Matthew 12

Matthew 12:1

ஓய்வு நாளில் தங்கள் பசியைப் போக்க தனது சீடர்கள் பயிரை பறித்ததற்காக பரிசேயர்களால் குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு அவர்களை வாதாடிக் காப்பாற்றினார்.

பயிர்நிலங்கள்

பயிர் விதைக்குமிடம். கோதுமை என்பது என்ன என்று தெரிவில்லை என்றால் “பயிர்” என்ற வார்த்தை மிகவும் பொதுவாக இருந்தால், “ரொட்டி செய்யப் பயன்படும் பயிரை விதைக்குமிடம்” என்று மொழிபெயர்க்கவும்.

கதிர்களைக் கொய்து அவைகளை உண்டு...ஓய்வுநாளில் செய்யத்தகாதை செய்து

மற்றவர் விளைநிலத்தில் கதிர்களைக் கொய்து அவைகளை உண்பது திருட்டாக எண்ணப்படவில்லை (UDB பார்). கேள்வி என்னவென்றால் ஓய்வுநாளில் செய்யத்தகாததை செய்யலாமா என்பதுதான்.

அவர்களுக்கு

கதிர்கள்

கதிர்கள்

ஒரு புல் போல் இருக்கும், கோதுமை தானியத்தின் தலைப் பகுதி. அது பயிரின் விதிகளையோ அல்லது முதிர்ந்த தானியங்களையோ கொண்டிருக்கும்.

பார்

மறு மொழிபெயர்ப்பு: “பார்” அல்லது “கவனி” அல்லது “நான் உங்களுக்கு சொல்வதை கவனமாய்க் கேள்.”

Matthew 12:3

ஓய்வு நாளில் தங்கள் பசியைப் போக்க தனது சீடர்கள் பயிரை பறித்ததற்காக பரிசேயர்களால் குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு அவர்களை வாதாடிக் காப்பாற்றுவதைத் தொடர்ந்தார்.

அவர்களுக்கு...நீங்கள்

பரிசேயர்கள்

நீங்கள் படித்திருக்கவில்லையா?

இயேசு பரிசேயர்களை தாங்கள் வாசித்தவைகளிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று மென்மையாக கடிந்துகொள்கிறார். மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் வாசித்ததிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.”

அவன்...அவனுக்கு

தாவீது

சமூகத்தப்பம்

தேவனுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதும் அவருக்குக் கொடுக்கப்பட்டதுமான அப்பம்

அவனோடு இருந்தவர்கள்

“தாவீதும் அவனோடிருந்த மனிதரும்”

சட்டத்திற்கு உட்பட்டு ஆசாரியர்களுக்கு மட்டும்

“ஆசாரியர்கள் மட்டுமே அதை உண்ண அனுமதிக்கப்படுவர்”

Matthew 12:5

ஓய்வு நாளில் தங்கள் பசியைப் போக்க தனது சீடர்கள் பயிரை பறித்ததற்காக பரிசேயர்களால் குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு அவர்களை வாதாடிக் காப்பாற்றுவதைத் தொடர்ந்தார்.

நீங்கள்...நீங்கள்

பரிசேயர்கள்

நியாயபிரமாணத்தில் வாசித்ததில்லையா?

“நீங்கள் நியாயப்பிரமாணத்தில் வாசித்திருகிறீர்கள், அதனால் இவ்வாறு அது சொல்லுகிறது என்று அறிவீர்கள்”

ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தி

“மற்ற நாளில் செய்வதை ஓய்வு நாளில் செய்வது”

குற்றமில்லாதிருக்கிறார்கள்

“தேவன் அவர்களை தண்டிப்பதில்லை”

தேவாலயத்திலும் பெரியவர்

“தேவாலயத்திலும் பெரியவர் ஒருவர்.” இயேசு தன்னையே பெரியவர் என்று குறிப்பிடுகிறார்.

