Matthew 26
Matthew 26:2
இயேசு சொன்ன இரண்டு நாளில் வரும் யூதரின் பண்டிகை என்ன ?
இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று இயேசு சொன்னார் .
Matthew 26:4
பிரதான ஆசாரியர்களின் அரண்மனையில் பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் பண்ணின ஆலோசனை என்ன ?
இயேசுவை தந்திரமாய் பிடித்து கொலை செய்ய ஆலோசனைப்பன்னினார்கள்.
Matthew 26:5
பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் ஏன் பயந்தார்கள் ?
பண்டிகையின் நாளில் கலகமுண்டாகாதபடி இயேசுவை கொலை செய்ய பயந்தார்கள்.
Matthew 26:6
இயேசுவின் சிரசில் ஸ்த்ரி ஊற்றிய விலையுயர்ந்த தைலத்தை குறித்து சீஷர்களின் செயல் என்ன ?
சீஷர்கள் விசனமடைந்து ஏன் இந்த தைலத்தை விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே என்றார்கள்.
Matthew 26:9
இயேசுவின் சிரசில் ஸ்த்ரி ஊற்றிய விலையுயர்ந்த தைலத்தை குறித்து சீஷர்களின் செயல் என்ன ?
சீஷர்கள் விசனமடைந்து ஏன் இந்த தைலத்தை விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே என்றார்கள்.
Matthew 26:12
ஸ்திரீ தைலத்தை இயேசுவின்மேல் ஊற்றியதற்கு அவர் கூறியது என்ன ?
இவள் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றியது என்னை அடக்கம் பண்ணுவதற்கு சமம் என்றார்.
Matthew 26:14
பிரதான ஆசாரியரிடத்தில் யூதாஸ்காரியோத்து என்பவன் இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி என்னப் பெற்றுக்கொண்டான்?
பிரதான ஆசாரியரிடத்தில் யூதாஸ் என்பவன் இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி முப்பது வெள்ளிக்காசை பெற்றுக்கொண்டான்.
Matthew 26:15

Matthew 26:21
இயேசு சாயங்காலத்தில் பந்திஇருக்கையில் அவர் சீஷர்களில் ஒருவனிடத்தில் கூறியது என்ன ?
இயேசு சீஷர்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்றார்.
Matthew 26:24
தன்னைக் காட்டிக்கொடுக்க போகிறவனைக் குறித்து இயேசு கூறியது என்ன ?
இயேசு தன்னைக் காட்டிக்கொடுகிறவனுக்கு ஐயோ, அவன் பிறவாதிருந்தால் நலமாயிருக்கும் என்றார்.
Matthew 26:25
யூதாஸ் நானோ உம்மை காட்டிக்கொடுப்பவன் என்றதற்கு இயேசுவின் பதில் என்ன ?
இயேசு: நீ சொல்லுகிறபடிதான் என்றார்.
Matthew 26:26
இயேசு அப்பத்தை எடுத்து அசீர்வதித்துப் பிட்டு சீஷர்களிடம் கொடுக்கும்போது அவர் கூறியது என்ன ?
இயேசு வாங்கி புசியுங்கள், இது என் சரீரமாயிருக்கிறது என்றார் .
Matthew 26:28
சீஷர்களிடம் இயேசு கொடுத்த பாத்திரம் குறித்து அவர் சொன்னது என்ன ?
இந்த பாத்திரம் பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாய் இருக்கிறது என்றார்.
Matthew 26:30
ஒலிவமலையில் சீஷர்களுக்கு என்ன சம்பவிக்கும்மென்று இயேசு கூறினார் ?
அந்த ராத்திரியிலே என்னிமித்தம் இடறலடைவீர்கள் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு சொன்னார் .
Matthew 26:31
ஒலிவமலையில் சீஷர்களுக்கு என்ன சம்பவிக்கும்மென்று இயேசு கூறினார் ?
அந்த ராத்திரியிலே என்னிமித்தம் இடறலடைவீர்கள் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு சொன்னார் .
Matthew 26:33
நான் ஒருக்காலும் இடறலடையேன் என்று பேதுரு இயேசுவிடம் கூறியதற்கு, அந்த ராத்திரியில் இயேசு கூறியது என்ன ?
இயேசு, பேதுருவை நோக்கி நீ இந்த ராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்றார்.
Matthew 26:34

Matthew 26:37
இயேசு ஜெபம்பண்ணும்போது பேதுருவையும், செபெதேயுவின் குமார்கள் இருவரிடமும் சொன்னது யாது ?
நீங்கள் என்னோடே தங்கி விழித்திருங்கள் என்று இயேசு அவர்களோடே சொன்னார்.
Matthew 26:38
இயேசு ஜெபம்பண்ணும்போது பேதுருவையும், செபெதேயுவின் குமார்கள் இருவரிடமும் சொன்னது யாது ?
நீங்கள் என்னோடே தங்கி விழித்திருங்கள் என்று இயேசு அவர்களோடே சொன்னார்.
Matthew 26:39
எத்தனை முறை இயேசு, சீஷர்களை விட்டுத் தனிமையில் ஜெபிக்கும்படி போனார் ?
இயேசு மூன்றுதரம் சீஷர்களை விட்டுத் தனியே போய் ஜெபித்தார் .
Matthew 26:40
இயேசு ஜெபத்திலிருந்து சீஷர்களிடம் வருபோது, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?
