Matthew 13

Matthew 13:4

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே வழியருகே விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

வழியருகே விழுந்த விதையை பறவைகள் வந்து பட்சித்துப்போட்டது .

Matthew 13:5

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே கற்பாறையுள்ள இடங்களில் விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

கற்பாறையுள்ள இடங்களில் விழுந்த விதை வேகமாய் வளர்ந்தது, வெயில் ஏறினபோதோ தீய்ந்துபோய் உலர்ந்து போயிற்று.

Matthew 13:6

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே கற்பாறையுள்ள இடங்களில் விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

கற்பாறையுள்ள இடங்களில் விழுந்த விதை வேகமாய் வளர்ந்தது, வெயில் ஏறினபோதோ தீய்ந்துபோய் உலர்ந்து போயிற்று.

Matthew 13:7

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது, முற்கள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.

Matthew 13:8

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே நல்ல இடங்களில் விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளில் சில நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தந்தது .

Matthew 13:14

ஏசாவின் தீர்க்கதரிசனத்தின்படி ஜனங்கள் காதாரக்கேட்டும், கண்ணாரக்கண்டும் என்ன செய்யமாட்டார்கள் ?

ஏசாவின் தீர்க்கதரிசனத்தின்படி ஜனங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பார்கள், கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பார்கள் .

Matthew 13:15

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு உணராத ஜனங்களிடம் இருந்த குறை என்ன ?

இந்த ஜனங்கள் காணாமலும் கேளாமலும் தங்கள் இருதயத்தில் உணராமலும் இருக்கும்படி அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது, காதால் மந்தமாய்க் கேட்டு தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் .

Matthew 13:19

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே வழியருகே விதைக்கப்பட்டவன் எப்படிப்பட்டவன் ?

ஒருவன் ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டு உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதிக்கப்பட்டதைப் பறித்துக்கொள்கிறான், அவனே வழியருகே விதைக்கப்பட்ட விதை .

Matthew 13:20

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே கற்பாறையிலே விழுந்தவன் எப்படிப்பட்டவன்?

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வான் ஆனால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

Matthew 13:21

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே கற்பாறையிலே விழுந்தவன் எப்படிப்பட்டவன்?

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வான் ஆனால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

Matthew 13:22

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே முள்ளுள்ள இடத்தில் விழுந்தவன் எப்படிப்பட்டவன்?

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தை கேட்கிறவனாயிருந்தும் உலகக்கவலையும், ஐசுவரியத்தின் மயக்கமும் நெருக்கிப்போடுகிறதினால் அவனும் பலன் அற்றுப்போவான் .

Matthew 13:23

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் எப்படிப்பட்டவன்?

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக்கேட்டு உணருகிரவனாயிருந்து கனி கொடுப்பான் .

Matthew 13:28

உவமையிலே, எவன் களைகளை விதைக்கிறான் ?

நிலத்திலே சத்துரு களைகளை விதைக்கிறான்.

Matthew 13:30

வீட்டெஜமான் தன் வேலைக்கரனிடத்தில் களஞ்சியத்தையும் கோதுமையையும் குறித்துக் கூறியது என்ன ?

வீட்டெஜமான் தன் வேலைக்காரனிடத்தில் இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள், பின்பு களைகளைப் பிடுங்கி சுட்டெரித்து, கோதுமையையோ களஞ்சியத்தில் சேர்ப்பேன் என்றார் .

Matthew 13:31

இயேசுவின் கடுகு விதை உவமைலே, சிறிய கடுகு விதைக்கு சம்பவிப்பது என்ன ?

ஒரு கடுகு விதை வளரும்போது, சகலப் பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் .

Matthew 13:32

இயேசுவின் கடுகு விதை உவமைலே, சிறிய கடுகு விதைக்கு சம்பவிப்பது என்ன ?

ஒரு கடுகு விதை வளரும்போது, சகலப் பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் .

Matthew 13:33

பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு எப்படி ஒப்பாயிருக்கிறது ?

பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது, அது புளிக்கும்வரைக்கும் மூன்று படி மாவிலே அடக்கி வைக்கவேண்டும் .

Matthew 13:37

களை உவமையிலே,யார் நல்ல விதை விதைப்பார், எது நிலம், யார் நல்ல விதை, களை யார், களைகளை விதைக்கிறவன் யார் ?

நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமரன், நிலம் உலகம், நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர், களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்கள். அவைகளை விதைக்கிறவன் பிசாசு .

Matthew 13:39

களை உவமையிலே அறுக்கிறவர்கள் யார் ? இந்த அறுப்பு எதை நிழலாட்டமாய் காட்டுகிறது ?

அறுப்பு உலகத்தின் முடிவு, அறுக்கிறவர்கள் தேவதூதர்கள் .

Matthew 13:42

அக்கிரமம் செய்கிறவர்களுக்கு முடிவிலே என்ன சம்பவிக்கும் ?

உலகத்தின் முடிவிலே, அக்கிரமம் செய்கிறவர்களை அவியாத அக்கினியிலே போடுவார் .

Matthew 13:43

நீதிமான்களுக்கு முடிவிலே என்ன சம்பவிக்கும் ?

முடிவிலே நீதிமான்கள் சூரியனைப்போல் பிரகாசிப்பார்கள் .

Matthew 13:44

பரலோகராஜ்யத்தைக் குறித்து இயேசு சொன்ன உவமைலே அந்த மனிதன் கண்ட பொக்கிஷம் என்ன ?

ஒரு மனுஷன் பொக்கிஷத்தைக் கண்டு, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.

Matthew 13:45

பரலோகராஜ்யத்தைக் குறித்து இயேசு சொன்ன உவமைலே அந்த மனிதன் கண்ட முத்து என்ன ?

ஒருவன் விலையுயர்ந்த முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

Matthew 13:46

பரலோகராஜ்யத்தைக் குறித்து இயேசு சொன்ன உவமைலே அந்த மனிதன் கண்ட முத்து என்ன ?

ஒருவன் விலையுயர்ந்த முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

Matthew 13:47

வலையிலே மீன் பிடிக்கும் உவமைப்போல எப்படி முடிவில் சம்பவிக்கும் ?

நல்லவைகளிலிருந்து ஆகாதவைகளைப் பிரிப்பது போல முடிவிலே நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அக்கினிசூளையிலே போடுவார்கள் .

Matthew 13:50

வலையிலே மீன் பிடிக்கும் உவமைப்போல எப்படி முடிவில் சம்பவிக்கும் ?

நல்லவைகளிலிருந்து ஆகாதவைகளைப் பிரிப்பது போல முடிவிலே நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அக்கினிசூளையிலே போடுவார்கள் .

Matthew 13:54

இயேசுவின் போதனைகளை அவர் ஊரார் கேட்டு என்ன கேள்வியை எழுப்பினார்கள் ?

ஜனங்கள்: இவன் எங்கிருந்து இவைகளைப் பெற்றான் என்றார்கள் .

Matthew 13:57

தீர்கதரிசியைக் குறித்து இயேசு கூறியது என்ன ?

இயேசு: தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் கனமடயான் என்றார் .

Matthew 13:58

இயேசுவை அவர் ஊரார் விசுவாசியததால் நடந்தது என்ன ?

அநேகர் அவரை விசுவாசியாததால் அவர் அங்கே அநேகே அற்புதங்கள் செய்யவில்லை .