Matthew 12:7

ஓய்வு நாளில் தங்கள் பசியைப் போக்க தனது சீடர்கள் பயிரை பறித்ததற்காக பரிசேயர்களால் குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு அவர்களை வாதாடிக் காப்பாற்றுவதைத் தொடர்ந்தார்.

உங்களுக்குத் தெரிந்திருந்தால்

“நீங்கள் தெரிந்திருக்கவில்லை”

நீங்கள்...நீங்கள்

பரிசேயர்கள்

இரக்கத்தையே விரும்புகிறேன், பலியை அல்ல

பலிகள் நல்லது, ஆனால் இரக்கம் இன்னும் நல்லது.

இது என்ன அர்த்தப்படுகிறது

“தேவன் வேதத்தில் சொன்னவைகள்”

நான் விரும்புகிறேன்

“நான்” என்ற பிரதிப்பெயர் தேவனைக் குறிக்கிறது.

Matthew 12:9

இயேசு தான் ஒருவனை ஓய்வுநாளில் குணமாகினதைக் குற்றப்படுத்தின பரிசேயர்களுக்கு பதிலளிக்கிறார்.

இயேசு அங்கிருந்து சென்றார்

“இயேசு பயிர்நிலத்தை விட்டுச் சென்றார்”

அவர்களுடைய

அவர் பேசிக்கொண்டிருந்த பரிசேயர்களுடைய ஜெப ஆலயத்தில்

இதோ

“இதோ” என்ற வார்த்தை கதையில் ஒரு புதிய மனிதனுக்கு நம்மை அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய வேறு வழி இருக்கலாம்.

உளர்ந்த கை

“சுருங்கின” அல்லது “கைமுட்டியினுள் வளைந்த”

Matthew 12:11

இயேசு தான் ஒருவனை ஓய்வுநாளில் குணமாகினதைக் குற்றப்படுத்தின பரிசேயர்களுக்குத் தொடர்ந்து பதிலளிக்கிறார்.

உங்களில் எந்த மனிதன்...பிடித்து...வெளியே தூக்கிவிடமாட்டான்?உங்களில் எந்த மனிதன்...பிடித்து...வெளியே தூக்கிவிடமாட்டான்?

மறு மொழிபெயர்ப்பு: “உங்களில் அனைவரும்...அதைத்தூக்கி வெளியே விடுவீர்கள்.”

அவர்களுக்கு...நீங்கள்

பரிசேயர்கள்

அவன் ...இருந்தால்

“அந்த மனிதன் ...இருந்தால்”

வெளியே எடுத்து

“ஆட்டை குழியிலிருந்து வெளியே எடுத்து”

நன்மை செய்வது சட்டத்திற்குட்பட்டதா

“நன்மை செய்கிறவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிவதில்லை” அல்லது “நன்மை செய்கிறவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறார்கள்”

Matthew 12:13

இயேசு தான் ஒருவனை ஓய்வுநாளில் குணமாகினதைக் குற்றப்படுத்தின பரிசேயர்களுக்குத் தொடர்ந்து பதிலளிக்கிறார்.

மனிதன்

சூம்பிப் போன கை உடையவன்

உன் கையை நீட்டு

“உன் கையை வெளியே பிடி” அல்லது “உன் கையை நீளமாக்கு.”

அவன்

மனிதன்

அது...அது

மனிதனின் கை

சுகமாக்கப்பட்டது

“முழுவதும் குணமாக்கப்பட்டது” அல்லது “மறுபடியும் சுகமாய்”

விரோதமாய் சதித்திட்டம்

“காயப்படுத்த திட்டம் பண்ணி”

எவ்வாறு செய்வது என்று பார்த்து

“செய்வதற்கான வழிகளைக் கண்டு”

அவரைக் கொலை செய்து

இயேசுவை கொலை செய்து

Matthew 12:15

இந்த பகுதி இயேசு எவ்வாறு ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களுள் ஒன்றை நிறைவேற்றினார் என்பதை விவரிக்கிறது.

