது உரையில் சிக்கல்களை கண்டவுடன் இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கலாம். முதல் குழுவில் உள்ள இந்த கேள்விகளுக்கு நீங்கள் “இல்லை” என்று பதிலளித்தால், தயவுசெய்து இன்னும் விரிவாக விளக்குங்கள், சரியில்லை என்று நீங்கள் நினைக்கும் குறிப்பிட்ட பத்தியை சேர்த்து, மொழிபெயர்ப்புக்குழு அதை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்பதற்கான உங்கள் பரிந்துரையை வழங்கவும்.
மூல மொழியின் பொருளை இலக்கு மொழியில் இயல்பான மற்றும் தெளிவான முறையில் வெளிப்படுத்துவதே மொழிபெயர்ப்புக்குழுவின் குறிக்கோள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் பொருள் அவர்கள் சில உட்பிரிவுகளின் வரிசையை மாற்ற வேண்டியிருக்கலாம் மற்றும் இலக்கு மொழியில் பல சொற்களை கொண்டு மூல மொழியில் பல ஒற்றை சொற்களை குறிக்க வேண்டியிருக்கலாம். இந்த விஷயங்கள் பிற மொழி (OL) மொழிபெயர்ப்புகளில் சிக்கல்களாக கருதப்படவில்லை. ULT மற்றும் UST யின் நுழைவாயில் மொழி (GL) மொழிபெயர்ப்புகளுக்காக ஒரே ஒரு முறை மட்டுமே இந்த மாற்றங்கள் செய்வதை மொழிபெயர்ப்பாளர்கள் தவிர்க்க வேண்டும். அசல் வேதாகம மொழிகள் எவ்வாறு அர்த்தத்தை வெளிப்படுத்தின என்பதை OL மொழிபெயர்ப்பாளருக்கு காண்பிப்பதே ULT -ன் நோக்கமாகும், OL -ல் மரப மொழியை பயன்படுத்துவது மிகவும் இயல்பானதாக இருந்தாலும், அதே பொருளை எளிய, தெளிவான வடிவங்களில் வெளிப்படுத்துவதே UST -ன் நோக்கமாகும். GL மொழிபெயர்ப்பாளர்கள் அந்த வழிகாட்டுதல்களை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் OL மொழிபெயர்ப்புகளை பொறுத்தவரை, குறிக்கோள் எப்போதும் இயல்பானதாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும்.
அசல் செய்தியிலிருந்து அசல் பார்வையாளர்கள் புரிந்துகொண்டிருக்கும் தகவல்களை மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளடக்கியிருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், ஆனால் அசல் ஆசிரியர் வெளிப்படையாக கூறவில்லை. இலக்கு பார்வையாளர்கள் உரையைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் அவசியமாக இருக்கும்போது, அதை வெளிப்படையாக சேர்ப்பது நல்லது. இதைப் பற்றி மேலும் அறிய, உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான தகவல் -பார்க்க.
உள்ளூர் சமூக புத்தகத்தில் மொழிபெயர்க்க கடினமாக இருக்கும் சில பத்திகளில் உள்ள கலாச்சார சிக்கல்களை பற்றி சிந்தியுங்கள். மொழிபெயர்ப்புக் குழு இந்த பத்திகளை மூல உரையின் செய்தியை தெளிவுபடுத்தும் வகையில் மொழிபெயர்த்துள்ளதா, மேலும் கலாச்சார பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்படக்கூடிய தவறான புரிதலை தவிர்க்கிறதா?
இந்த இரண்டாவது குழுவில் உள்ள ஏதேனும் கேள்விகளுக்கு நீங்கள் “ஆம்” என்று பதிலளித்தால், தயவுசெய்து இன்னும் விரிவாக விளக்குங்கள், இதன்மூலம் குறிப்பிட்ட சிக்கல் என்ன, உரையின் எந்த பகுதியை திருத்த வேண்டும், அவற்றை எவ்வாறு சரிசெய்ய விரும்புகிறீர்கள் என்பதை மொழிபெயர்ப்புக்குழு அறிய முடியும்.
மொழிபெயர்ப்பில் சிக்கல்கள் இருந்தால், மொழிபெயர்ப்புக் குழுவைச்சந்தித்து இந்த சிக்கல்களை தீர்க்க திட்டமிடுங்கள். நீங்கள் அவர்களுடன் சந்தித்த பிறகு, மொழிபெயர்ப்புக்குழு சமூகத்தலைவர்களுடன் அவர்களின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பை சரிபார்க்க வேண்டும், அது இன்னும் நன்றாக தெரிவிக்கக்கூடியதாயிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், பின்னர் உங்களுடன் மீண்டும் சந்திக்கலாம்.
மொழிபெயர்ப்பை அங்கீகரிக்க நீங்கள் தயாராக இருக்கும்போது, இங்கே செல்லுங்கள்: செல்லுபடி ஒப்புதல்.
நான், திருச்சபைக்கூட்டமைப்பு அல்லது வேதாகம மொழிபெயர்ப்பு அமைப்பின் பெயரை நிரப்புக திருச்சபைக்கூட்டமைப்பு அல்லது வேதாகம மொழிபெயர்ப்பு அமைப்பின் மொழி சமூகத்தின் பெயரை நிரப்பவும் மொழி சமூகத்திற்கு சேவை செய்யும் பிரதிநிதியாக, மொழிபெயர்ப்பை அங்கீகரித்து, பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகிறேன்:
மொழிபெயர்ப்புக்குழுவுடன் இரண்டாவது முறை சந்தித்த பிறகும் ஏதேனும் சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால், தயவுசெய்து அவற்றை இங்கே குறிப்பிடுங்கள்.
கையொப்பம்: இங்கே கையொப்பமிடுங்கள்
பதவி: உங்கள் பதவியை இங்கே நிரப்பவும்
நுழைவாயில் மொழிகளுக்கு, நீங்கள் மூல உரை செயல்முறை - யைப் பின்பற்ற வேண்டும், இதனால் உங்கள் மொழிபெயர்ப்பு மூல உரையாக மாறும்.
பின் மொழிபெயர்ப்பு என்பது விவிலிய உரையை உள்ளூர் இலக்கு மொழியிலிருந்து (OL) மீண்டும் பரந்த தகவல்தொடர்பு மொழியில் (GL) மொழிபெயர்ப்பதாகும். இது "பின் மொழிபெயர்ப்பு" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது உள்ளூர் இலக்கு மொழி மொழிபெயர்ப்பை உருவாக்க செய்யப்பட்டதை விட எதிர் திசையில் மொழிபெயர்ப்பாகும். பின் மொழிபெயர்ப்பின் நோக்கம் இலக்கு மொழியைப் பேசாத ஒருவர் இலக்கு மொழி மொழிபெயர்ப்பு என்ன சொல்கிறது என்பதை அறிய அனுமதிப்பதாகும்.
பின் மொழிபெயர்ப்பு முற்றிலும் இயல்பான பாணியில் செய்யப்படவில்லை, இருப்பினும், மொழிபெயர்ப்பின் மொழியில் ஒரு குறிக்கோளாக இயல்புத்தனம் இல்லை (இது இந்த விஷயத்தில், பரந்த தகவல்தொடர்பு மொழி). அதற்கு பதிலாக, பின் மொழிபெயர்ப்பின் குறிக்கோள் உள்ளூர் மொழி மொழிபெயர்ப்பின் சொற்களையும் வெளிப்பாடுகளையும் எழுத்தியல்பான வழியில் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, பரந்த தகவல்தொடர்பு மொழியின் இலக்கணம் மற்றும் சொல் வரிசையையும் பயன்படுத்துகிறது. இந்த வழியில், மொழிபெயர்ப்பின் சோதனையாளர் இலக்கு மொழி உரையில் உள்ள சொற்களின் பொருளை மிகத் தெளிவாகக் காண முடியும், மேலும் பின் மொழிபெயர்ப்பையும் நன்கு புரிந்துகொண்டு விரைவாகவும் எளிதாகவும் படிக்க முடியும்.
