Matthew 14

Matthew 14:2

இயேசுவைக்குறித்து ஏரோது என்ன நினைத்தான் ?

இயேசுவை, யோவான்ஸ்நாணன் என்றும் அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்று ஏரோது கூறினான்.

Matthew 14:4

யோவான் கூறிய எந்த நியாயமல்லத காரியத்தை ஏரோது செய்தான் ?

ஏரோது, அவன் சகோதரனின் மனைவியை மணந்தான் .

Matthew 14:5

ஏன் ஏரோது அவனை கொலை செய்யாமலிருந்தான் ?

ஏரோது யோவானைக் கொல்ல மனதாயிருந்தும், ஜனங்கள் அவனை தீர்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்கு பயந்தான்.

Matthew 14:7

எரோதியாள், ஏரோதின் பிறந்தநாளுக்கு நடனமாடியதற்கு பின் அவன் என்ன செய்தான் ?

எரோதியாளிடத்தில், நீ எதைக்கேட்டாலும் அதைத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வக்குகொடுத்தான் .

Matthew 14:8

எரோதியாள் என்ன கேட்டாள் ?

எரோதியாள்: யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தாலத்தில் தரவேண்டும் என்றாள் .

Matthew 14:9

எரோதியாள் வேண்டினதை ஏன் ஏரோது கொடுத்தான் ?

ஏரோது ஆணைட்டதினிமித்தமும், கூடபந்திஇருந்தவர்கள்னிமித்தமும் அவள் வேண்டினதை கொடுத்தான் .

Matthew 14:14

திரளான ஜனங்கள் தமக்குப் பின் வருகிறதைக் கண்டு இயேசு என்ன செய்தார் ?

இயேசு அவர்கள்மேல் மனதுருகி அவர்களில் வியாதியஸ்தர்களை குணமாக்கினார் .

Matthew 14:16

இயேசு, சீஷர்களிடத்தில் ஜனங்களுக்காக என்ன செய்தார் ?

இயேசு, சீஷர்களிடத்தில்: நீங்களே ஜனங்களுக்கு போஜனங்கொடுங்கள் என்றார் .

Matthew 14:19

சீஷர்கள் கொண்டுவந்த ஐந்து அப்பமும், இரண்டு மீன்களையும் கொண்டு இயேசு என்ன செய்தார் ?

இயேசு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்துபார்த்து ஆசீர்வதித்து, ஜனங்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கொடுத்தார்.

Matthew 14:20

எவ்வளவு ஜனம் சாப்பிட்டனர் ? எவ்வளவு துணிக்கைகள் மீதம் எடுத்தனர் ?

ஸ்த்ரீகளும் பிள்ளைகளையும் தவிர சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் அதில் பன்னிரண்டு கூடை நிறைய மீதமாய் எடுத்தார்கள்.

Matthew 14:21

எவ்வளவு ஜனம் சாப்பிட்டனர் ? எவ்வளவு துணிக்கைகள் மீதம் எடுத்தனர் ?

ஸ்த்ரீகளும் பிள்ளைகளையும் தவிர சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் அதில் பன்னிரண்டு கூடை நிறைய மீதமாய் எடுத்தார்கள்.

Matthew 14:23

ஜனங்களை அனுப்பிவிட்டு இயேசு என்ன செய்தார் ?

இயேசு தனித்து ஜெபம்பண்ண மலையின்மேல் ஏறினார்.

Matthew 14:24

நடுக்கடலிலே சீஷர்களுக்கு சம்பவித்தது என்ன ?

எதிர்காற்றும், அலைகளும் அதிகமாக இருந்ததினால் சீஷர்களின் படவு அலைவுபட்டது .

Matthew 14:25

எப்படி இயேசு சீஷர்களிடம் போனார் ?

இயேசு கடலின்மேல் நடந்து சீஷர்களிடதிற்க்குப் போனார் .

Matthew 14:27

சீஷர்கள் இயேசுவைக் கண்டபோது அவர் கூறினது என்ன ?

இயேசு: சீஷர்களிடத்தில் திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள் என்றார் .

Matthew 14:29

இயேசு பேதுருவினிடம் என்ன செய்யும்படி கூறினார் ?

இயேசு, பேதுருவை கடலின்மேல் நடக்க அழைத்தார் .

Matthew 14:30

ஏன் பேதுரு ஜலத்தில் அமிழத் துவங்கினான் ?

பேதுரு பயந்ததினால் ஜலத்தில் அமிழத் துவங்கினான் .

Matthew 14:32

இயேசுவும் பேதுருவும் படவில் ஏறினவுடனே என்ன சம்பவித்தது ?

இயேசுவும் பேதுருவும் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

Matthew 14:33

இதைக் கண்டு சீஷர்கள் என்ன செய்தார்கள் ?

சீஷர்கள் இதைக் கண்டு நீர் மெய்யாகவே தேவனுடைய குமரன் என்று அவரைப் பணிந்துகொண்டார்கள் .

Matthew 14:35

இயேசுவும் சீஷர்களும் அக்கரைஎறினவுடனே, ஜனங்கள் என்ன செய்தார்கள் ?

இயேசுவும் சீஷர்களும் அக்கரை எறினவுடனே, ஜனங்கள் பிணியாளிகளை அவரிடம் கொண்டுவந்தார்கள்.