இந்த அதிகாரத்தில், கடற்கரை அருகில் ஒரு படகில் அமர்ந்து இயேசு பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளை திரளான மக்களுக்குக் கூறி விவரித்தார்.
முந்தின அதிகாரத்தில் நடந்த சம்பவங்கள் நடந்த அதே நாளில் இவைகளும் நடந்தது.
இயேசு யார் வீட்டில் தங்கி இருந்தார் என்று குறிப்பிடப்படவில்லை
இது ஒரு திறந்த மரத்தாலான கட்டுமரத்தோடுக்கூடிய மீன்பிடி படகாக இருக்கலாம்.
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்தார்.
இயேசு அநேகக் காரியங்களை உவமைகள் வாயிலாக அவர்களுக்கு சொன்னார்.
“இயேசு அநேகக் காரியங்களை உவமைகளில் சொன்னார்”
திராளான மக்களுக்கு
மறு மொழிபெயர்ப்புகள்: “பார்” அல்லது “கவனி” “நான் சொல்ல வருவது என்ன என்பதற்கு கவனம் செலுத்து”
“விதைப்பவன் விதைக்கையில்”
நிலத்தின் அருகிலுள்ள “பாதை.” மக்கள் நடமாட்டத்தினால் அது கடினமாக இருந்திருக்கலாம்.
“எல்லா விதைகளையும் உண்டது”
பாறைகள் மேல் இருக்கும் உதிர் மண்
“விதைகள் உடனே தழைத்து வளர்ந்தது”
“சூரியன் செடிகளை சுட்டெரித்ததால் அவைகள் மிகவும் சூடாயிற்று””
“செடிகள் காய்ந்து செத்தது”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
“முட்செடிகளும் வளரும் இடத்தில் அவைகள் விழுந்தது”
“புதிய துளிர்களை திணறடித்தது.” களைகள் நல்ல செடிகளை வளரவிடாமல் தடுப்பதைக் குறிக்கும் பொதுவான சொல்லைப் பயன்படுத்தவும்.
“அறுவடைத் தந்தது” அல்லது “அநேக விதைகளை வளரச் செய்தது” அல்லது “கனி தந்தது”
இரண்டாம் நபர் இலக்கணத்தை பயன்படுத்துவது சில மொழிகளில் இயற்கையாக இருக்கலாம்: “கேட்பதற்கு காதுள்ள நீங்கள், கேளுங்கள்.”
“கேட்கக்கூடிய யாராயினும்” அல்லது “என்னைக் கேட்கிற யாராயினும்”
“நன்றாக அவன் கேட்கட்டும்” அல்லது “நான் சொல்லுவதற்கு அவன் கவனம் செலுத்தட்டும்”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
சீடர்களுக்கு
மறைத்துவைக்கப்பட்டத் தகவலைத் தந்து இதை செய்வினை வடிவில் மொழிபெயர்க்கலாம்: “தேவன் உங்களுக்கு பரலோக ரஜ்ஜியத்தின் மர்மங்களை அறிந்துகொள்ளும் பாக்கியம் கொடுத்திருக்கிறார், ஆனால் தேவன் அவர்களுக்குக் கொடுக்கவில்லை” அல்லது “தேவன் உங்களைப் பரலோக ராஜ்ஜியத்தின் மர்மங்களை அறிந்துகொள்ள பலனைத் தந்திருக்கிறார், ஆனால் அவர் இந்த மக்களை பெலப்படுத்தவில்லை.”
சீடர்கள்
மறைத்துவைக்கப்பட்டிருந்த சத்தியங்களை இயேசு இப்பொழுது வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். மறு மொழிபெயர்ப்பு: “ரகசியங்கள்” அல்லது “மறைக்கப்பட்ட சத்தியங்கள்” (UDB பார்).
“புரிந்துகொள்ளுதல் யாருக்கு இருக்கிறதோ” அல்லது “நான் கற்றுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளும் யாராயினும்.”