இலக்கு மொழியை புரிந்து கொள்ளாத ஒரு ஆலோசகர் அல்லது வேதாகம பொருட்களின் சோதனையாளர் இலக்கு மொழி மொழிபெயர்ப்பில் உள்ளதை கொள்ளாவிட்டால், அவன் அல்லது அவள் இலக்கு மொழியை புரிந்து கொள்ளாவிட்டாலும், இலக்கு மொழி மொழிபெயர்ப்பில் உள்ளதைக் காண அனுமதிப்பதே பின் மொழிபெயர்ப்பின் நோக்கமாகும். இந்த வழியில், சோதனையாளர் பின் மொழிபெயர்ப்பை "பார்த்து" இலக்கு மொழி தெரியாமலே இலக்கு மொழி மொழிபெயர்ப்பை சரிபார்க்கலாம். எனவே, பின்மொழிபெயர்ப்பின் மொழி பின்மொழிபெயர்ப்பை செய்பவர் (பின்மொழிபெயர்ப்பாளர்) மற்றும் சோதனையாளர் ஆகிய இருவரும் நன்கு புரிந்துக்கொள்ளும் மொழியாக இருக்க வேண்டும். பெரும்பாலும் இதன் பொருள், பின்மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழி உரையை மூல உரைக்கு பயன்படுத்தப்பட்ட அதே பரந்த தகவல்தொடர்பு மொழியில் மீண்டும் மொழிபெயர்க்க வேண்டும்.
வேதாகம உரை ஏற்கனவே மூல மொழியில் இருப்பதால் சிலர் இது தேவையற்றது என்று கருதலாம். ஆனால் பின்மொழிபெயர்ப்பின் நோக்கத்தை நினைவில் கொள்ளுங்கள்: இலக்கு மொழி மொழிபெயர்ப்பில் என்ன இருக்கிறது என்பதை சோதனையாளர் பார்க்க அனுமதிக்கிறது. அசல் மூல மொழி உரையை படித்தால், இலக்கு மொழி மொழிபெயர்ப்பில் என்ன இருக்கிறது என்பதை சோதனையாளர் பார்க்க அனுமதிக்காது. எனவே, பின்மொழிபெயர்ப்பாளர் ஒரு புதிய மொழிபெயர்ப்பை மீண்டும் பரந்த தகவல்தொடர்பு மொழியில் செய்ய வேண்டும், அது இலக்கு மொழி மொழிபெயர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த காரணத்திற்காக, பின்மொழிபெயர்ப்பாளர் தனது பின்மொழிபெயர்ப்பை செய்யும்போது மூல மொழி உரையை பார்க்க கூடாது, ஆனால் இலக்கு மொழி உரையை மட்டுமே பார்க்க வேண்டும். இந்த வழியில், சோதனையாளர் இலக்கு மொழி மொழிபெயர்ப்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவைகளை கண்டறிந்து, அந்த சிக்கல்களை சரிசெய்ய மொழிபெயர்ப்பாளருடன் பணியாற்றலாம்.
மொழிபெயர்ப்பை சரிபார்க்க சோதனையாளர் அதனை பயன்படுத்துவதற்கு முன்பே இலக்கு மொழி மொழிபெயர்ப்பை மேம்படுத்துவதற்கு பின்மொழிபெயர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மொழிபெயர்ப்புக்குழு பின் மொழிபெயர்ப்பை படிக்கும்போது, பின்மொழிபெயர்ப்பாளர் தங்கள் மொழிபெயர்ப்பை எவ்வாறு புரிந்துகொண்டார் என்பதை அவர்கள் காணலாம். சில நேரங்களில், மொழிபெயர்ப்பில் அவர்கள் தெரிவிக்க விரும்பிய நோக்கத்தை விட வேறு வழியில் பின்மொழிபெயர்ப்பாளர் புரிந்துக்கொண்டிருப்பார். அந்த சந்தர்ப்பங்களில், அவர்கள் மொழிபெயர்ப்பை மாற்ற முடியும், இதனால் அவர்கள் விரும்பிய நோக்கத்தின் பொருளை இது தெளிவாக தெரிவிக்கும். மொழிபெயர்ப்புக்குழு பின்மொழிபெயர்ப்பை சோதனையாளருக்கு வழங்குவதற்கு முன்பு இந்த வழியினை பயன்படுத்த முடிந்தால், அவர்கள் மொழிபெயர்ப்பில் பல மேம்பாடுகளை செய்யலாம். அவர்கள் இதை செய்யும்போது, சோதனையாளர் தனது பரிசோதனையை மிக விரைவாக செய்ய முடியும், ஏனென்றால் மொழிபெயர்ப்புக்குழு சோதனையாளரை சந்திப்பதற்கு முன்பு மொழிபெயர்ப்பில் உள்ள பல சிக்கல்கள் சரிசெய்யப்பட்டது.
நல்ல பின் மொழிபெயர்ப்பை செய்ய, அந்த நபருக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும்.
உள்ளூர் இலக்கு மொழியின் பிற பேச்சாளர்கள் மொழிபெயர்ப்பிலிருந்து புரிந்துக்கொள்ளும் பிற அர்த்தங்கள் என்ன என்பதை சோதனையாளர் அறிய விரும்புகிறார், இதன்மூலம் அவர் அந்த இடங்கள் சரியான பொருளை இன்னும் தெளிவாக தெரிவிப்பதற்கு மொழிபெயர்ப்புக்குழுவுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
பின்மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழியில் மொழிபெயர்ப்பை படிக்கும்போது அல்லது கேட்கும்போது, பின்மொழிபெயர்ப்பாளர் பரந்த தகவல்தொடர்பு மொழியில் மொழிபெயர்ப்பு சோதனையாளரிடம் பேசுவதே வாய்மொழி பின் மொழிபெயர்ப்பு ஆகும். இதை அவர் வழக்கமாக ஒரு நேரத்தில் ஒரு வாக்கியத்தையும் அல்லது அவை குறுகியதாக இருந்தால் இரண்டு வாக்கியங்களையும் செய்வார். மொழிபெயர்ப்பு சோதனையாளர் ஏதேனும் சிக்கலை கேட்கும்போது, வாய்மொழி பின் மொழிபெயர்ப்பை செய்யும் நபரை அவர் நிறுத்துவார், இதனால் அதைப்பற்றி அவர் கேள்வி கேட்க முடியும். மொழிபெயர்ப்பு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மொழிபெயர்ப்பு குழுவின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களும் இருக்க வேண்டும்.
வாய்மொழி பின்மொழிபெயர்ப்பின் ஒரு நன்மை என்னவென்றால், பின்மொழிபெயர்ப்பாளர் உடனடியாக மொழிபெயர்ப்பு சோதனையாளரை அணுகக்கூடியவர் மற்றும் பின் மொழிபெயர்ப்பை பற்றிய மொழிபெயர்ப்பு சோதனையாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். வாய்மொழி பின்மொழிபெயர்ப்பின் ஒரு குறைபாடு என்னவென்றால், மொழிபெயர்ப்பை மொழிபெயர்ப்பதற்கான சிறந்த வழியை பற்றி சிந்திக்க பின் மொழிபெயர்ப்பாளருக்கு மிக குறைந்த நேரமே உள்ளது, அதனால் அவர் மொழிபெயர்ப்பின் அர்த்தத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்த முடியாது. பின் மொழிபெயர்ப்பு சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டதை விட அவசியமாக மொழிபெயர்ப்பு சோதனையாளர் கூடுதல் கேள்விகளை கேட்டு இதனை சரிசெய்யலாம். மற்றொரு குறைபாடு என்னவென்றால், பின் மொழிபெயர்ப்பை மதிப்பிடுவதற்கு சோதனையாளருக்கும் மிக குறைவான நேரமே உள்ளது. ஒரு வாக்கியத்தை கேட்கும் முன் ஒரு வாக்கியத்தை பற்றி சிந்திக்க அவருக்கு சில வினாடிகள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக, ஒவ்வொரு வாக்கியத்தையும் பற்றி சிந்திக்க அதிக நேரம் இருந்தால் அவர் கண்டுப்பிடிக்க வேண்டிய பிரச்சினைகள் அனைத்தையும் அவர் கண்டுப்பிடிக்காமலும் போகலாம்.
எழுதப்பட்ட பின்மொழிபெயர்ப்புகளில் இரண்டு வகைகள் உள்ளன. இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளுக்கு, எழுதப்பட்ட பின்மொழிபெயர்ப்புகள் - பார்க்க. எழுதப்பட்ட பின்மொழிபெயர்ப்பு வாய்மொழி பின்மொழிபெயர்ப்பை விட பல நன்மைகளை கொண்டுள்ளது. முதலாவதாக, பின்மொழிபெயர்ப்பு எழுதப்படும்போது, பின்மொழிபெயர்ப்பாளர் தங்கள் மொழிபெயர்ப்பை தவறாகப் புரிந்து கொண்ட இடங்கள் ஏதேனும் இருக்கிறதா என மொழிபெயர்ப்புக்குழு அதை படிக்கலாம். பின்மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்பை தவறாக புரிந்து கொண்டால், பிற வாசகர்கள் அல்லது மொழிபெயர்ப்பை கேட்பவர்கள் நிச்சயமாக அதை தவறாக புரிந்துகொள்வார்கள், எனவே மொழிபெயர்ப்புக்குழு அந்த இடங்களில் தங்கள் மொழிபெயர்ப்பை திருத்த வேண்டும்.