இயேசு, ஜெபத்திலிருந்து சீஷர்களிடத்தில் வரும்போது அவர்கள் உறங்கிகொண்டிருந்தார்கள் .
Matthew 26:42
இயேசு, என்னுடைய சித்தம் அல்லவென்றும், எவை நடக்கவும் ஜெபித்தார் ?
பிதாவை நோக்கி என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று இயேசு ஜெபித்தார்.
Matthew 26:43
இயேசு ஜெபத்திலிருந்து சீஷர்களிடம் வருபோது, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?
இயேசு, ஜெபத்திலிருந்து சீஷர்களிடத்தில் வரும்போது அவர்கள் உறங்கிகொண்டிருந்தார்கள் .
Matthew 26:44
எத்தனை முறை இயேசு, சீஷர்களை விட்டுத் தனிமையில் ஜெபிக்கும்படி போனார் ?
இயேசு மூன்றுதரம் சீஷர்களை விட்டுத் தனியே போய் ஜெபித்தார் .
Matthew 26:45
இயேசு ஜெபத்திலிருந்து சீஷர்களிடம் வருபோது, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?
இயேசு, ஜெபத்திலிருந்து சீஷர்களிடத்தில் வரும்போது அவர்கள் உறங்கிகொண்டிருந்தார்கள் .
Matthew 26:47
ஜனங்களுக்கு யூதாஸ், இயேசுவை பிடிக்க சொல்லியிருந்த அடையாளம் என்ன ?
நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான் இயேசு, அவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்று யூதாஸ் முன்னமே ஜனங்களுக்கு அடையாளமாக சொல்லியிருந்தான்.
Matthew 26:50
ஜனங்களுக்கு யூதாஸ், இயேசுவை பிடிக்க சொல்லியிருந்த அடையாளம் என்ன ?
நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான் இயேசு, அவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்று யூதாஸ் முன்னமே ஜனங்களுக்கு அடையாளமாக சொல்லியிருந்தான்.
Matthew 26:51
இயேசுவை பிடிக்க வந்தபோது, இயேசுவின் சீஷர்களில் ஒருவன் என்ன செய்தான் ?
இயேசுவின் சீஷர்களில் ஒருவன் தன் பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை காதற வெட்டினான்.
Matthew 26:53
தன்னை பாதுகாக்க விரும்பினால், அவரால் என்ன செய்ய முடியும் என்று இயேசு கூறினார் ?
இயேசு நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை அனுப்புவார் என்றார் .
Matthew 26:54
எதினால் இவைகள் நிறைவேற வேண்டுமென்று இயேசு சொன்னார் ?
இயேசு இவ்விதமாய் சம்பவிக்கும் என்ற வேதவாக்கியம் நிறைவேற வேண்டுமென்றார்.
Matthew 26:56
பின்பு சீஷர்கள் யாவரும் என்ன செய்தார்கள் ?
சீஷர்கள் எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள் .
Matthew 26:59
பிரதான ஆசாரியர்களும், சங்கத்தார் அனைவரும் இயேசுவைக் கொலை செய்ய என்ன செய்தார்கள் ?
இயேசுவைக் கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் பொய்சாட்சி தேடினார்கள்.
Matthew 26:63
ஜீவனுள்ள தேவன் பேரில் பிரதான ஆசாரியன், இயேசுவிடம் கேட்டது என்ன ?
நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று எங்களுக்கு சொல்லவேண்டுமென்று பிரதான ஆசாரியன் இயேசுவிடம் கேட்டான் .
Matthew 26:64
பிரதான ஆசாரியன் என்ன காண்பான் என்று இயேசு சொன்னார் ?
மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதையும் காண்பீர்கள் என்று இயேசு பிரதான ஆசாரியனிடம் சொன்னார் .
Matthew 26:65
பிரதான ஆசாரியன் இயேசுவின்மேல் என்ன குற்றம்சாட்டினான் ?
இவன் தேவதூஷணம் சொன்னான் என்று பிரதான ஆசாரியன் இயேசுவைக் குற்றம்சாட்டினான்.
Matthew 26:67
இயேசுவைக் குற்றம்சாட்டியபின்பு அவர்கள் என்ன செய்தார்கள் ?
அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள், சிலர் அவரை கன்னத்தில் அறைந்தார்கள் .
Matthew 26:70
நீ இயேசுவோடு இருந்தவன் என்று ஒருத்தி மூன்றுதரம் கேட்டதற்கு, பேதுரு சொன்ன பதில் என்ன ?
பேதுரு: இயேசுவை எனக்கு தெரியாது என்று சொன்னான்.
Matthew 26:72
நீ இயேசுவோடு இருந்தவன் என்று ஒருத்தி மூன்றுதரம் கேட்டதற்கு, பேதுரு சொன்ன பதில் என்ன ?
பேதுரு: இயேசுவை எனக்கு தெரியாது என்று சொன்னான்.
Matthew 26:74
பேதுரு மூன்றாவது முறை மறுதலித்ததும் என்ன நடந்தது ?
பேதுரு மூன்றாவது முறை பதிலளித்ததும் சேவல் கூவிற்று .
Matthew 26:75
மூன்றாவது முறை பேதுரு பதிலளித்ததும் அவன் என்ன நினைவுகூர்ந்தான் ?
சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய் என்று இயேசு சொன்னதை பேதுரு நினைவுகூர்ந்தான்.