Matthew 25

Matthew 25:1

இயேசு புத்தியுள்ள மற்றும் புத்தி இல்லாத கன்னிகைகளைக் குறித்த உவமையைச் சொல்ல துவங்குகிறார்.

விளக்குகள்

இது 1. விளக்குகள் (UDB பார்) அல்லது 2. ஒரு தடியின் முனையில் துணி சுற்றி அதை எண்ணையில் நனைய வைத்து எரிய செய்யப்படும் தீவட்டிகள்.

அவைகளில் ஐந்து

“கன்னிகைகளுள் ஐந்து பேர்

அவர்களோடு எண்ணெயை எடுத்துக்கொண்டு போகவில்லை

“அவர்கள் விளக்குகளில் மட்டும் எண்ணெய் வைத்திருந்தனர்”

Matthew 25:5

இயேசு புத்தியுள்ள மற்றும் புத்தி இல்லாத கன்னிகைகளைக் குறித்த உவமையைச் சொல்ல துவங்குகிறதைத் தொடர்ந்தார்.

அவர்கள் உறக்கம் கொண்டனர்

“எல்லா பத்து கன்னிகைகளும் தூங்கம் கொண்டனர்”

Matthew 25:7

இயேசு புத்தியுள்ள மற்றும் புத்தி இல்லாத கன்னிகைகளைக் குறித்த உவமையைச் சொல்ல துவங்குகிறதைத் தொடர்ந்தார்.

தீவட்டிகளை ஆயத்தம் செய்தனர்

தீவட்டிகளை ஆயத்தம் செய்தனர்

“இன்னும் பிரகாசிக்க எரியும்படி தங்கள் விளக்குகளை ஒழுங்குப்படுத்தினர்.”

புத்தி இல்லாதவர்கள் புத்தியுள்ள கண்ணிகைகளிடம் சொன்னார்கள்

“புத்தி இல்லாத கன்னிகைகள் புத்தியுள்ள கண்ணிகைகளிடம் சொன்னார்கள்”

எங்கள் தீவட்டிகள் அணைகிறது

“எங்கள் தீவட்டிகளில் உள்ள நெருப்பு பிரகாசமாக எரியவில்லை”

Matthew 25:10

இயேசு புத்தியுள்ள மற்றும் புத்தி இல்லாத கன்னிகைகளைக் குறித்த உவமையைச் சொல்ல துவங்குகிறதைத் தொடர்ந்தார்.

அவர்கள் சென்றார்கள்

“புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் சென்றார்கள்”

ஆயத்தமாய் இருந்தவர்கள்

அதிக எண்ணெய் வைத்து இருந்த கன்னிகைகள்

கதவு அடைக்கப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: “யாரோ ஒருவன் கதவை அடைத்தான்”

எங்களுக்குத் திறந்தருளும்

“நாங்கள் உள்ளே வரும்படி கதவை எங்களுக்குத் திறந்தருளும்”

நான் உங்களை அறியேன்

“நீங்கள் யார் என்று நான் அறியேன்”

Matthew 25:14

இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினார்.

இது இப்படிப்பட்டது

“பரலோகராஜ்யம் இப்படிப்பட்டது”

போகப்போகிறது

“போக ஆயத்தமாக இருந்தது” அல்லது “சீக்கிரமாக போக இருந்தது”

அவனுடைய செல்வத்தை அவர்களுக்குக் கொடுத்து

“அவனுடைய செல்வத்திற்கு அவர்களை அதிகாரியாக வைத்து”

அவனுடைய செல்வம்

“அவனுடைய சொத்து”

ஐந்து தாலந்துகள்

“தாலந்து” என்பது இருபது வருடக் கூலி ஆகும். இக்கால சம்பளத்திற்கு இதை மாற்றிப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இந்த உவமை ஐந்து, மூன்று, மற்றும் ஒரு தாலந்தையும் மிகப்பெரிய சொத்தையும் ஒப்பிட்டு பார்க்கிறது. (UDB பார், “ஐந்து பை தங்கங்கள்”)

அவன் பிரயாணம் பண்ணிப் போனான்

“எஜமான் தன் பிரயாணத்தில் போனான்” மற்றுமொரு ஐந்து தாலந்துகளை சேர்த்தான் “மற்றுமொரு ஐந்து தாலந்துகளை சம்பாதித்தான்”

Matthew 25:17

இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

இன்னுமொரு இரண்டை சேர்த்து

“மற்றுமொரு இரண்டு தாலந்துகளை சம்பாதித்தான்

Matthew 25:19

இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

நான் மற்றுமொரு ஐந்து தாலந்துகளைச் சேர்த்தேன்

“நான் மற்றுமொரு ஐந்து தாலந்துகளைச் சம்பாதித்தேன்”

தாலந்துகள்

மத்தேயு 25:1௪, 15 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்ததைப் பார்க்கவும்.

நன்றாக செய்து

“நீங்கள் நன்றாக செய்தீர்கள்” அல்லது “நீங்கள் சரியாக செய்தீர்கள்.” உங்கள் கலாச்சாரத்தில் ஒரு வேலையாள் (அல்லது எஜமானுக்குக் கீழ் உள்ளாவன்) செய்த வேலையை எஜமான் (அல்லது அதிகாரத்தில் உள்ளவன்) பாராட்டுவதைக் கூறும் ஒரு உணர்ச்சி வெளிப்பாடு இருக்கலாம்.

Matthew 25:22

இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

நான் செய்தேன்... அதிக தாலந்துகள்

மத்தேயு 25:19, 29 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பாருங்கள்.