இரண்டாவதாக, பின்மொழிபெயர்ப்பு எழுதப்படும்போது, மொழிபெயர்ப்பு சரிபார்ப்பவர் மொழிபெயர்ப்புக்குழுவுடன் சந்திப்பதற்கு முன் பின் மொழிபெயர்ப்பை படிக்கலாம் மற்றும் பின் மொழிபெயர்ப்பிலிருந்து எழும் எந்தவொரு கேள்வியையும் ஆராய்ச்சி செய்ய நேரம் எடுக்கலாம். மொழிபெயர்ப்பு சோதனையாளர் ஒரு சிக்கலை ஆராய்ச்சி செய்ய தேவையில்லை என்றாலும், எழுதப்பட்ட பின் மொழிபெயர்ப்பு அவருக்கு மொழிபெயர்ப்பை பற்றி சிந்திக்க அதிக நேரம் அனுமதிக்கிறது. அவர் மொழிபெயர்ப்பில் உள்ள பல சிக்கல்களை கண்டறிந்து உரையாற்ற முடியும், மேலும் சில சமயங்களில் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வுகளுடன் வர முடியும், ஏனென்றால் ஒவ்வொரு வாக்கியத்தையும் பற்றி சிந்திக்க சில வினாடிகள் மட்டுமே இருப்பதை விட ஒவ்வொன்றையும் பற்றி சிந்திக்க அவருக்கு அதிக நேரம் இருக்கிறது.
மூன்றாவதாக, பின்மொழிபெயர்ப்பு எழுதப்படும்போது, மொழிபெயர்ப்பு சோதனையாளர் மொழிபெயர்ப்புக்குழுவுடன் சந்திப்பதற்கு முன் தனது கேள்விகளை எழுத்து வடிவில் தயாரிக்கலாம். அவர்கள் சந்திப்பதற்கு முன் நேரம் இருந்தால், அவர்களை தொடர்புகொள்வதற்கு வழி இருந்தால், சோதனையாளர் தாம் எழுதிய கேள்விகளை மொழிபெயர்ப்புக்குழுவுக்கு அனுப்பலாம், இதனால் அவர்கள் அவற்றை படித்து, சோதனையாளர் சிக்கல்கள் என்று நினைத்த மொழிபெயர்ப்பின் பகுதிகளை மாற்றலாம். இது மொழிபெயர்ப்புக்குழுவும் சோதனையாளரும் ஒன்றாக சந்திக்கும் போது வேதாகம பொருள்களை மறுபரிசீலனை செய்ய உதவுகிறது, ஏனென்றால் மொழிபெயர்ப்பில் உள்ள பல சிக்கல்களை அவர்கள் சந்திப்பிற்கு முன்பே அவர்களால் சரிசெய்ய முடிந்தது. அவர்கள் சந்திப்பின்போது, எஞ்சியிருக்கும் பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்தலாம். இவைகள் வழக்கமாக சோதனையாளரின் கேள்வியை மொழிபெயர்ப்புக்குழு புரிந்து கொள்ளாத இடங்களாகவோ அல்லது இலக்கு மொழியை பற்றி புரியாமல் சிக்கல் இல்லாத இடத்தில் சிக்கல் இருப்பதாக சோதனையாளர் நினைக்கிறதாகவோ இருக்கலாம். அந்த நிலையில், சந்திப்பு நேரத்தில் மொழிபெயர்ப்புக்குழு சோதனையாளருக்கு அவர் புரிந்து கொள்ளாதது என்ன என்பதை விளக்க முடியும்.
சந்திப்பிற்கு முன் தனது கேள்விகளை மொழிபெயர்ப்புக்குழுவுக்கு அனுப்புவதற்கு சோதனையாளருக்கு நேரமில்லை என்றாலும், அவர்கள் கூட்டத்தில் மறுஆய்வு செய்ய முடிந்ததை விட கூட்டத்தில் இன்னும் அதிகமான விஷயங்களை மறுபரிசீலனை செய்ய முடியும், ஏனெனில் சோதனையாளர் ஏற்கனவே பின்மொழிபெயர்ப்பை படித்து அவரது கேள்விகளை தயார் செய்துள்ளார். இந்த முந்தைய தயாரிப்பு நேரத்தை அவர் பெற்றிருப்பதால், வாய்மொழி பின்மொழிபெயர்ப்பு செய்யும்போது அவசியப்படுவதைப் போல, அவரும் மொழிபெயர்ப்புக்குழுவும் தங்கள் சந்திப்பு நேரத்தை மொழிபெயர்ப்பின் சிக்கலான பகுதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி முழு மொழிபெயர்ப்பையும் மெதுவாக படிப்பதை விட விவாதிக்க முடியும்.
நான்காவதாக, எழுதப்பட்ட பின்மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு சோதனையாளரின் அழுத்தத்தை அவருடன் பேசப்பட்ட வாய்மொழி மொழிபெயர்ப்பை கேட்பதில் மற்றும் புரிந்துகொள்வதிலிருந்து ஒரே நேரத்தில் பல மணிநேரம் கவனம் செலுத்த வேண்டியதிலிருந்து விடுவிக்கிறது. மொழிபெயர்ப்புக்குழுவும் சோதனையாளரும் இரைச்சல்மிக்க சூழலில் சந்தித்தால், அவர் ஒவ்வொரு வார்த்தையையும் சரியாக கேட்கிறாரா என்பதை உறுதிசெய்வதில் சோதனையாளருக்கு சிரமம் ஏற்படுவதுடன் மிக சோர்வாகவும் இருக்கும். ஒருமுகப்படுத்துவதின் மன அழுத்தம், சோதனையாளருக்கு சில சிக்கல்களை தவறவிடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, இதனால் வேதாகம உரை சரிபார்க்கப்படாமலே இருக்கும். இந்த காரணங்களுக்காக, எப்பொழுதெல்லாம் சாத்தியப்படுகிறதோ எழுதப்பட்ட பின்மொழிபெயர்ப்பை பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
எழுதப்பட்ட பின் மொழிபெயர்ப்புகளில் இரண்டு வகைகள் உள்ளன.
பின் மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழி மொழிபெயர்ப்பின் வார்த்தையின் அடியில் ஒவ்வொரு வார்த்தையை வைப்பதே இடைவரி பின் மொழிபெயர்ப்பு ஆகும். இது பரந்த தொடர்புடைய மொழியின் வரியைத் தொடர்ந்து வரும் இலக்கு மொழி மொழிபெயர்ப்பு உரையின் விளைவாக வருகிறது. இந்த வகையான பின் மொழிபெயர்ப்பின் நன்மை என்னவென்றால், இலக்கு மொழியின் ஒவ்வொரு வார்த்தையையும் மொழிபெயர்ப்புக்குழு எவ்வாறு மொழிபெயர்க்கிறது என்பதை சோதனையாளரால் எளிதாக காண முடியும். ஒவ்வொரு இலக்கு மொழி வார்த்தையின் பொருளின் தொலைவெல்லையை மிக எளிதாக கண்டு அதனை வெவ்வேறு சூழல்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் ஒப்பிடலாம். பரந்த தொடர்பு மொழியிலுள்ள உரையின் வரி தனிப்பட்ட சொற்களின் மொழிபெயர்ப்புகளால் செய்யப்பட்டது என்பதே இந்த வகையான பின் மொழிபெயர்ப்பின் பாதகமாகும். இது உரையை படிக்கவும் புரிந்துகொள்ளவும் கடினமாக்குகிறது, மேலும் பின் மொழிபெயர்ப்பின் மற்ற முறையை விட மொழிபெயர்ப்பு சோதனையாளரின் மனதில் அதிக கேள்விகளையும் தவறான புரிதல்களையும் உருவாக்கக்கூடும். வேதாகம மொழிபெயர்ப்பில் சொல்-உடன்-சொல் முறையை நாங்கள் பரிந்துரைக்காத காரணமும் இதுதான்!