இது

“அவரைக் கொலை செய்ய பரிசேயர்கள் திட்டம் பண்ணிக்கொண்டிருக்கிரார்கள்.

பின்வாங்கி

“விட்டு”

மற்றவர்களுக்குத் தன்னைக் காட்டாமல்

“அவரைக்குறித்து யாரிடமும் சொல்லாமல்”

ஏசாயாத் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது, என்னவென்றால்

“தேவனால் சொல்லப்பட்டு ஏசாயா தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது”

Matthew 12:18

இந்தப் பகுதி எவ்வாறு இயேசுவின் செயல்பாடுகள் ஏசாயாத் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியது என்று சொல்வதைத் தொடர்கிறது. ஏசாயா எழுதிய இந்த வார்த்தைகள் தேவன் சொன்ன வார்த்தைகள்.

Matthew 12:19

இந்தப் பகுதி எவ்வாறு இயேசுவின் செயல்பாடுகள் ஏசாயாத் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியது என்று சொல்லத் தொடர்கிறது. ஏசாயா எழுதிய இந்த வார்த்தைகள் தேவன் சொன்ன வார்த்தைகள்.

அவர்...அவருடைய

“...னுடைய வேலைக்காரன்” (ரோமர்: 12:18)

காயம்பட்ட நாணலை அவர் முறிக்கமாட்டார்

“பெலவீனமான மனுஷரை அவர் தள்ளமாட்டார்”

காயம்பட்ட

“பகுதி முறிந்துபோன அல்லது பழுதான”

புகையும் திரி

புகையும் திரி

நெருப்பு அணைக்கப்பட்ட ஒரு விளக்கின் திரி; இது உதவியற்ற நொடிந்து போனவர்களைக் குறிக்கிறது.

வரை

இதை ஒரு புதிய வாக்கியத்தோடு மொழிபெயர்க்கலாம்: “அவர் ...வரை இதைத்தான் செய்வார்”

நியாயத்திற்கு வெற்றியை அனுப்புகிறார்

“அவர் மனுஷரை நம்பிக்கைக் கொள்ளுமாறு செய்தார்”

Matthew 12:22

இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதை சொல்லத் துவங்குகிறது.

குருடனும் ஊமையுமான ஒருவன்

“பார்க்கவும் பேசவும் கூடாத ஒருவன்.”

மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

“இயேசு அந்த மனிதனை குனமாக்கினதைப் பார்த்த அனைவரும் பிரமித்துப்போனார்கள்”

Matthew 12:24

இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதை சொல்லத் துவங்குகிறது.

இந்த அற்புதம்

குருடும் செவிடும் பிசாசு பிடித்திருந்தவனுமான ஒருவன் குணமான அற்புதம்

பெயேல்செபூலினாலே அன்றி இவன் பிசாசுகளைத் துரத்தவில்லை

பெயேல்செபூலினாலே அன்றி இவன் பிசாசுகளைத் துரத்தவில்லை

“இவன் பெயேல்செபூலின் வேலையாள்.ஆகவே தான் இவன் பிசாசைத் துரத்த முடிந்தது.

இந்த மனிதன்

பரிசேயர்கள் இயேசுவை பெயர்வைத்துக் கூப்பிடாமல் அவரைத் தாங்கள் தள்ளினோம் என்பதைக் காட்டினார்கள்.

அவர்களுடைய...அவர்களுக்கு

பரிசேயர்கள்

Matthew 12:26

இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதை சொல்லத் துவங்குகிறது.

சாத்தானே சாத்தானை விரட்டினால்

“சாத்தானே தந்து ராஜ்ஜியத்திற்கு விரோதமாய் கிரியை செய்தால்”

அவனுடைய ராஜ்ஜியம் எப்படி நிலைக்கும்

“சாத்தனுடைய ராஜ்ஜியம் நிலைக்க முடியாது,” அல்லது “சாத்தானுடைய ராஜ்ஜியம் விழுந்து விடும்.”

