Matthew 24

Matthew 24:2

எருசலேம் தேவாலயம் குறித்து இயேசுவின் தீர்க்கதரிசனம் என்ன ?

இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராமல் எல்லாம் இடிக்கப்பட்டுபோகும் என்று இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார்.

Matthew 24:4

தேவாலயத்தைக் குறித்து கேள்விப்பட்ட சீஷர்கள், இயேசுவிடம் என்ன கேட்டனர் ?

சீஷர்கள் அவரிடத்தில் வந்து, இவைகள் எப்போது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்னவென்று இயேசுவிடம் கேட்டார்கள்.

Matthew 24:5

எப்படிப்பட்ட மனிதர்கள் ஜனங்களை வஞ்சிப்பார்கள் என்று இயேசு சொன்னார் ?

அநேகர் வந்து, நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள் என்று இயேசு சொன்னார்.

Matthew 24:6

எவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்று இயேசு சொன்னார் ?

இயேசு யூத்தங்களும், பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும், இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பமாகும் என்றார் .

Matthew 24:8

எவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்று இயேசு சொன்னார் ?

இயேசு யூத்தங்களும், பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும், இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பமாகும் என்றார் .

Matthew 24:9

அந்த சமயத்திலே விசுவாசிகளுக்கு என்ன சம்பவிப்பதுப்பற்றி இயேசு கூறியது என்ன ?

இயேசு சொன்னார், தம்மை விசுவாசிக்கிறவர்கள் உபத்திரவப்படுவார்கள், அநேகர் இடறலடைந்து ஒருவரையொருவர் காட்டிகொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள், அக்கிரமம் மிகுதியினால் அன்பு தணிந்துபோம்.

Matthew 24:12

Matthew 24:13

எவன் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு சொன்னார் ?

இயேசு : முடிவுபரியந்தம் நினைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்றார் .

Matthew 24:14

உலகத்தின் முடிவுக்கு முன் சுவிசேஷம் என்ன செய்யப்படும் ?

ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பூலோகமெங்கும் பிரசங்கிக்கப்படும் அப்போது முடிவு வரும்.

Matthew 24:15

பாழாக்குகிற அருவருப்பை நீங்கள் காணும்போது, பரிசுத்த ஸ்தலத்தில் நிற்க விசுவாசிகள் என்ன செய்யவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

விசுவாசிக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள் என்று இயேசு சொன்னார் .

Matthew 24:18

பாழாக்குகிற அருவருப்பை நீங்கள் காணும்போது, பரிசுத்த ஸ்தலத்தில் நிற்க விசுவாசிகள் என்ன செய்யவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

விசுவாசிக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள் என்று இயேசு சொன்னார் .

Matthew 24:21

அந்நாட்களில் எப்படிப்பட்ட உபத்திரவம் உண்டாகும் ?

உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததுமான மிகுந்த உபத்திரவம் அந்நாட்களில் உண்டாகும் .

Matthew 24:24

கள்ளகிறிஸ்துக்களும், கள்ளதீர்க்கதரிசிகளும் அநேகரை வஞ்சிக்க என்ன செய்வார்கள் ?

கள்ளகிறிஸ்துக்களும், கள்ளதீர்க்கதரிசிகளும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்.

Matthew 24:27

மனுஷகுமாரனுடைய வருகை எப்படி இருக்கும் ?

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

Matthew 24:29

உபத்திரவ நாட்கள் முடிந்ததும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு என்ன சம்பவிக்கும் ?

அந்நாட்களிலே சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளிகொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும் .

Matthew 24:30

மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வருகிறதை பூமியின் சகல ஜனங்களும் கண்டு என்ன செய்வார்கள் ?

பூமியின் சகல கோத்திரதாரும் புலம்புவார்கள்.

Matthew 24:31

மனுஷகுமாரன் தூதர்களை அனுப்பி தம்முடையவர்களை சேர்க்கும்போது கேட்கும் சத்தம் என்ன ?

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே தூதர்கள் தம்முடையவர்களை சேர்ப்பார்கள் .

Matthew 24:34

இவையெல்லாம் சம்பவிக்கும்முன் என்ன ஒழிந்துபோகாதென்று இயேசு சொன்னார் ?

இவையெல்லாம் சம்பவிக்கும்முன் இந்த சந்ததி ஒழிந்துபோகாதென்று இயேசு சொன்னார் .

Matthew 24:35

என்ன ஒழிந்துபோகும், என்ன ஒழிந்துபோகாது என்று இயேசு சொன்னார் ?

இயேசு: வானமும் பூமியும் ஒழிந்துபோகும் என் வார்த்தைகளோ ஒழிந்துபோகாது என்றார்.

Matthew 24:36

நடக்கபோவதை யார் மட்டும் அறிவார் ?

பிதா ஒருவர் தவிர வேறொருவனும் நடக்கபோவதை அறியான் .

Matthew 24:37

ஜலபிரளயதுக்கு முன் நோவாவின் காலத்தில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய வருகை எப்படி இருக்கும் ?

ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்ததும் நியயதீர்ப்புநாள் வந்து அவர்கள் யாவரையும் வாரிகொண்டுபோகும்மேன்பதை அறியாதிருப்பார்கள் .

Matthew 24:39

Matthew 24:42

தம்முடைய வருகையில் தம்மை விசுவாசிக்கிறவர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று இயேசு கூறினார்? ஏன் ?

இயேசு, தம்மை விசுவாசிக்கிறவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டுமென்றார் ஏனெனில் அவர் இன்ன நாழிகையில் வருவார் என்று ஒருவனும் அறியான் என்றார் .

Matthew 24:44

Matthew 24:45

தன் எஜமான் இல்லாதபோது உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் என்ன செய்வான் ?

உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் தன் எஜமானின் குடும்பத்தை அவன் இல்லாதபோதும் விசாரித்துப் பார்த்துக்கொள்வான் .

Matthew 24:46

தன் எஜமான் இல்லாதபோது உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் என்ன செய்வான் ?

உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் தன் எஜமானின் குடும்பத்தை அவன் இல்லாதபோதும் விசாரித்துப் பார்த்துக்கொள்வான் .

Matthew 24:47

உண்மையுள்ள ஊழியக்காரனுக்கு அவன் எஜமான் வரும்போது செய்வது என்ன ?

எஜமான் வரும்போது உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனிடத்தில் தன் ஆஸ்திகள் எல்லாவற்றையும் ஒப்புவிப்பான்.

Matthew 24:48

தன் எஜமான் இல்லாததை அறிந்து பொல்லாத ஊழியக்காரன் என்ன செய்வான் ?

பொல்லாத ஊழியக்காரன் தன் எஜமான் இல்லாததை அறிந்து உடன்வேலைக்காரரை அடிக்கவும், வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் செய்வான்.

Matthew 24:49

தன் எஜமான் இல்லாததை அறிந்து பொல்லாத ஊழியக்காரன் என்ன செய்வான் ?

பொல்லாத ஊழியக்காரன் தன் எஜமான் இல்லாததை அறிந்து உடன்வேலைக்காரரை அடிக்கவும், வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் செய்வான்.

Matthew 24:51

எஜமான் வரும்போது தன் பொல்லாத ஊழியக்காரனுக்கு என்ன செய்வான் ?

எஜமான் வரும்போது, பொல்லாத ஊழியக்காரனை கடினமாய் தண்டித்து, அவனுக்குப் பங்கை நியமிப்பான்: அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் .