இது செய்வினை வடிவில்: “தேவன் அவனுக்கு அதிக புரிந்துகொள்ளுதளைக் கொடுப்பார்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
“அவன் தெளிவாகப் புரிந்துகொள்ளுவான்”
“புரிந்துகொள்ளுதல் இல்லாத எவரும்” அல்லது “நான் கற்றுக்கொடுப்பதை ஏற்றுக்கொள்ளாத யாராயினும்”
இது செய்வினை வடிவில்: “தேவன் அவனிடம் உள்ளதை எடுத்துக்கொள்ளுவார்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
“அவர்களிடம்” என்ற பிரதிப்பெயர் இந்த இரண்டு வசனங்கள் முழுவதிலும் அந்த திரளான மக்கள் கூட்டத்தையே குறிக்கிறது.
இயேசு இந்த இணைப்போக்கை மக்கள் கூட்டம் புரிந்துகொள்ள மறுத்ததைத் தன் சீடர்களிடம் தெரிவிக்கப் பயன்படுத்தினார்.
“அவர்கள் பார்த்தாலும், அவர்கள் உணர்ந்தறிவதில்லை.” வினைச் சொற்கள் வினை செய்யப்படும் பொருளைக் கேட்டால், இது “அவர்கள் காரியங்களைப் பார்த்தாலும் அவைகளைப் புரிந்துகொள்ளுவதில்லை” அல்லது “நடக்கிறவைகளை அவர்கள் பார்த்தாலும், அவைகள் என்ன அர்த்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
“அவர்கள் கேட்டாலும், புரிந்துகொள்ளுவதில்லை.” வினைச் சொற்கள் வினை செய்யப்படும் பொருளைக் கேட்டால், இது, “உபதேசங்களைக் கேட்டாலும், சத்தியத்தை புரிந்துகொள்ளுவதில்லை” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
ஏசாயாவின் நாட்களில் விசுவாசமில்லாத மக்களைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசியின் கூற்றை இது துவங்குகிறது. இயேசு இந்தக் கூற்றை தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் மக்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். இது மற்றொரு இணைப்போக்கு ஆகும்.
இது, “நீங்கள் கேட்பார்கள், ஆனால் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.” என்று மொழிபெயர்க்கப்படலாம். வினைச் சொற்கள் வினை செய்யப்படும் பொருளைக் கேட்டால், இது, “நீங்கள் காரியங்களைக் கேட்கிறீர்கள் ஆனால் அவைகளைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.”
“நீங்கள் பார்க்கிறீர்கள், அனால் நீங்கள் உணர்ந்தறிவதில்லை.” வினைச் சொற்கள் வினை செய்யப்படும் பொருளைக் கேட்டால், இது,”நீங்கள் காரியங்களைப் பார்கிறீர்கள், ஆனால் அவைகளை உணர்ந்தறிவதில்லை.”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். மத்தேயு 13:13|13:14 ல் துவங்கின ஏசாயாவின் வார்த்தைகளைக் கூறுவதைத் திரும்பக் கூறத் தொடர்ந்தார்.
“இந்த மக்கள் இனி ஒருபோதும் கற்றுக்கொள்ளமாட்டார்கள்” (UDB பார்)
“கவனிக்க அவர்கள் இனி ஒருபோதும் வாஞ்சியர்கள்” (UDB பார்)
“அவர்கள் கண்களை அவர்கள் மூடிக்கொண்டார்கள்” அல்லது “அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்”
“அதனால் அவர்கள் கண்களால் அவர்களுக்குப் பார்க்க முடிவதில்லை, செவிகளால் கேட்க முடிவதில்லை, இருதயத்தில் புரிந்துகொள்ள முடிவதில்லை, பலனாக மறுபடியும் திரும்ப முடிவதில்லை.”
“பின் திரும்பு” அல்லது “மனந்திரும்பு”
“நான் அவர்களைக் குணப்படுத்த வையுங்கள்.” மறு மொழிபெயர்ப்பு: “நான் அவர்களை மறுபடியும் ஏற்றுக்கொள்ள வையுங்கள்.”.”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
இயேசு தனது சீடர்களிடம் பேசுகிறார்
“அவர்களால் பார்க்க முடிகிறது” அல்லது “அவர்களுக்குப் பார்க்க பெலன் இருக்கிறது”
“அவர்களால் கேட்க முடிகிறது” அல்லது “அவர்களுக்குப் கேட்க பெலன் இருக்கிறது”
“நான் செய்ய நீங்கள் பார்த்த காரியங்கள்”
“நான் பேச நீங்கள் கேட்ட காரியங்கள்”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். மத்தேயு 13:3,7, 8 இல் சொன்ன உவமையை இங்கு விளக்குகிறார்.