வெளியே துரத்தி

“கட்டாயப்படுத்தி துரத்தி” அல்லது “துரத்தி” அல்லது “வெளியே வீசி” அல்லது “வெளியே போட்டு”

யாரால் உம்மைப் பின்பற்றுபவர்கள் அவைகளைத் துரத்துகிறார்கள்

மறு மொழிபெயர்ப்பு: “பெயல்செபூலின் வல்லமையாலும் கூட உம்மை பின்பற்றுபவர்கள் பிசாசுகளைத் துரத்தலாம்” (அல்லது UDB பார்).

அவர்கள் உங்கள் நியாதிபதிகளாயிருப்பார்கள்

மறு மொழிபெயர்ப்பு: “நான் பெயல்செபூலின் வல்லமையால் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்லுவதால் உங்களை தேவ வல்லமையால் பிசாசுகளைத் துரத்தும் உங்களைப் பின்பற்றுபவர்கள் நியாயம்தீர்ப்பார்கள்.”

Matthew 12:28

இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறது தொடர்கிறது.

உங்கள் மேல்

பரிசேயர்கள் மேல்

பெலவானை முந்தி கட்டினாலோழிய

“பலவானை முந்தி அடக்காமல்”

என்னுடன் இல்லாதவன்

“எனக்கு உறுதுணையாய் இல்லாதவன்” அல்லது “என்னோடு வேலை செய்யாதவன்”

எனக்கு எதிராய் இருக்கிறான்

“எனக்கு எதிராய் வேலை செய்கிறவன்” அல்லது “என்னுடைய வேலையை அழிக்கிறவன்”

சேர்த்து

கதிர்களை அறுப்பதை குறிக்கும் பொதுவான சொல்.

Matthew 12:31

இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதைத் தொடர்கிறது.

உங்களுக்கு

பரிசேயர்களுக்கு

மனிதர் செய்யும் ஒவ்வொரு பாவமும் தேவதூஷணமும் மனிதனுக்கு மன்னிக்கப்படும்

“மனிதர் செய்யும் ஒவ்வொரு பாவமும் தேவதூஷணமும் தேவன் மன்னிப்பார்” அல்லது “பாவங்களும் தேவதூஷணங்களும் செய்யும் ஒவ்வொரு மனிதனையும் தேவன் மன்னிப்பார்”

ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படமாட்டாது

“ஆவியானவருக்கு விரோதமான தூஷணத்தை தேவன் மன்னிக்கமாட்டார்”

மனுஷக்குமாரனுக்கு விரோதமாக யார் பேசும் எந்த வார்த்தையும் மன்னிக்கப்படும்

“மனுஷக்குமாரனுக்கு விரோதமாக யார் பேசும் எந்த வார்த்தையையும் தேவன் மன்னிப்பார்”

இந்த உலகம் ... வரப்போகிற

மறு மொழிபெயர்ப்பு: “இந்த நேரம்...வந்துகொண்டிருக்கிற நேரம்.”

Matthew 12:33

இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதைத் தொடர்கிறது.

ஒன்று, மரத்தை நல்லதாக்கி அதன் கனியை நல்லதாக்கு, அல்லது மரத்தை தீயதாக்கு அதன் கனியை தீயதாக்கு

“கனி நன்றாக இருப்பதால் மரம் நன்றாக இருக்கிறது என்று தீர்மானி, அல்லது கனி தீயதாக இருப்பதால்,மரமும் அப்படியே இருக்கிறது என்றும் தீர்மானித்துக்கொள்.”

நல்லது...தீயது

இது 1. “பலமான...பலவீனமான” அல்லது 2. “சாப்பிடக்கூடிய...சாப்பிட முடியாத” என்று அர்த்தப்படும்.

அதன் கனிகளால் மரம் அறியப்படும்.