பின் மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழி மொழிபெயர்ப்பிலிருந்து தனி இடத்தில் பரந்த தொடர்பு மொழியின் மொழிபெயர்ப்பை உருவாக்குவதே புறச்சார்பற்ற பின் மொழிபெயர்ப்பு ஆகும். பின் மொழிபெயர்ப்பு இலக்கு மொழி மொழிபெயர்ப்புடன் நெருக்கமான தொடர்புடையதல்ல என்பதே இந்த வகையின் பாதகமாகும். இந்த குறைபாட்டை சமாளிக்க வேதாகமத்தை பின்பாக மொழிபெயர்க்கும்போது பின் மொழிபெயர்ப்பாளர் உதவலாம், இருப்பினும், வசன எண்களையும், நிறுத்தற்குறியையும் பின் மொழிபெயர்ப்புடன் சேர்ப்பதன் மூலம். இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் வசன எண்களைக் குறிப்பிடுவதன் மூலமும், அவற்றின் சரியான இடங்களில் நிறுத்தற்குறிகளை கவனமாக மீட்டுருவாக்குவதின் மூலமும், மொழிபெயர்ப்பு சோதனையாளர் பின் மொழிபெயர்ப்பின் எந்த பகுதி இலக்கு மொழி மொழிபெயர்ப்பின் எந்த பகுதியை குறிக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். இந்த முறையின் நன்மை என்னவென்றால், பின் மொழிபெயர்ப்பு பரந்த தகவல்தொடர்பு மொழியின் இலக்கணம் மற்றும் சொல் வரிசையை பயன்படுத்தலாம், எனவே மொழிபெயர்ப்பு சோதனையாளர் படித்து புரிந்துகொள்வது மிகவும் எளிதானது. எவ்வாறாயினும், பரந்த தொடர்பு மொழியின் இலக்கணம் மற்றும் சொல் வரிசையை பயன்படுத்தும்போது கூட, பின் மொழிபெயர்ப்பாளர் சொற்களை எழுத்தியல்பான வகையில் மொழிபெயர்க்க நினைவில் கொள்ள வேண்டும். இது சோதனையாளருக்கு எழுத்தியல்தன்மை மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவற்றின் மிகவும் பயனுள்ள கலவையை வழங்குகிறது. பின் மொழிபெயர்ப்பாளர் புறச்சார்பற்ற பின் மொழிபெயர்ப்பாகிய இந்த முறையை பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
இந்த தொகுதியின் நோக்கங்களுக்காக, "இலக்கு மொழி" என்பது வேதாகம வரைவு தயாரிக்கப்பட்ட மொழியைக் குறிக்கிறது, மேலும் "பரந்த தகவல்தொடர்பு மொழி" என்பது பின் மொழிபெயர்ப்பு செய்யப்படும் மொழியைக் குறிக்கிறது.
ஒரு வார்த்தைக்கு ஒரே ஒரு அடிப்படை அர்த்தம் இருந்தால், பின் மொழிபெயர்ப்பாளர் பரந்த மொழிபெயர்ப்பின் மொழியில் வார்த்தையை பயன்படுத்த வேண்டும், அந்த பின் மொழிபெயர்ப்பு முழுவதும் அந்த அடிப்படை பொருளைக் குறிக்கும். எவ்வாறாயினும், இலக்கு மொழியில் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டிருந்தால், அது உள்ளே இருக்கும் சூழலைப் பொறுத்து பொருள் மாறுகிறது, அப்போது அந்த சூழலில் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட விதத்தை குறிக்கும் சிறந்த தகவல்தொடர்பு மொழியில் சொல் அல்லது சொற்றொடரைப் பின் மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு சோதனையாளரின் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, இந்த வார்த்தையை முதல்முறையாக வேறொரு விதத்தில் பின் மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தும்போது பிற அர்த்தத்தை அடைப்புக்குறிக்குள் வைக்கலாம், இதன் மூலம் மொழிபெயர்ப்பு சோதனையாளர் இந்த வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் கொண்டிருப்பதைக் கண்டு புரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இலக்கு மொழியின் சொல் முந்தைய மொழிபெயர்ப்பில் “செல்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் “வா (போ)” என்று அவர் எழுதலாம், ஆனால் புதிய சூழலில் இது “வா” என்று சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இலக்கு மொழி மொழிபெயர்ப்பு ஒரு தனிமரபைப் பயன்படுத்தினால், அந்த தனிமரபை எழுத்தியல்பாக (சொற்களின் அர்த்தத்திற்கு ஏற்ப) பின் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்தால் மொழிபெயர்ப்பு சோதனையாளருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும், ஆனால் அடைப்புக்குறிக்குள் உள்ள தனிமரபின் பொருளையும் உள்ளடக்கியது. அந்த வகையில், இலக்கு மொழி மொழிபெயர்ப்பு அந்த இடத்தில் ஒரு தனிமரபைப் பயன்படுத்துகிறது என்பதையும், அதன் அர்த்தம் என்ன என்பதையும் மொழிபெயர்ப்பாளர் சரிபார்க்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பின் மொழிபெயர்ப்பாளர், “அவர் வாளியை உதைத்தார் (அவர் இறந்தார்)” போன்ற ஒரு தனிமரபை மொழிபெயர்க்கலாம். அந்த தனிமரபு ஒன்றுக்கு மேற்பட்ட முறை அல்லது இரண்டு முறை ஏற்பட்டால், பின் மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு முறையும் அதை தொடர்ந்து விளக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதை மொழிபெயர்க்கலாம் அல்லது அதன் அர்த்தத்தை மொழிபெயர்க்கலாம்.
பின் மொழிபெயர்ப்பில், இலக்கு மொழி சொற்களின் வகைகளை அதே பரந்த தகவல்தொடர்பு மொழி சொற்களின் வகைகளுடன் பின் மொழிபெயர்ப்பாளர் குறிக்க வேண்டும். இதன் பொருள் பெயர்ச்சொற்களை பெயர்ச்சொற்களுடனும், வினைச்சொற்களை வினைச்சொற்களுடனும், மாற்றியமைப்பிகளை மாற்றியமைப்பிகளுடனும் பின் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்க வேண்டும். இலக்கு மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க இது மொழிபெயர்ப்பு சரிபார்ப்புக்கு உதவும்.
பின் மொழிபெயர்ப்பில், இலக்கு மொழியின் ஒவ்வொரு உட்கூறு வகைகளையும் பரந்த தகவல்தொடர்பு மொழியில் ஒரே வகை உட்பிரிவுகளை பின் மொழிபெயர்ப்பாளர் குறிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இலக்கு மொழி பிரிவு ஒரு கட்டளையைப் பயன்படுத்தினால், பின் மொழிபெயர்ப்பு ஒரு பரிந்துரை அல்லது கோரிக்கையை விட ஒரு கட்டளையைப் பயன்படுத்த வேண்டும். அல்லது இலக்கு மொழி உட்கூறு ஒரு சொல்லாட்சிக் கேள்வியைப் பயன்படுத்தினால், பின் மொழிபெயர்ப்பு ஒரு அறிக்கை அல்லது பிற வெளிப்பாட்டைக் காட்டிலும் ஒரு கேள்வியைப் பயன்படுத்த வேண்டும்.
இலக்கு மொழிபெயர்ப்பில் இருப்பதைப் போலவே பின் மொழிபெயர்ப்பாளரும் பின் மொழிபெயர்ப்பில் அதே நிறுத்தற்குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, இலக்கு மொழி மொழிபெயர்ப்பில் காற்புள்ளி எங்கிருந்தாலும், பின் மொழிபெயர்ப்பாளர் பின் மொழிபெயர்ப்பில் காற்புள்ளி வைக்க வேண்டும். இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் காலங்கள், ஆச்சரியக்குறி புள்ளிகள், மேற்கோள் குறிகள் மற்றும் அனைத்து நிறுத்தற்குறியீடுகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அந்த வகையில், பின் மொழிபெயர்ப்பின் பகுதிகள் இலக்கு மொழி மொழிபெயர்ப்பின் எந்த பகுதிகளைக் குறிக்கின்றன என்பதை மொழிபெயர்ப்பு சோதனையாளர் மிக எளிதாகக் காணலாம். வேதாகமத்தின் பின் மொழிபெயர்ப்பை உருவாக்கும் போது, அனைத்து அத்தியாயம் மற்றும் வசன எண்களும் பின் மொழிபெயர்ப்பில் சரியான இடங்களில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும் மிக முக்கியம்.
