Matthew 18

Matthew 18:1

இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்துகிறார்.

குழந்தைகளைப் போல் ஆகுங்கள்

“குழந்தைகள் செய்யும் வழியை நினையுங்கள்”

Matthew 18:4

இயேசு சீடர்களுக்காக ஒரு சிறு குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

ஒரு சிறு குழந்தையைப் போல தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும்

“ஒரு சிறு குழந்தை தாழ்மையாய் இருப்பதைப் போல தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும்”

ஒரு பெரிய ஏந்திரக்கல்லை அவன் கழுத்தில் கட்டிக் கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கப்படவேண்டும்

“ஒரு பெரிய ஏந்திரக்கல்லை அவர்கள் அவன் கழுத்தில் கட்டி கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கப்படச் செய்யவேண்டுமானால்”

ஏந்திரக்கல்

கோதுமையை மாவாக அரைக்கப் பயன்படும் வட்டமான, பெரிய கனமானக் கல். மறு மொழிபெயர்ப்பு: “கனமானக் கல்”

Matthew 18:7

இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட் டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

உன் கை

இயேசு தன்னைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களை ஒருவனைப் போல பாவித்துப் பேசுகிறார்.

Matthew 18:9

இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

பிடுங்கி எறிந்துவிடு

இந்தக் கூற்று அவ்விசுவாசத்தின் கூர்மையையும் அதனை எக்காரணத்தைக்கொண்டாகிலும் தவிர்க்கவேண்டிய அவசியத்தையும் காண்பிக்கிறது.

ஜீவனுக்குள் பிரவேசித்து

“நித்திய ஜீவனுக்குள் பிரவேசித்து”

Matthew 18:10

இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

அருவருப்பு

“நிச்சயமாக வெறுக்கிறது” அல்லது “முக்கியமல்ல என்று நினைக்கிறது”

அவர்களின் தூதர்கள்

“பிள்ளைகளின் தூதர்கள்”

எப்பொழுதும் முகத்தை நோக்கி

“எப்பொழுதும் நெருக்கமாய்”

Matthew 18:12

இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

“மக்கள் எவ்வாறு நடக்கிறார்கள் என்று நினை.”

அவன் கடந்து சென்று போகமாட்டானா...மற்றும் தேடிச் செல்லமாட்டானா?

“அவன் எப்பொழுதும் விட்டுப் போவான்...மற்றும் தேடிச் செல்வான்....”

தொண்ணுற்று ஒன்பது

“99”

இந்த சிறியவரில் ஒருவர் கூட கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவின் சித்தமல்ல

“பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இந்த சிறியர் எல்லாம் வாழவேண்டும் என்று விரும்புகிறார்”

Matthew 18:15

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிக்கத் துவங்கினார்.

உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொள்ளுவாய்

“உன்னுடைய சகோதரனோடு உள்ள உறவை மறுபடியம் சீர்ப்படுத்திக்கொள்ளுவாய்”

வாயினால்

“வாயிலிருந்து” வரும் சாட்சிகளின் வார்த்தைகள் மூலமாக

Matthew 18:17

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.

அவர்களுக்கு செவிகொடுக்க

சாட்சிகளுக்குச் செவிகொடுக்க

ஒரு புறஜாதியானும், வரி வசூலிப்பவனும் எப்படியோ அப்படியே அவனும் உனக்கு இருக்கட்டும்.

“நீ ஒரு புறஜாதியானையும் வரி வசூலிப்பவனையும் நடத்துவதைப் போல அவனையும் நடத்து”

Matthew 18:18

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.

கட்டுக்கிறது...கட்டினது...கட்டவிழ்க்கிறது...கட்டவிழ்த்தது

மத்தேயு 16:19 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.

கட்டப்படும்...கட்டவிழ்க்கப்படும்

மறு மொழிபெயர்ப்பு: “தேவன் கட்டுவார்...தேவன் கட்டவிழ்ப்பார்.”

அவர்கள்...அவர்களுக்கு

“உங்களில் இரண்டு” பேர்

இரண்டு அல்லது மூன்று

“இரண்டு அல்லது அதற்கு மேல்” அல்லது “இரண்டாகிலும்”

கூடி

“சந்தித்து”

Matthew 18:21

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.

ஏழு முறை

“7 முறைகள்”

ஏழு எழுபது முறை

பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “70 முறை 7” (UDB) அல்லது 2. “77 முறை” (UDB). எண்களை உபயோகித்தால் குழப்பும் என்று கருதினால், “நீங்கள் எண்ணுவதற்கு மேல்” என்று மொழிபெயர்க்கவும் (UDB).

Matthew 18:23

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.

ஒரு வேலைக்காரன் கொண்டுவரப்பட்டான்

மறு மொழிபெயர்ப்பு: “ராஜாவின் வேலைக்காரரில் ஒருவனை யாரோ ஒருவன் கொண்டுவந்தான்”

பத்தாயிரம் தாலந்துகள்

“10,000 தாலந்துகள்” அல்லது “ஒரு வேலைக்காரன் திரும்பக் செலுத்த முடியாத அளவு பணம்”

அவன் எஜமான் அவனை விற்கும்படி கட்டளையிட்டான்,...செலுத்தவேண்டிய பணம் செலுத்தப்படும்

“அந்த மனிதனை விற்கும்படி ராஜ அவன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டான்...விற்பனையிலிருந்து வரும் பணத்தைக் கொண்டு கடனைக் கட்டும்படி”

Matthew 18:26

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.

தாழ விழுந்து, பணிந்து கொண்டு

“மண்டியிட்டு, தலை வணங்கினான்”

அவனுக்கு முன்பாக

“ராஜாவுக்கு முன்பாக”

அவனை விடுவித்தான்

“அவனைப் போக விட்டான்”

Matthew 18:28

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.

நூறு வெள்ளிப்பணம்

“100 வெள்ளிப்பணம்” அல்லது “நூறு நாள் கூலி”

பிடித்து

“எடுத்துப் பிடித்து” அல்லது “கைப்பற்றி” (UDB)

தாழ விழுந்து...என்னோடு பொறுமையாக இருங்கள், நான் உங்களுக்கு திரும்பக் கொடுப்பேன்

“தாழ விழுந்து...என்னோடு பொறுமையாக இருங்கள், நான் உங்களுக்கு திரும்பக் கொடுப்பேன்” என்று மத்தேயு 18:26 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.

Matthew 18:30

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.

Matthew 18:32

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.

பின்பு அந்த வேலைக்காரனின் எஜமான் அவனை அழைத்தான்

“பின்பு அந்த ராஜா தன்னுடைய முதல் வேலைக்காரனை அழைத்தான்”

நீ செய்யவேண்டாமா

“நீ செய்திருக்கவேண்டும்”

Matthew 18:34

இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.