Matthew 16

Matthew 16:1

இயேசுவுக்கும் மதத் தலைவர்களுக்கும் உண்டான சந்திப்பை இது ஆரம்பிக்கிறது.

பரலோகம்...பரலோகம்

யூதத் தலைவர்கள் தேவனிடமிருந்து அடையாளத்தைக் கேட்டார்கள். ஆனால் இயேசு அவர்களைப் பார்க்கக்கூடிய ஆகாயத்தைப் பார்க்கச்சொன்னார். வாசகர்களுக்குப் புரியும் என்றால் தேவன் வாழுமிடத்திற்கும் ஆகாயத்திற்கும் ஒரே வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

சாயங்காலமானபோது

அந்த நாளில் சூரியன் மறையும் நேரம்

நல்ல காலநிலை

தெளிந்த, அமைதியான, ரம்மியமான

வானம் சிவந்து

சிவப்பான சூரிய அஸ்தமனத்தோடு ஆகாயம் வெளிச்சமாகவும் சிவப்பாகவும் இருக்கிறது

Matthew 16:3

இயேசுவுக்கும் மதத் தலைவர்களுக்கும் உண்டான சந்திப்பை இது தொடரச்செய்கிறது.

மோசமான காலநிலை

“மேகமூட்டமான இடியுமான காலநிலை”

இறக்கி

“அந்தகாரமும் பயங்கரமுமான”

ஒரு அடையாளமும் அதற்குக் கொடுக்கப்படாது

மறு மொழிபெயர்ப்பு: “தேவன் உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் கொடார்”

Matthew 16:5

இயேசு மதத்தலைவர்களிடம் சந்தித்தப்பிறகு தன் சீடர்களை எச்சரித்தார்.

புளிப்புச்சத்து

தீமையானக் கருத்துக்களும் தவறான போதனையும்

காரணம்

“விவாதம்” அல்லது “வாதம்”

Matthew 16:9

இயேசு மதத்தலைவர்களிடம் சந்தித்தப்பிறகு தன் சீடர்களை எச்சரித்தார்.

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்குக் கொடுத்ததையும், பின்பு நீங்கள் எத்தனைக் கூடைகளை சேகரித்தீர்கள் என்பதையும், ஏழு அப்பங்களை நான்காயிரம் பேருக்குக் கொடுத்ததையும், பின்பு நீங்கள் எத்தனைக் கூடைகள் சேகரித்தீர்கள் என்பதையும் நினைவிலில்லையா?

இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார். மறு மொழிபெயர்ப்பு: “ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்குக் கொடுத்ததையும் எத்தனைக் கூடைகளை சேகரித்தீர்கள் என்பதையும், நீங்கள் புரிந்து நினைவில் வைத்திருந்திருக்க வேண்டும். ஏழு அப்பங்களை நான்காயிரம் பேருக்குக் கொடுத்ததையும், பின்பு நீங்கள் எத்தனைக் கூடைகள் சேகரித்தீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து நினைவில் வைத்திருந்திருக்கவேண்டும்.”

Matthew 16:11

இயேசு மதத்தலைவர்களிடம் சந்தித்தப்பிறகு தன் சீடர்களை எச்சரித்தார்.

நான் உங்களிடத்தில் அப்பத்தைக் குறித்து தான் பேசினேன் என்று எப்படி நீங்கள் அறியாதிருந்தீர்கள்?

“உங்களிடம் அப்பத்தைக் குறித்து தான் பேசினேன் என்று நீங்கள் புரிந்திருந்திருக்க வேண்டும்.”

புளிப்புச்சத்து

தீய கருத்துக்கள் மற்றும் தவறான போதனைகள்

அவர்கள்...அவர்களுக்கு

“சீடர்கள்”

Matthew 16:13

இயேசு தேவனுடைய குமாரன் என்பதைப் பேதுரு ஒப்புக்கொண்டான்.

ஆனால் நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?

“ஆனால் உங்களிடம் நான் கேட்கிறேன்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?”