சில நேரங்களில் இலக்கு மொழியில் உள்ள சொற்கள் பரந்த தகவல்தொடர்பு மொழியில் உள்ள சொற்களை விட சிக்கலானதாக இருக்கும். இந்த வழக்கில், பின்புற மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழி வார்த்தையை பரந்த தகவல்தொடர்பு மொழியில் நீண்ட சொற்றொடருடன் குறிக்க வேண்டும். மொழிபெயர்ப்பு சோதனையாளர் முடிந்தவரை பொருளைக் காண இது அவசியம். எடுத்துக்காட்டாக, இலக்கு மொழியில் ஒரு வார்த்தையை மொழிபெயர்க்க, “மேலே செல்லுங்கள்” அல்லது “படுத்துக் கொள்ளுங்கள்” போன்ற பரந்த தகவல்தொடர்பு மொழியில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவது அவசியமாக இருக்கலாம். மேலும், பல மொழிகளில் பரந்த தகவல்தொடர்பு மொழியில் சமமான சொற்களைக் காட்டிலும் அதிகமான தகவல்களைக் கொண்ட சொற்கள் உள்ளன. இந்த விஷயத்தில், "நாங்கள் (உள்ளடக்கியது)" அல்லது "நீங்கள் (பெண்பால், பன்மை) போன்ற அடைப்புக்குறிக்குள் கூடுதல் தகவல்களை பின் மொழிபெயர்ப்பாளர் உள்ளடக்கியிருந்தால் அது மிகவும் உதவியாக இருக்கும்.
பின் மொழிபெயர்ப்பு பரந்த தகவல்தொடர்பு மொழிக்கு இலக்கு மொழியில் பயன்படுத்தப்படும் அமைப்பை அல்ல, இயல்பான வாக்கிய அமைப்பை பயன்படுத்த வேண்டும். இதன் பொருள், பின் மொழிபெயர்ப்பானது பரந்த தகவல்தொடர்பு மொழிக்கு இலக்கு மொழியில் பயன்படுத்தப்படும் சொல் வரிசை அல்ல, இயல்பான சொல் வரிசையைப் பயன்படுத்த வேண்டும். பின் மொழிபெயர்ப்பு ஒன்றுக்கொன்று சொற்றொடர்களை தொடர்புபடுத்தும் வழியையும் மற்றும் பரந்த தகவல்தொடர்பு மொழிக்கு இயல்பான காரணம் அல்லது நோக்கம் போன்ற தருக்க உறவுகளைக் குறிக்கும் வழிகளாகவும் பயன்படுத்த வேண்டும். இது பின் மொழிபெயர்ப்பை மொழிபெயர்ப்பு சோதனையாளர் எளிதாக படிக்கவும் புரிந்துகொள்ளவும் செய்யும். இது பின் மொழிபெயர்ப்பை சரிபார்க்கும் செயல்முறையையும் துரிதப்படுத்தும்.
வேதாகமத்தின் புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு முன்பும், பின்பும், பின்னும் நீங்கள் செய்யக்கூடிய சோதனைகள் உள்ளன, அவை மொழிபெயர்ப்பை மிகவும் எளிதாகவும், அழகாகவும், முடிந்தவரை எளிதாக படிக்கவும் உதவும். இந்த தலைப்புகளில் உள்ள தொகுதிகள் வடிவமைப்பு மற்றும் பதிப்பகத்தின் கீழ் இங்கு சேகரிக்கப்படுகின்றன, ஆனால் அவை மொழிபெயர்ப்பு குழுதான் அதன் மொழிபெயர்ப்பு செயல்முறை முழுவதும் சிந்தித்து தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள்.
நீங்கள் மொழிபெயர்க்க தொடங்குவதற்கு முன் பின்வரும் சிக்கல்களைப் பற்றி மொழிபெயர்ப்புக்குழு முடிவுகளை எடுக்க வேண்டும்.
நீங்கள் பல அத்தியாயங்களை மொழிபெயர்த்த பிறகு, மொழிபெயர்ப்பின் போது மொழிபெயர்ப்புக்குழு கண்டறிந்த சிக்கல்களை கவனித்துக்கொள்வதற்கு இந்த முடிவுகளில் சிலவற்றை திருத்த வேண்டியிருக்கலாம். கூடுதல் உரைநடை உங்களுக்கு கிடைத்தால், எழுத்துப்பிழை மற்றும் நிறுத்தற்குறி குறித்து நீங்கள் எடுக்க வேண்டிய கூடுதல் முடிவுகள் உள்ளதா என்பதை பார்க்க இந்த நேரத்தில் நீங்கள் கூடுதல் உரைநடையில் சீரான சோதனைகளையும் செய்யலாம்.
ஒரு புத்தகத்தை முடித்த பிறகு, எல்லா வசனங்களும் உள்ளனவா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம், மேலும் பிரிவு தலைப்புகளை நீங்கள் தீர்மானிக்கலாம். நீங்கள் மொழிபெயர்க்கும்போது பிரிவு தலைப்புகளுக்கான யோசனைகளை எழுதுவதும் உதவியாக இருக்கும்.
நீங்கள் மொழிபெயர்ப்பை படிக்கும்போது, சொற்களை உச்சரிக்கும் விதம் குறித்து இந்த கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். மொழியின் ஒலிகளைக் குறிக்க பொருத்தமான எழுத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும், மொழிபெயர்ப்பு எளிதாகப் படிக்கக்கூடிய வகையில் சொற்கள் சீரான முறையில் எழுதப்பட்டுள்ளதா என்பதையும் தீர்மானிக்க இந்த கேள்விகள் உதவும்.
சரியாக இல்லாத எழுத்துக்கள் அல்லது எழுத்துக்கோர்வை பற்றி ஏதேனும் இருந்தால், அதைப் பற்றி ஒரு குறிப்பை உருவாக்கவும், அதனால் நீங்கள் மொழிபெயர்ப்புக்குழுவுடன் விவாதிக்க முடியும்.
மொழிபெயர்ப்பை வாசகர் எளிதாக படித்து புரிந்துக்கொள்ளும் பொருட்டு, நீங்கள் சொற்களை நிலையாக எழுத்தாக்கம் செய்வது முக்கியம். இலக்கு மொழியில் எழுத்து அல்லது எழுத்தாக்கம் செய்யும் மரபு இல்லையென்றால் இது கடினமாக இருக்கும். ஒரு மொழிபெயர்ப்பின் வெவ்வேறு பகுதிகளில் பலர் பணிபுரியும் போது, அவர்கள் ஒரே வார்த்தைகளை ஒருவருக்கொருவர் வித்தியாசமாக எழுத்தாக்கம் செய்யலாம். அந்த காரணத்திற்காக, மொழிபெயர்ப்புக்குழு அவர்கள் சொற்களை எவ்வாறு எழுத்தாக்கம் செய்ய திட்டமிடுகிறார்கள் என்பதை பற்றி பேசுவதற்கு மொழிபெயர்ப்பை தொடங்குவதற்கு முன்பு ஒன்றாக சந்திப்பது முக்கியம்.
ஒரு குழுவாக, எழுத்தாக்கம் செய்ய கடினமாக இருக்கும் சொற்களை பற்றி விவாதியுங்கள். சொற்களை குறிக்க கடினமாக இருக்கும் ஒலிகள் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் எழுத்து முறையில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம் (பார்க்க எழுத்துet/Orthography). சொற்களில் உள்ள ஒலிகளை வெவ்வேறு வழிகளில் குறிப்பிட முடிந்தால், அவற்றை எவ்வாறு எழுத்தாக்கம் செய்வதில் குழு உடன்பட வேண்டும். இந்த சொற்களின் ஒப்புக்-கொள்ளப்பட்ட எழுத்தாக்க பட்டியலை அகர வரிசைப்படி உருவாக்குங்கள். மொழிபெயர்க்கும்போது அவர்கள் கலந்தாய்வு செய்யத்தக்கதாக குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த பட்டியலின் நகலை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் கடினமான பிற சொற்களை கடந்து வரும்போது அவைகளை உங்கள் எழுத்தாக்க பட்டியலில் சேர்த்துக்கொண்டு, குழுவின் பிற உறுப்பினர்களின் எழுத்தாக்க பட்டியலிலும் ஒரே போல் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் எழுத்தாக்க பட்டியலை பராமரிக்க ஒரு விரிதாளை பயன்படுத்துவது உதவியாக இருக்கும். இதை எளிதாக புதுப்பித்து மின்னணு முறையில் பகிரலாம் அல்லது அவ்வப்போது அச்சிடலாம்.
வேதாத்தில் உள்ள நபர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை எழுத்தாக்கம் செய்வது கடினம், ஏனெனில் அவைகளில் பல இலக்குமொழிகளில் தெரியவதில்லை. இவற்றை உங்கள் எழுத்தாக்க பட்டியலில் சேர்க்க மறக்காதீர்கள்.