“சாத்தான் வந்து அவன் கேட்ட தேவனுடைய வார்த்தையை மறக்கச் செய்கிறான்.”
சரியான சொந்தக்காரனிடமிருந்து அவனுடையதைப் பிடுங்கிக் கொண்டு போகிறதைக் குறிக்கும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.
இது செய்வினை வடியில்: “தேவன் அவன் இருதயத்தில் விதைத்த வார்த்தை.”
கவனிக்கிறவனுடைய இருதயத்தில்
எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு அறிவுண்டாக்கவில்லை என்றால், இயேசு தான் விதைப்பவர், செய்தி தான் விதை, கேட்பவர் தான் வழியருகே உள்ள நிலம் என்று புரியும்படி மொழிபெயர்க்கவும். சாத்தியமான மொழிபெயர்ப்பு: “இது தான் வழியருகே விதைக்கப்பட்டவையுடன் நடப்பவை.”
“சாலை” அல்லது “பாதை.” மத்தேயு 13:03|13:4 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். மத்தேயு 13:3, 7, 8 இல் சொன்ன உவமையை இங்கு விளக்குகிறார்
எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு அறிவுண்டாக்கவில்லை என்றால், இயேசு தான் விதைப்பவர், செய்தி தான் விதை, கேட்பவர் தான் பாறையான நிலம் என்று புரியும்படி மொழிபெயர்க்கவும். சாத்தியமான மொழிபெயர்ப்பு: “இது தான் பாறையான நிலத்தில் விதைக்கப்பட்டவையுடன் நிலைமை.”
“அவனுக்கு மேலோட்டமான வேர்களே உள்ளது” அல்லது “அவன் இளமையான செடியின் வேர்களுக்கு இடம் தருவதில்லை”
“செய்தியினால்”
“உடனே விழுந்துபோகிறான்” அல்லது “உடனே தனது விசுவாசத்தை விட்டுவிட்டான்.”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். மத்தேயு 13:3, 7, 8 இல் சொன்ன உவமையை இங்கு விளக்குகிறார்
எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு அறிவுண்டாக்கவில்லை என்றால், இயேசு தான் விதைப்பவர், செய்தி தான் விதை, கேட்பவன் தான் முட்செடி உள்ள நிலம் என்று புரியும்படி மொழிபெயர்க்கவும். சாத்தியமான மொழிபெயர்ப்பு: “இது தான் முட்செடி உள்ள நிலத்தில் விதைக்கப்பட்டவையின் நிலைமை... இது தான் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவையின் நிலைமை.”
“செய்தி”
இது, “களைகள் நல்ல செடிகள் வளருவதிலிருந்து தடுப்பது போல, உலகக் கவலையும் செல்வத்தின் வஞ்சனையும் இந்த மனிதனை கனிகொடுப்பதிலிருந்து தடுக்கிறது” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
“இந்த உலகத்தில் மக்கள் கவலைப்படும் காரியங்கள்”
“உற்ப்பத்தியற்று போனது”
“இவைகள் தான் கனியுள்ளதும் உற்பத்தி செய்கிறதுமானவைகள்” அல்லது “பலமுள்ள செடிகள் நல்ல கனிகள் தருவது போல, இந்த மக்கள் உற்பத்தி செய்வர்.”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
திரளான மக்களுக்கு இயேசு மற்றொரு உவமையைச் சொன்னார்.
இந்த மொழிபெயர்ப்பு பரலோக ராஜ்யத்தை ஒரு மனிதனுக்கு இணையாக சொல்லக்கூடாது. ஆனால் பரலோக ராஜ்ஜியம் இங்கு கூறப்பட்டுள்ள உவமையில் உள்ள சூழ்நிலையைப் போன்றது.
“நல்ல உணவு விதைகள்” அல்லது “நல்ல தானிய விதைகள்.” இயேசு கோதுமையைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் நினைத்திருப்பார்.
“அவன் எதிரி நிலத்துக்கு வந்தான்.”
இது ,”கெட்ட விதை” அல்லது “களை விதைகள்.” இந்தக் களைகள் இளமையில் நல்ல செடி போலத் தோன்றும், ஆனால், அந்த தானியம் விஷமாக இருக்கிறது.
