Matthew 8

Matthew 8:4

இயேசு ஏன் குஷ்டரோகியை ஆசாரியனிடதிற்குப் போய் மோசே கட்டளையிட்ட காணிக்கையை செலுத்தும்படி கூறினார் ?

இயேசு, குஷ்டரோகியை சாட்சி உண்டாகும்படி ஆசாரியனிடத்திற்கு அனுப்பினார்.

Matthew 8:7

நூற்றுக்கு அதிபதியின் வார்த்தையைக் கேட்ட இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: நான் வந்து சொஸ்தமாக்குவேன் என்றார் .

Matthew 8:8

நூற்றுக்கு அதிபதி ஏன் இயேசுவை தன் வீட்டிற்க்கு அழைக்க மறுத்தான் ?

நூற்றுக்கு அதிபதி: ஆண்டவரே நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தை சொல்லும் அப்பொழுது அவன் பிழைப்பான் என்றான்.

Matthew 8:10

இயேசு, நூற்றுக்கு அதிபதியை எவ்வாறு வாழ்த்தினார் ?

இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை என்றார் .

Matthew 8:11

யார் பரலோகராஜ்யத்தில் பந்தியிரு ப்பார்கள் என இயேசு கூறினார் ?

அநேகர் கிழக்கிலும், மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் பந்தியிரு ப்பார்கள் என்றார்.

Matthew 8:12

அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த புறம்பான இருளிலே யார் தள்ளப்படுவார்கள் என்றார் ?

ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள் என்றார் .

Matthew 8:14

இயேசு, பேதுருவின் வீட்டிற்க்குள் சென்று யாரை குணமாக்கினார் ?

இயேசு, பேதுருவின் வீட்டிற்க்குள் வந்து அவன் மாமியை குணமாக்கினார்.

Matthew 8:15

இயேசு, பேதுருவின் வீட்டிற்க்குள் சென்று யாரை குணமாக்கினார் ?

இயேசு, பேதுருவின் வீட்டிற்க்குள் வந்து அவன் மாமியை குணமாக்கினார்.

Matthew 8:17

இயேசு பிசாசு பிடித்தவர்களையும், வியாதியஸ்தர்களையும் குனமாக்கியதினால் எவ்வாறு ஏசாயாவின் தீர்கதரிசனம் நிறைவேறியது ?

அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று ஏசாயா தீர்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது .

Matthew 8:20

நீர் எங்கே போனாலும் உம்மை பின்பற்றுவேன் என்று வேதபாரகனின் வார்த்தைக்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் .

Matthew 8:21

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு தரவேண்டும் என்று கேட்டபொழுது இயேசுவின் பதில் என்ன ?

மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் நீ என்னை பின்பற்றிவா என்றார் .

Matthew 8:22

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு தரவேண்டும் என்று கேட்டபொழுது இயேசுவின் பதில் என்ன ?

மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் நீ என்னை பின்பற்றிவா என்றார் .

Matthew 8:24

படவு அலைகளினால் மூடப்படதக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டானபோது இயேசு என்ன செய்துகொண்டிருந்தார் ?

படவு அலைகளினால் மூடப்படதக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாய் இருந்தார்.

Matthew 8:26

சீஷர்கள் அவரை எழுப்பி, ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றதற்கு இயேசுவின் பதில் என்ன ?

அதற்கு இயேசு: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்றார் .

Matthew 8:27

ஏன் சீஷர்கள் இயேசுவைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்கள் ?

சீஷர்கள்: ஆச்சரியப்பட்டு இவர் எப்படிப்பட்டவரோ காற்றும் கடலும் இவருக்கு கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

Matthew 8:28

கெர்கெசேனர் நாட்டில் இயேசு வந்தபோது எப்படிப்பட்ட மனிதர்கள் அவரை சந்தித்தனர்?

பிசாசு பிடித்திருந்த இரண்டு பேர் இயேசுவுக்கு எதிராக வந்தார்கள், அவர்கள் மிகவும் கொடியராயிருந்தார்கள் .

Matthew 8:29

பிசாசு பிடித்திருந்தவர்கள் இயேசுவைக் குறித்து என்ன கூறினார்கள் ?

பிசாசு பிடித்திருந்தவர்கள் இயேசுவை நோக்கிக் காலம்வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்றார்கள்.

Matthew 8:32

இயேசு பிசாசுகளைத் துரத்தியப்பின் சம்பவித்தது என்ன ?

இயேசு பிசாசுகளைத் துரத்தும்போது அவைகள் பன்றியின் கூட்டத்திற்குள் நுழைந்தன, பின்பு அந்த பன்றிகள் கடலில் பாய்ந்து மாண்டுபோயின.

Matthew 8:34

இயேசுவிடம் வந்த ஜனங்கள் என்ன வேண்டிக்கொண்டார்கள் ?

அந்த பட்டணத்தார் யாவரும் இயேசுவிடம் வந்து தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள் .