எழுத்தாக்கத்தை சரிபார்க்க கணினிகள் சிறந்த உதவியாக இருக்கும். நீங்கள் ஒரு நுழைவாயில் மொழியில் பணிபுரிகிறீர்கள் என்றால், ஒரு சொல் செயலாக்கியில் ஏற்கனவே ஒரு அகராதி இருக்கலாம். நீங்கள் பிற மொழியில் மொழிபெயர்க்கிறீர்கள் என்றால், எழுத்தாக்கப்பிழை சொற்களை சரிசெய்ய செயலாக்கியில் கண்டுபிடி-மற்றும்-மாற்று என்கிற அம்சத்தை பயன்படுத்தலாம். பத்திஉரையும் (ParaTExt) ஒரு எழுத்தாக்க சரிபார்ப்பு அம்சத்தை கொண்டுள்ளது, இது சொற்களின் அனைத்து மாறுபட்ட எழுத்தாக்கங்களையும் கண்டுபிடிக்கும். இது இவைகளை உங்களுக்கு வழங்கும், பின்னர் நீங்கள் எந்த எழுத்தாக்கங்களை பயன்படுத்த முடிவு செய்தீர்கள் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
“நிறுத்தற்குறி” என்பது ஒரு வாக்கியத்தை எவ்வாறு படிக்க வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கும் குறியிடுகளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டுகளில் காற்புள்ளி அல்லது முற்றுப்புள்ளி போன்ற இடைநிறுத்தங்களின் குறிக்காட்டிகள் மற்றும் பேச்சாளரின் சரியான சொற்களை சுற்றியுள்ள மேற்கோள்குறிகள் ஆகியவை அடங்கும். மொழிபெயர்ப்பை வாசகர் சரியாக படித்து புரிந்துக்கொள்ளும் பொருட்டு, நீங்கள் நிறுத்தற்குறியை தொடர்ந்து பயன்படுத்துவது முக்கியம்.
மொழிபெயர்ப்பதற்கு முன், மொழிபெயர்ப்பில் நீங்கள் பயன்படுத்தும் நிறுத்தற்குறி முறைகளை மொழிபெயர்ப்புக்குழு தீர்மானிக்க வேண்டும். ஒரு தேசிய மொழி அல்லது தேசிய வேதாகம மொழி அல்லது தேசிய மொழி அல்லது அதற்கு தொடர்புடைய மொழி பயன்படுத்தும் நிறுத்தற்குறி முறையை பின்பற்றுவது எளிதானது. குழு ஒரு முறையை பின்பற்ற முடிவு செய்தவுடன், எல்லோரும் அதை பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெவ்வேறு நிறுத்தற்குறிகளை பயன்படுத்துவதற்கான சரியான வழியினை எடுத்துக்காட்டுகளுடன் ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் வழிகாட்டி தாளை விநியோகிப்பது உதவியாக இருக்கும்.
மொழிபெயர்ப்பாளர்கள் வழிகாட்டித்தாள் வைத்திருந்தாலும், நிறுத்தற்குறியில் தவறு செய்வது பொதுவானது. இதன் காரணமாக, ஒரு புத்தகம் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு, அதை பத்திஉரையில் (ParaTExt) இறக்குமதி செய்ய பரிந்துரைக்கிறோம். இலக்கு மொழியில் நிறுத்தற்குறிக்கான விதிகளை நீங்கள் பத்திஉரையில் (ParaTExt) உள்ளிடலாம், பின்னர் அது கொண்டிருக்கும் வெவ்வேறு நிறுத்தற்குறி சோதனைகளை இயக்கவும். பத்திஉரை (ParaTExt) நிறுத்தற்குறி பிழைகளை கண்டறிந்த எல்லா இடங்களையும் பட்டியலிட்டு அவற்றை உங்களுக்குக் காண்பிக்கும். நீங்கள் இந்த இடங்களை மதிப்பாய்வு செய்து அங்கு பிழை இருக்கிறதா இல்லையா என பார்க்கலாம். பிழை இருந்தால், நீங்கள் பிழையை சரிசெய்யலாம். இந்த நிறுத்தற்குறி சோதனைகளை இயக்கிய பிறகு, உங்கள் மொழிபெயர்ப்பு நிறுத்தற்குறியை சரியாக பயன்படுத்துகிறது என்று நீங்கள் நம்பலாம்.
மொழிபெயர்ப்பு முழுமையானதா என்பதை உறுதிப்படுத்துவதே இந்த பிரிவின் நோக்கமாகும். இந்த பிரிவில், புதிய மொழிபெயர்ப்பை மூல மொழிபெயர்ப்புடன் ஒப்பிட வேண்டும். இரண்டு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிடுகையில், இந்த கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:
மொழிபெயர்ப்பு நிறைவடையாத இடம் இருந்தால், அதைப் பற்றி ஒரு குறிப்பை உருவாக்கவும், இதன்மூலம் அதை மொழிபெயர்ப்புகுழுவுடன் விவாதிக்கலாம்.
உங்கள் இலக்கு மொழி மொழிபெயர்ப்பில் மூல மொழி வேதாகமத்தின் அனைத்து வசனங்களும் உள்ளடங்குவது முக்கியம். சில வசனங்கள் தவறுதலாக காணப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் சில வேதாகமங்களில் மற்ற வேதாகமங்களில் இல்லாத சில வசனங்கள் இருப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காணாமல் போன வசனங்களுக்கான உங்கள் மொழிபெயர்ப்பை சரிபார்க்க, ஒரு புத்தகம் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு, மொழிபெயர்ப்பை பத்திஉரையாக (ParaTExt) இறக்குமதி செய்யுங்கள். பின்பு "அத்தியாயம் /வசனம் எண்களுக்கான" சோதனையை இயக்கவும். புத்தகத்தில் காணாமல் போன எல்லா வசனங்களின் பட்டியலையும், பத்திஉரை (paraTExt) உங்களுக்கு கொடுக்கும். மேலே உள்ள மூன்று காரணங்களில் ஒன்றின் காரணமாக அந்த வசனம் நோக்கத்துடன் காணாமல் போனதா, அல்லது அது தவறுதலாக காணாமல் போனதா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம், நீங்கள் திரும்பி சென்று அந்த வசனத்தை மொழிபெயர்க்க வேண்டும்.
மொழிபெயர்ப்புக்குழு எடுக்க வேண்டிய முடிவுகளில் ஒன்று பிரிவு தலைப்புகளை பயன்படுத்த வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதுதான். பிரிவு தலைப்புகள் ஒரு புதிய தலைப்பைத் தொடங்கும் வேதாகமத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்புகள் போன்றவை. பிரிவு தலைப்பு அந்த பகுதி என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறது. சில வேதாகம மொழிபெயர்ப்புகள் அவற்றைப் பயன்படுத்துகின்றன, மற்றவை பயன்படுத்துவதில்லை. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் தேசிய மொழியில் வேதாகமத்தின் நடைமுறையை நீங்கள் பின்பற்ற விரும்பலாம். மொழி சமூகம் எதை விரும்புகிறது என்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க விரும்புவீர்கள்.
பிரிவு தலைப்புகளைப் பயன்படுத்துவதற்கு அதிக வேலை தேவைப்படுகிறது, ஏனென்றால் நீங்கள் வேதாகமத்தின் உரைக்கு கூடுதலாக ஒவ்வொன்றையும் எழுத வேண்டும் அல்லது மொழிபெயர்க்க வேண்டும். இது உங்கள் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பையும் நீண்டதாக மாற்றும். ஆனால் பிரிவு தலைப்புகள் உங்கள் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பிரிவு தலைப்புகள் வெவ்வேறு விஷயங்களைப் பற்றி வேதாகமம் எங்கு பேசுகிறது என கண்டுபிடிப்பை எளிதாக்குகிறது. ஒரு நபர் குறிப்பாக எதையாவது தேடுகிறாரென்றால், அவர் படிக்க விரும்பும் தலைப்பை அறிமுகப்படுத்தும் ஒன்றை கண்டுபிடிக்கும் வரை அவர் பிரிவு தலைப்புகளை படிக்க முடியும். பின்னர் அவர் அந்த பகுதியை படிக்கலாம்.