“கோதுமையின் விதைகள் முளைக்கையில்” அல்லது “செடிகள் மேலே வந்த பொழுது”
“தானியத்தை உற்பத்திசெய்து” அல்லது “கோதுமை தானியத்தை உற்பத்திசெய்து”
மறு மொழிபெயர்ப்பு: “பின்பு மக்கள் களைகளும் நிலத்தில் இருக்கிறது என்று பார்ப்பார்கள்.”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். இந்த வசனங்கள் களைகளின் உவமையைத் தொடர்கிறது.
நல்ல விதையை நிலத்தில் விதைத்த அதே மனிதன்
“உங்கள் நிலத்தில் நல்ல விதைகளை விதைத்தீர்கள்.” நில உரிமையாளன் அநேகமாக வேலைக்காரர்களை வைத்து விதை விதைத்திருப்பான் (UDB பார்).
“நில உரிமையாளன் வேலைக்காரர்களிடம் சொன்னான்”
“நாங்கள்” என்ற வார்த்தை வேலைக்காரர்களைக் குறிக்கிறது.
வீசி எறியும்படி “களைகளைப் பிடுங்கி”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். இந்த வசனங்கள் களைகளின் உவமையை முடிக்கிறது.
“நில உரிமையாளன் தன் வேலைக்காரர்களிடம் சொல்லுகிறான்”
இதை செய்யப்பாடுவினையாக மொழிபெயர்க்கலாம்: “நான் அறுப்பவர்களிடம் களைகளை முதலில் பிடுங்கி எரிப்பதற்காக கட்டாக அவைகளைக் கட்டி, கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள்,” என்று சொல்லுவேன்.
தானியங்களை சேர்த்து வைக்கப் பயன்படும் விவசாய நிலத்தில் உள்ள ஒரு கட்டிடம்.
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
“இயேசு இன்னொரு உவமையை திரளான மக்களுக்கு சொன்னார்”
மத்தேயு 13:24 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
பெரிய செடியாக வளரும் ஒரு மிகச் சிறிய விதை மற்ற எல்லா விதைகளைப் பார்க்கிலும் இந்த விதை சிறியது.
ஆனால் அது வளரும்போது
“ஒரு பெரிய புதர் ஆகும்”
“பறவைகள்”
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
“இயேசு கூட்டத்தாருக்கு இன்னொரு உவமையைச் சொன்னார்”
மத்தேயு 13:24 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள். பரலோக ராஜ்ஜியம் புளிப்புச்சத்து பரப்புவதைப்போல இருக்கிறது.
“நிறைய மாவு” அல்லது நிறைய மாவை உங்கள் மொழியில் சொல்லப்படும் வார்த்தையைப் பயன்படுத்தவும் (UDB பார்).
மாவு எழும்பும்வரை. உள்வைத்து சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால் புளிப்புச்சத்தும் மூன்று படி மாவும் ரொட்டி சுடும் பிசைந்த மாவாக மாற்றப்பட்டது.
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
வரிசை “சொன்னார்...உவமைகள்...உவமைகள்...சொன்னார்” என்பது அவர் அவர்களிடம் உவமைகளாகச் சொன்னார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மத்தேயு 13:1 ல் இயேசு போதிக்கத் துவங்கினதை இது குறிக்கிறது. உவமைகள் அல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. “உவமைகள் அன்றி அவர்களுக்கு அவர் ஒன்றும் போதிக்கவில்லை.” மறு மொழிபெயர்ப்பு: “அவர்களுக்கு # அவர் சொன்னது ஒவ்வொன்றும் உவமையில் சொன்னார்.”
அவர் சொன்னபோது, தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது உண்மையைப் போகலாம். அவர் சொன்னபோது, தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது உண்மையைப் போகலாம்.
செய்வினைச் சொல்லாக, “தேவன் தீர்க்கதரிசிகளுள் ஒருவனுக்கு முன்பு சொன்னதை உண்மை ஆக வைத்தார்” (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.
“தீர்க்கதரிசி சொன்னபோது”
செயவினைச் சொல்லாக, “தேவன் மறைத்து வைத்தக் காரியங்கள்.”
“உலகத்தின் துவக்கம் முதல்” அல்லது “தேவன் உலகத்தை உருவாக்கியதிலிருந்து.”
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளை விவரித்தார்.