Matthew 16:17

இயேசு தேவனுடையக் குமாரன் என்ற பேதுருவின் ஒப்புதலுக்கு இயேசு பிரதியுத்திரம் சொன்னார். சீமான் யோனாவின் குமாரன் “யோனாவின் குமாரனாகிய சீமோனே” மாமிசமும் ரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை “ஒரு மனுஷனும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை” பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “மரணத்தின் வல்லமை அதை மேற்கொள்ளுவதில்லை” (UDB பார்) 2. “ஒரு பட்டணத்தை ராணுவம் உடைத்து முன்னேறுவது போல, அது மரணத்தின் வல்லமையை உடைக்கும்.”

Matthew 16:19

இயேசு தேவனுடையக் குமாரன் என்ற பேதுருவின் ஒப்புதலுக்கு இயேசு பிரதியுத்திரம் சொன்னார்.

பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்

ஒரு வீட்டுக்குள் வேலைக்காரன் விருந்தாளிகளை வரவேற்கிறது போல தேவனுடைய பிள்ளைகளாகும்படி மக்களுக்கு வழியைத் திறக்கிற ஒரு பெலன்.

பூமியில் கட்டப்பட்டு...பரலோகத்தில் அவிழ்க்கப்பட்டு

பரலோகத்தில் செய்யப்படுவது போல மனுஷர் மன்னிக்கப்பட்டார்கள் அல்லது தண்டிக்கப்பட்டார்கள் என்று அறிவிக்க.

Matthew 16:21

இயேசு தன் சீடர்களுக்கு தன்னைப் பின்பற்றுவதற்கான விலையை சொல்லத் துவங்கினார்.

அந்த நேரத்திலிருந்து

தானே கிறிஸ்து என்று யாரிடமும் சொல்லவேண்டாம் என்று தனது சீடர்களுக்கு இயேசு கட்டளையிட்டப் பிறகு, தனக்கான தேவத் திட்டத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

கொல்லப்பட்டு

மறு மொழிபெயர்ப்பு: “அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள்”

மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படுவார்.

மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படுவார்

“மூன்றாம் நாளில், தேவன் அவரை மறுபடியும் உயிருள்ளவராக்குவார்”

Matthew 16:24

இயேசு தன் சீடர்களுக்கு தன்னைப் பின்பற்றுவதற்கான விலையைச் சொல்வதைத் தொடர்ந்தார்.

என்னை பின்பற்றுங்கள்

“சீடனாய் என்னோடு வாருங்கள்”

தன்னைத்தான் மறுத்து

“தன்னுடைய சொந்த விருப்பங்களுக்குத் தன்னைக் கொடாமல்” அல்லது “தன்னுடைய விருப்பங்களைத் தள்ளி.”

அவனுடைய சிலுவையை சுமந்து, என்ன பின்பற்றக்கடவன்

“தன்னுடைய சிலுவையைச் சுமந்து, என் பின்னே நடந்து,” கிறிஸ்து பாடுபடுவதற்கும் மரிப்பதற்கும் முனைந்ததைப் போல இருக்கவும்”

விரும்புபவர் யாராயினும்

“விரும்பும் யாராயினும்”

முழு உலகத்தையும் ஆதாயப்படுத்தினாலும்

“உலகத்திலுள்ள எல்லாவற்றையும் ஆதாயப்படுத்தினாலும்”

அவனுடைய வாழ்வை இழந்தால்

“அவனே தொலைந்து அல்லது அழிக்கப்பட்டு”

Matthew 16:27

இயேசு தன் சீடர்களுக்கு தன்னைப் பின்பற்றுவதற்கான விலையை சொல்வதைத் தொடர்ந்தார்.

மனுஷக்குமாரன் தன்னுடைய ராஜ்ஜியத்தில் வருவதைப் பார்க்காமல் மரணத்தை ருசியார்கள்

“அவர்கள் மரிக்கும் முன்பு மனுஷக்குமாரன் தன்னுடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பார்கள்”

மரணத்தை ருசியார்கள்

“மரணத்தை அனுபவியார்கள்” அல்லது “மரிக்கமாட்டார்கள்”

மனுஷக் குமாரன் தன்னுடைய ராஜ்யத்தில் வருகிறார்

“என்னுடைய ராஜ்யத்தில் நான் வருகிறதைக் காணும் வரையில்”