பிரிவு தலைப்புகளை பயன்படுத்த முடிவு செய்திருந்தால், எந்த வகையை பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். மீண்டும், மொழி சமூகம் எந்த வகையான தலைப்பை விரும்புகிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க விரும்புவீர்கள், மேலும் தேசிய மொழியின் பாணியைப் பின்பற்றவும் நீங்கள் தேர்வு செய்யலாம். அது அறிமுகப்படுத்தும் உரையின் ஒரு பகுதி அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் ஒரு வகையான பிரிவு தலைப்பைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிரிவு தலைப்பு வேதத்தின் ஒரு பகுதி அல்ல; இது வேதத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு ஒரு வழிகாட்டியாகும். பிரிவு தலைப்புக்கு முன்னும் பின்னும் ஒரு இடத்தை வைத்து, வேறு எழுத்துரு (எழுத்துக்களின் பாணி) அல்லது வேறு அளவு எழுத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை நீங்கள் தெளிவுபடுத்த முடியும். தேசிய மொழியில் வேதாகமம் இதை எவ்வாறு செய்கிறது என்பதை பாருங்கள், மேலும் மொழி சமூகத்தின் வெவ்வேறு முறைகளை பரிசோதிக்கவும்.
பல வகையான பிரிவு தலைப்புகள் உள்ளன. ஒவ்வொருவரும் மாற்கு 2:1-12 -யை எவ்வாறு தேடுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுகளுடன் இங்கே சில வித்தியாசமான வகைகள் உள்ளன:
நீங்கள் பார்ப்பதைப் போன்று, பல வகையான பிரிவு தலைப்புகளை உருவாக்க முடியும், ஆனால் அவை அனைத்திற்கும் ஒரே நோக்கம் உள்ளது. அவை அனைத்தும் வேதாகமத்தின் முக்கிய தலைப்பைப் பற்றிய தகவல்களை வாசகருக்குத் தருகின்றன. சில குறுகியவை, சில நீளமானவை. சிலர் சிறிய தகவலை மட்டுமே தருகிறார்கள், சிலர் அதிக தகவல்களைத் தருகிறார்கள். நீங்கள் வெவ்வேறு வகைகளை பரிசோதிக்க விரும்பலாம், மேலும் எந்த வகை மிகவும் உதவியாக இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை மக்களிடம் கேளுங்கள்.
இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ள செயல்முறை மற்றும் சரிபார்ப்பு கட்டமைப்பானது உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் திருச்சபையால் நிர்ணயிக்கப்பட்டபடி, உள்ளடக்கத்தை சரிபார்த்து திருத்தும் ஒரு தொடர்ச்சியான செயல்முறையைப் பொறுத்தது. உள்ளடக்கத்தின் அதிக எண்ணிக்கையிலான பயனர்களிடமிருந்து உள்ளீட்டை அதிகரிக்கும் நோக்கில் பின்னூட்ட சுழல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன (மற்றும் செய்தக்கதாய், மொழிபெயர்ப்பு மென்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளன). அந்த காரணத்திற்காக, உள்ளடக்கத்தின் மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்ப்பு மேடையில் தொடர்ந்து கிடைக்கின்றன (http://door43.org பார்க்க) காலவரையின்றி பயனர்கள் அதை தொடர்ந்து மேம்படுத்த முடியும். இந்த வழியில், காலப்போக்கில் தரத்தை அதிகரிக்கும் வேதாகம உள்ளடக்கத்தை உருவாக்க திருச்சபை ஒன்றிணைந்து செயல்பட முடியும்.
ஒரு மொழிபெயர்ப்பின் தரத்தை திருச்சபை நம்பத்தகுந்த வகையில் தீர்மானிக்கக்கூடிய ஒரு செயல்முறையை விவரிப்பதே இந்த பிரிவின் குறிக்கோளாகும்.இந்த பின்வரும் மதிப்பீடு, ஒவ்வொரு கருதத்தக்க சோதனையும் விவரிப்பதை விட, ஒரு மொழிபெயர்ப்பை சரிபார்க்க மிக முக்கியமான சில நுட்பங்களை பரிந்துரைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இறுதியாக, என்ன சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன, எப்போது, யாரால் என்பதை முடிவு செய்யப்பட வேண்டியது திருச்சபை ஆகும்.
இந்த மதிப்பீட்டு முறை இரண்டு வகையான அறிக்கைகளை பயன்படுத்துகிறது. சில “ஆம்/இல்லை” அறிக்கைகள், எதிர்மறையான பதில் தீர்க்கப்பட வேண்டிய சிக்கலை குறிக்கிறது. பிற பிரிவுகள் சரிசம-நிலையுடைய முறையை பயன்படுத்துகின்றன, இது மொழிபெயர்ப்பு குழுக்கள் மற்றும் சோதனையாளர்களுக்கு மொழிபெயர்ப்பை பற்றிய அறிக்கைகளை வழங்குகிறது. ஒவ்வொரு அறிக்கையையும் 0-2 என்ற அளவில் சோதனை செய்யும் நபர் (மொழிபெயர்ப்புக்குழுவுடன் தொடங்கி) பெற்றிருக்க வேண்டும்:
0 - உடன்படவில்லை
1 - ஓரளவு ஒப்புக்கொள்கிறேன்
2 - கடுமையாக ஒப்புக்கொள்கிறேன்
மதிப்பாய்வின் முடிவில், ஒரு பிரிவில் உள்ள அனைத்து பதில்களின் மொத்த மதிப்பும் கூட்டப்பட வேண்டும், மேலும் பதில்கள் மொழிபெயர்ப்பின் நிலையை துல்லியமாக பிரதிபலித்தால், மொழிபெயர்க்கப்பட்ட அத்தியாயம் சிறந்த தரம் வாய்ந்தது என்பதற்கான நிகழ்தகவின் தோராயத்தில் இந்த மதிப்பு மதிப்பாய்வாளருக்கு வழங்கும். தலைப்பு எளிமையாக வடிவமைக்கப்பட்டு, பணிக்கு முன்னேற்றம் எங்கு தேவைப்படுகிறது என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு புறநிலை முறை மதிப்பாய்வாளருக்கு வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, மொழிபெயர்ப்பு “துல்லிய” ஒப்பீட்டளவில் நன்றாக இருந்தாலும், “இயல்புத்தன்மை” மற்றும் “தெளிவு” ஆகியவற்றில் மிக மோசமாக இருந்தால், மொழிபெயர்ப்புக்குழு அதிக சமூக சோதனை செய்ய வேண்டும்.
மொழிபெயர்க்கப்பட்ட வேதாகம உள்ளடக்கத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இந்த தலைப்பு பயன்படுத்தப்படுகிறது. மொழிபெயர்ப்புக்குழு மற்ற சோதனைளை முடித்தபின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும், பின்னர் 2-ம் நிலை திருச்சபை சோதனையாளர்கள் அதை மீண்டும் செய்ய வேண்டும், பின்னர் 3-ம் நிலை சோதனையாளர்களும் இந்த சரிபார்ப்பு பட்டியலுடன் மொழிபெயர்ப்பை மதிப்பீடு செய்ய வேண்டும். அத்தியாயத்தின் விரிவான மற்றும் பரவலான சோதனை ஒவ்வொரு மட்டத்திலும் திருச்சபையால் செய்யப்படுவதால், அத்தியாயத்திற்கான புள்ளிகள் முதல் நான்கு பிரிவுகளில் ஒவ்வொன்றிலிருந்தும் புதுப்பிக்கப்பட வேண்டும் (கண்ணோட்டம், இயல்புத்தன்மை, தெளிவு, துல்லியம்), இது மொழிபெயர்ப்பு எவ்வாறு மேம்படுகிறது என்பதை திருச்சபையும் சமூகமும் பார்க்க அனுமதிக்கிறது.
செயல்முறை ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: கண்ணோட்டம் (மொழிபெயர்ப்பை பற்றிய தகவல்கள்), இயல்புத்தன்மை, தெளிவு, துல்லியம் மற்றும் சபை ஒப்புதல்.
இல்லை | ஆம் இந்த மொழிபெயர்ப்பு என்பது பொருள்-சார்ந்த மொழிபெயர்ப்பாகும், இது அசல் உரையின் பொருளை இலக்கு மொழியில் இயல்பாக, தெளிவாக மற்றும் துல்லியமான வழிகளில் தெரிவிக்க முயற்சிக்கிறது.
இல்லை | ஆம் மொழிபெயர்ப்பை சரிபார்த்ததில் ஈடுபட்டவர்கள் இலக்கு மொழியை முதல்-மொழியாக பேசுபவர்கள்.
இல்லை | ஆம் இந்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு விசுவாச அறிக்கையுடன் ஒத்துப்போகிறது.
இல்லை | ஆம் இந்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு வழிகாட்டுதல்களின்படி செய்யப்பட்டுள்ளது.