நன்றாக செய்தீர் ... உன் எஜமானின் சந்தோசம்

மத்தேயு 25:19,21 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பாருங்கள்.

Matthew 25:24

இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

நீர் விதைக்காத இடத்தில் நீர் அறுப்பதில்லை, தூவாத இடத்தில் சேர்க்கிறவர் நீர்

மறு மொழிபெயர்ப்பு: “விதைப்பதற்கு மற்றவனுக்கு பணம் கொடுத்து விதைக்கப்பட்ட நிலத்தில் இருந்து உணவை சேர்ப்பவர் நீர்.”

தூவி

முந்தைய காலத்தில் வரிசையில் விதைகளை விதைப்பதற்கு பதிலாக விதைகளைத் தூவுவார்கள்

உமக்குரியது இங்கு உமக்கிருக்கிறது,

பார், உமக்குரியது இங்கிருக்கிறது”

Matthew 25:26

இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

பொல்லாதவனும் சோம்பேறியுமான வேலைக்காரனே

“வேலை செய்ய விரும்பாத பொல்லாத வேலைக்காரன் நீ”

நான் விதைக்காத இடத்தில் நான் அறுப்பதில்லை, தூவாத இடத்தில் சேர்க்கிறவர் நான்

மத்தேயு 25:24 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

என்னுடையதை நான் பெற்றுக்கொண்டு

“என்னுடைய பொன்னை நான் பெற்றுக்கொண்டு

வட்டி

எஜமானுடைய பணத்தைத் தற்காலிகமாக உபயோகிக்க வங்கிக்காரர் செலுத்தும் பணம்.

Matthew 25:28

இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

இன்னும் மிகுதியாக

“இன்னும் அதிகமாக”

அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடம்

“மக்கள் அழுதுகொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் இருக்கும் இடம்”

Matthew 25:31

இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினார்.

அவருக்கு முன்பாக எல்லா ஜனத்தாரும் கூட்டப்படுவார்கள்

மறு மொழிபெயர்ப்பு: “எல்லா ஜனத்தாரையும் அவருக்கு முன்பாக அவர் கூட்டுவார்.”

அவருக்கு முன்பாக

“அவருக்கு முன்”

எல்லா ஜனத்தாரும்

“ஒவ்வொரு நாட்டிலிருந்து எல்லா மக்களும்”

ஆடுகள்

ஆடுகள் என்பது நான்கு கால்கள் கொண்ட சராசரியான செம்மறி ஆடுக்கு ஒத்த ஜந்துகள். அவை அநேகமாக வீட்டில் வைத்தோ அல்லது மந்தை ஆகவோ வளர்க்கப்படும்.

அவர் வைப்பார்

“மனுஷக் குமாரன் வைப்பார்”

Matthew 25:34

இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

ராஜா

“மனுஷக் குமாரன்”

அவர் வலது கைப் பக்கம் உள்ளவர்கள்

“செம்மறி ஆடுகள்”

வாருங்கள், என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே

மறுமொழிபெயர்ப்பு: “வாருங்கள், என் தகப்பன் அசீர்வதித்தவர்களே”

உங்களுக்கு ஆயத்தம் செய்யப்பட்ட ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்

மறு மொழிபெயர்ப்பு: “உங்களுக்கு தேவன் ஆயத்தம் செய்யப்பட்ட ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்”

Matthew 25:37

இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

ராஜா

“மனுஷக் குமாரன்”

அவர்களுக்கு சொல்லு

“அவருடைய வலது கைப்பக்கத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லு”

சகோதரர்கள்

ஆணையும் பெண்ணையும் ஒரு சேரக் குறிக்கும் சொல் உங்கள் மொழியில் இருந்தால் இங்கு குறிக்கவும்.

நீங்கள் எனக்கு செய்தீர்கள்

“நீங்கள் எனக்கு செய்தீர்கள் என்று நான் எடுத்துக்கொள்கிறேன்”

Matthew 25:41

இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

சபிக்கப்பட்டவர்களே

“தேவன் சபித்த மக்களே”

நித்திய அக்கினி ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது

மறு மொழிபெயர்ப்பு: “தேவன் ஆயத்தம் செய்த நித்திய அக்கினி”

அவருடைய தூதர்கள்

அவருடைய உதவியாளர்கள்

எனக்கு நீங்கள் உடுத்துவிக்கவில்லை

“நீங்கள் எனக்கு உடுப்பு தரவில்லை”

வியாதிப்பட்டவர்கள் மற்றும் சிறைச்சாலையில் இருந்தவர்கள்

“நான் வியாதிப்பட்டும் சிறைச்சாலையிலும் இருந்தேன்”

Matthew 25:44

இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.

அவர்களும் பதில் சொல்லுவார்கள்

“அவருடைய இடது கைப்பக்கம் உள்ளவர்கள்”

இந்த சிறியரில் ஒருவருக்கு

“என்னுடைய மக்களில் சிறியரில் ஒருவனுக்காக”

எனக்கு நீங்கள் செய்யவில்லை

“நீங்கள் எனக்கு செய்யவில்லை என்று எடுத்துக்கொள்ளுவேன்” அல்லது “உண்மையாக, நீங்கள் உதவி செய்யாதவான் நான் தான்”

நித்திய தண்டனை

“முடிவில்லாத தண்டனை”

நீதிமான்கள் நித்திய வாழ்வுக்குள்

“நீதிமான்கள் நித்திய வாழ்வுக்குள் பிரவேசிப்பார்கள்”