“வீட்டுக்குள்ளே போய்” அல்லது “அவர் தங்கியிருந்த வீட்டுக்குள் போய்.”
“விதைக்கிறவன்”
இயேசு தன்னைத்தான் குறிப்பிடுகிறார்.
“ராஜ்ஜியத்திற்கு உரியவர்கள்”
“பொல்லாதவனுக்கு உரியவர்கள்”
களைகளை விதைக்கும் எதிரியானவன்
“காலத்தின் முடிவு”
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளை விவரிக்க துவங்கினார்..
செய்வினைச் சொற்களோடு, “ஆதலால், மனுஷர் களைகளை சேர்த்து அக்கினியில் எரிப்பது போல.” மொழிபெயர்க்கலாம்.
“காலத்தின் முடிவு”
இயேசு இங்கு தமக்காகப் பேசுகிறார். இதை, “மனுஷக்குமாரனாகிய நான் தூதர்களை அனுப்புவேன்” என்று மொழிபெயர்க்கலாம்.
“நெறிமுறையின்றி செயல்படுபவர்கள் அல்லது “தீயவர்கள்”
அக்கினி சூளை
“தீச்சூளை” என்று இதை மொழிபெயர்க்கலாம். “சூளை” என்பது என்னவென்று தெரியவில்லை என்றால், “அடுப்பு”என்று மொழிபெயர்க்கப்படலாம்.
“சூரியனைப் பார்ப்பது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக”
முன்னிலை இலக்கண பயன்பாடு சில மொழிகளில் இயற்கையாகவே இருக்கும்: “காதுள்ள நீங்கள் கேட்கக்கடவீர்கள்,” அல்லது “உங்களுக்கு காதுள்ளது ஆதலால், கேளுங்கள்.”
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளைத் தொடர்ந்து விவரித்தார். இந்த இரண்டு உவமைகளில், இயேசு இரண்டு உவமைகளை உபயோகித்து தனது சீடர்களுக்கு பரலோக ராஜ்ஜியம் எப்படி எதற்கு ஒப்பனையாய் இருக்கிறது என்று போதித்தார்..
இதை மத்தேயு 13:24 இல் மொழிபெயர்த்தது எவ்வாறென்று பார்க்கவும்.
பொக்கிஷம் என்பது மிகவும் விலையேறப்பெற்ற, மதிப்புமிக்க, சேகரிக்கப்பட்ட பொருட்கள். இது செயவினைச் சொல்லோடு: “நிலத்தில் யாரோ ஒருவனால் புதைக்கப்பட்ட பொக்கிஷம்”
“அதை மூடி”
மறைத்துச் சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால், நிலத்தை வாங்குகிறவன் அங்கு புதைக்கப்பட்டுள்ள பொக்கிஷத்தை அடையும்படி அதை வாங்குகிறான்.
வியாபாரி என்பவன் மொத்தமாக வியாபாரம் செய்பவன்; பெரும்பாலும் தூர இடங்களிலிருந்து பொருட்களை வாங்கி விற்கிறவன்.
மறைத்துச் சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால் தான் வாங்குவதற்காக விலையேறப்பெற்ற முத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்
“சிறந்த முத்துக்கள்” அல்லது “அழகான முத்துக்கள்” என்று மொழிபெயர்க்கலாம். “முத்து” என்பது கெட்டியான, வழுவழுப்பான, மினுமினுப்பான, கடலுக்குள் இருக்கும் நத்தையின் உள்ளே உருவாகி வெள்ளை அல்லது மிதமான நிறமுடைய கொட்டை போல் இருக்கும். இது மாணிக்கமாக அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறதும், அல்லது விலையேறப்பெற்ற அணிகலனை உருவாக்கவும் பயன்படும்.
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளைத் தொடர்ந்து விவரித்தார். இந்த இரண்டு உவமைகளில், இயேசு இரண்டு உவமைகளை உபயோகித்து தனது சீடர்களுக்கு பரலோக ராஜ்ஜியம் எப்படி எதற்கு ஒப்பனையாய் இருக்கிறது என்று போதித்துக்கொண்டிருந்தார்.