இன்னுங்கூடுதலான சமூக சோதனை செய்வதன் மூலம் இந்த பகுதியை பலப்படுத்த முடியும். (மொழி சமூக சோதனை பார்க்க)
0 1 2 இந்த மொழியை பேசுபவர்களும் இந்த அத்தியாயத்தை கேட்டவர்களும் இது மொழியின் சரியான வடிவத்தை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக ஒப்புக்கொள்கிறார்கள்.
0 1 2 இந்த அத்தியாயத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய சொற்கள் இந்த கலாச்சாரத்திற்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவை மற்றும் சரியானவை என்பதை இந்த மொழியை பேசுபவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
0 1 2 இந்த அத்தியாயத்தில் உள்ள எடுத்துக்காட்டுகள் அல்லது கதைகள் இந்த மொழியை பேசுபவர்களுக்கு புரிந்துகொள்ள எளிதாக இருக்கிறது.
0 1 2 இந்த அத்தியாயத்தில் உள்ள வாக்கிய அமைப்பு மற்றும் உரையின் ஒழுங்கு இயல்பானது மற்றும் சரளம் சரியாக இருப்பதை இந்த மொழியை பேசுபவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
0 1 2 இந்த அத்தியாய மொழிபெயர்ப்பின் இயல்புத்தன்மைக்கான மதிப்பாய்வில் இந்த அத்தியாய மொழிபெயர்ப்பில் நேரடியாக ஈடுபடாத சமூக உறுப்பினர்களை உள்ளடக்கியது.
0 1 2 இந்த அத்தியாய மொழிபெயர்ப்பின் இயல்புத்தன்மைக்கான மதிப்பாய்வில் விசுவாசிகள் மற்றும் விசுவாசிகள் அல்லாதவர்கள் அல்லது வேதத்தைப்பற்றிய அறிமுகமில்லாத குறைந்தபட்ச விசுவாசிகள் ஆகியோரையும் உள்ளடக்கியது, இதனால் அவர்கள் உரையை கேட்பதற்கு முன்பு உரை என்ன சொல்ல போகிறது என்பது அவர்களுக்கு தெரியாது.
0 1 2 இந்த அத்தியாய மொழிபெயர்ப்பின் இயல்புத்தன்மைக்கான மதிப்பாய்வில் இந்த மொழி பேசும் பல்வேறு வயதினரையும் உள்ளடக்கியது.
0 1 2 இந்த அத்தியாய மொழிபெயர்ப்பின் இயல்புத்தன்மைக்கான மதிப்பாய்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரையும் உள்ளடக்கியது.
மேலும் சமூக சோதனை செய்வதன் மூலம் இந்த பகுதியை பலப்படுத்த முடியும். (மொழி சமூக சோதனை பார்க்க)
0 1 2 இந்த அத்தியாயம் சொந்த மொழி பேசுபவர்கள் புரிந்துகொள்வது எளிது என ஒப்புக்கொள்கிற மொழியை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
0 1 2 இந்த அத்தியாயத்தில் பெயர்கள், இடங்கள் மற்றும் வினைச்சொற்களின் மொழிபெயர்ப்புகள் அனைத்தும் சரியானவை என்பதை இந்த மொழி பேசுபவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
0 1 2 இந்த அத்தியாயத்தில் உள்ள அணியிலக்கணங்கள் இந்த கலாச்சாரத்தில் உள்ளவர்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்.
0 1 2 இந்த அத்தியாயம் கட்டமைக்கப்பட்ட விதம் அர்த்தத்திலிருந்து திசைதிருப்பாது என்பதை இந்த மொழியின் பேச்சாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
0 1 2 இந்த அத்தியாய மொழிபெயர்ப்பின் தெளிவுக்கான மதிப்பாய்வில் இந்த அத்தியாய மொழிபெயர்ப்பில் நேரடியாக ஈடுபடாத சமூக உறுப்பினர்களே அடங்குவர்.
0 1 2 இந்த அத்தியாய மொழிபெயர்ப்பின் தெளிவுக்கான மதிப்பாய்வில் விசுவாசிகள் மற்றும் விசுவாசிகள் அல்லாதவர்கள் அல்லது வேதத்தைப் பற்றிய அறிமுகமில்லாத குறைந்தபட்ச விசுவாசிகள் ஆகியோரையும் உள்ளடக்கியது, இதனால் அவர்கள் உரையை கேட்பதற்கு முன்பு உரை என்ன சொல்ல போகிறது என்பது அவர்களுக்கு தெரியாது.
0 1 2 இந்த அத்தியாய மொழிபெயர்ப்பின் தெளிவுக்கான மதிப்பாய்வில் இந்த மொழி பேசும் பல்வேறு வயதினரையும் உள்ளடக்கியது.
0 1 2 இந்த அத்தியாய மொழிபெயர்ப்பின் தெளிவுக்கான மதிப்பாய்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரையும் உள்ளடக்கியது.
மேலும் துல்லிய சோதனை செய்வதன் மூலம் இந்த பகுதியை பலப்படுத்த முடியும். (துல்லிய சோதனை பார்க்க)
0 1 2 இந்த அத்தியாயத்திற்கு மூல உரையில் உள்ள அனைத்து முக்கியமான சொற்களின் முழுமையான பட்டியல் மொழிபெயர்ப்பில் அனைத்து சொற்களும் இருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.
0 1 2 இந்த அத்தியாயத்தில் அனைத்து முக்கியமான சொற்களும் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
0 1 2 இந்த அத்தியாயத்தில் அனைத்து முக்கியமான சொற்களும் முறையாக, அதே போல் முக்கியமான சொற்கள் தோன்றும் பிற இடங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
0 1 2 குறிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புசொற்கள் உள்ளிட்ட ஆற்றல்வாய்ந்த மொழிபெயர்ப்பு சவால்களை அடையாளம் காணவும் அதனை தீர்க்கவும் முழு அத்தியாயத்திற்கு விளக்கங்கூறும் ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
0 1 2 மூல உரையில் உள்ள வரலாற்று விவரங்கள் (பெயர்கள், இடங்கள் மற்றும் நிகழ்வுகள் போன்றவை) மொழிபெயர்ப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
0 1 2 மொழிபெயர்க்கப்பட்ட அத்தியாயத்தின் ஒவ்வொரு அணியிலக்கணத்தின் அர்த்தமும் ஒப்பிடப்பட்டு அசல் நோக்கத்துடன் சீரமைக்கப்பட்டுள்ளது.
0 1 2 மொழிபெயர்ப்பை உருவாக்குவதில் ஈடுபடாத சொந்த பேச்சாளர்களுடன் மொழிபெயர்ப்பு சோதிக்கப்பட்டுள்ளது, மேலும்
மூல உரை நோக்கத்தின் பொருளை மொழிபெயர்ப்பு துல்லியமாக தெரிவிப்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
0 1 2 இந்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு குறைந்தது இரண்டு மூல உரைகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
0 1 2 இந்த அத்தியாயத்தில் உள்ள எந்தவொரு பொருளை பற்றிய அனைத்து கேள்விகள் அல்லது கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன.
0 1 2 இந்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு அசல் உரைகளுடன் (எபிரேயம், கிரேக்கம், அரமியம்) ஒப்பிடப்பட்டு சரியான சொற்களஞ்சிய வரையறைகள் மற்றும் அசல் உரைகளின் நோக்கத்தை சரிபார்க்கிறது.
இல்லை | ஆம் இந்த மொழிபெயர்ப்பை சரிபார்த்த திருச்சபைத்தலைவர்கள் இலக்கு மொழியை சொந்த மொழி பேசுபவர்கள், மூல உரை கிடைக்கக்கூடிய மொழிகளில் ஒன்றை நன்கு புரிந்துகொள்ளும் ஒருவரை உள்ளடக்கப்பட்டது.
இல்லை | ஆம் மொழி சமூகத்தை சேர்ந்த, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும், வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள், இந்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பை மதிப்பாய்வு செய்துள்ளனர், மேலும் இது இயல்பானது மற்றும் தெளிவானது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
இல்லை | ஆம் குறைந்தது இரண்டு வெவ்வேறு திருச்சபைக்கூட்டமைப்புக்களைச் சேர்ந்த திருச்சபைத்தலைவர்கள் இந்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பை மதிப்பாய்வு செய்து, அது துல்லியமானது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
இல்லை | ஆம் குறைந்தபட்சம் இரண்டு வெவ்வேறு திருச்சபைக்கூட்டமைப்புக்களின் தலைமை அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இந்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பை மறுஆய்வு செய்து இந்த வேதாகம மொழியின் அத்தியாயத்தை உண்மையுள்ள மொழிபெயர்ப்பாக அதை ஒப்புதல் அளித்துள்ளனர்.