இதை மத்தேயு 13:24 இல் மொழிபெயர்த்தது எவ்வாறென்று பார்க்கவும். # பரலோக ராஜ்ஜியம் வலை போல அல்லாமல், எல்லா வகை மீன்களைப் பிடிக்கும் வலை போல எல்லா மனுஷரையும் இழுக்கும். கடலில் வீசப்பட்ட வலைப் போல செயவினைச் சொல்லோடு: “சில மீனவர்கள் கடலில் வீசும் வலைப் போல.”
“ஒரு ஏரியில் வீசப்பட்ட வலை”
“எல்லா வகை மீன்களையும் பிடித்து”
“கடற்கரைக்கு வலையை இழுத்து” அல்லது “கரைக்கு வலையை இழுத்து”
“நல்லவைகள்”
தகுதியில்லாதவைகள்
கெட்ட மீன்கள்” அல்லது “சாப்பிட முடியாத மீன்கள்”
“வைத்துக்கொள்ளவில்லை”
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளைத் தொடர்ந்து விவரித்தார்.
“காலத்தின் முடிவு”
“வெளியே வந்து” அல்லது “வெளியே போய்” அல்லது “பரலோகத்திலிருந்து வந்து”
“துன்மார்க்கரை வீசி”
“தீச்சூளை” என்று மொழிபெயர்க்கலாம். பழைய ஏற்பாடு புஸ்தகம் தானியல் 3:6 இல் பாதாளத்தின் அக்கினிக்கு உருவகமாக இருக்கிறது. “சூளை” என்பது என்ன என்று தெரியவில்லை என்றால் “அடுப்பு” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம்.
“துன்மார்க்கர் அழுதும் பற்கடிக்கும் இடம்”
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளைத் தொடர்ந்து விவரித்தார்.
தேவையென்றால், செய்யப்பாட்டு வினையாக: “இவையெல்லாம் புரிந்ததா என்று இயேசு அவர்களைப் பார்த்து கேட்டார். அதற்கு அவர்கள் சொன்னார்கள்.”
“...குறித்துக் கற்றுக்கொண்டு”
பொக்கிஷம் என்பது மிகவும் விலையேறப்பெற்ற, மதிப்புமிக்க, சேகரிக்கப்பட்ட பொருட்கள். இங்கு, இவைகள் சேகரிக்கப்பட்டுள்ள இடத்தைக் குறிக்கலாம், “பொக்கிஷச்சாலை” அல்லது “சேமிப்புக்கிடங்கு.”
இயேசுவின் சொந்த ஊரில் அவர் ஜெப ஆலயத்தில் கற்பிக்கும்போது எவ்வாறு அவர் சொந்த மக்களால் மறுக்கப்பட்டார் என்பதன் கணக்கு இது.
“சொந்த ஊர்” (UDB பார்)
“அவர்கள்” என்ற பிரதிப்பெயர் அவ்விடத்தின் மக்களைக்குறிக்கிறது.
“அவர்கள் அதிசயித்துப்போயினர்”
“இந்த அற்புதங்களைச் செய்ய எங்கிருந்து இவருக்கு வல்லமைக் கிடைக்கிறது”
மரத்திலிருந்தோ அல்லது கற்களிலிருந்தோ பொருட்களைச் செய்கிறவன் தச்சன் ஆவான். “தச்சன்” யார் என்பதுத் தெரியவில்லை என்றால், “கட்டுபவன்” என்ற வார்த்தை உபயோகப்படுத்தலாம்.
இயேசுவின் சொந்த ஊரில் அவர் ஜெப ஆலயத்தில் கற்பிக்கும்போது எவ்வாறு அவர் சொந்த மக்களால் மறுக்கப்பட்டார் என்பதைத் தொடர்ந்து இது சொல்லுகிறது.
“இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவரிடம் எதிர்த்து நின்றார்கள்” அல்லது “...அவரை ஏற்றுக்கொள்ளவில்லை”
“எல்லா இடங்களிலேயும் கனம்பெற்றவன் தீர்க்கதரிசி” அல்லது “ஒரு தீர்க்கதரிசி எல்லா இடங்களிலேயும் கனம் பெறுகிறான்” அல்லது “மனுஷர் தீர்க்கதரிசியை எங்கும் கனப்படுத்துகிறார்கள்”
“அவர் சொந்த இடம்” அல்லது “அவர் சொந்த ஊர்”
“அவர் சொந்த வீடு”
“இயேசு தனது சொந்த ஊரில் எந்த அற்புதங்களையும் அவர் செய்யவில்லை”