இது 1. “மக்கள் ,மரத்தின் கனியைப் பார்த்து மரம் நல்லதா தீயதா என்று அறிந்து கொள்ளுவார்கள்” அல்லது 2. “மரம் எந்த வகை என்று அதன் கனியைப் பார்த்து மக்கள் அறிந்து கொள்ளுவார்கள்.”

நீங்கள் ...நீங்கள்

பரிசேயர்கள்

இருதயத்தில் உள்ளவைகளை வாய் பேசுகிறது

“ஒரு மனிதன் தன் இருதயத்தில் என்ன இருக்கிறதோ அதையே பேசுவான்”

நல்ல பொக்கிஷம்...கெட்ட பொக்கிஷம்

நல்ல பொக்கிஷம்...கெட்ட பொக்கிஷம்

“நீதியான எண்ணங்கள்...தீமையான எண்ணங்கள்”

Matthew 12:36

இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதைத் தொடர்கிறது.

நீங்கள் ...நீங்கள்

பரிசேயர்கள்

மக்கள் கணக்குக் கொடுப்பார்கள்

“தேவன் அதைக்குறித்துக் கேட்பார்” அல்லது “தேவன் அதன் மதிப்பை நியாயம் விசாரிப்பார்”

உபயோகமற்ற

“பயனற்ற” மறு மொழிபெயர்ப்பு: “தீமையான” (UDB பார்)

அவர்கள்

“மக்கள்”

நீங்கள் நியாயம்தீர்க்கப்படுவீர்கள்...நீங்கள் குற்றப்படுத்தப்படுவீர்கள்

“தேவன் உங்களை நியாயம்தீர்ப்பார்...தேவன் உங்களை குற்றப்படுத்துவார்”

Matthew 12:38

நம்பிக்கை இல்லாத வேதபாரகரையும் பரிசேயர்களையும் இயேசு கடிந்து கொண்டார் ஏனென்றால் குருடனை சுகமாக்கியப் பிறகும் பிசாசு பிடித்திருந்தவனை விடுதலை ஆக்கிய பின்னும் அவர் ஒரு அடையாளம் காண்பிக்கவேண்டும் என்று கேட்டனர்.

விருப்பம்

“வாஞ்சை”

பொல்லாத விபச்சார சந்ததி

இந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தீமையானதை செய்வதில் சந்தோஷப்பட்டு தேவனுக்கு விசுவாசமாக இல்லாமல் இருந்தனர்.

ஒரு அடையாளமும் அதற்கு கொடுக்கப்படாது

“இந்த பொல்லாத விபச்சார சந்ததிக்கு தேவன் ஒரு அடையாளத்தையும் காண்பிக்கமாட்டார்.”

யோனாவின் அடையாளம்

இது, “யோனாவுக்கு என்ன நடந்தது” அல்லது “தேவன் யோனாவுக்கு செய்த அற்புதம்”என்று மொழிபெயர்க்கப்படலாம்.

பூமியின் இருதயத்தில்

நிதர்சனமான கல்லறைக்குள்

Matthew 12:41

நம்பிக்கை இல்லாத வேதபாரகரையும் பரிசேயர்களையும் இயேசு கடிந்து கொண்டிருந்தார்; ஏனென்றால் குருடனை சுகமாக்கியப் பிறகும் பிசாசு பிடித்திருந்தவனை விடுதலை ஆக்கிய பின்னும் அவர் ஒரு அடையாளம் காண்பிக்கவேண்டும் என்று கேட்டனர்.

நினிவேயின் மக்கள் எழுந்திருப்பார்கள்...இந்த சந்ததியோடு...அதைக் குற்றப்படுத்துவார்கள்

மறு மொழிபெயர்ப்புகள்: “நினிவேயின் மக்கள் இந்த சந்ததியைக் குற்றப்படுத்துவார்கள்...தேவன் அவர்கள் குற்றப்படுத்துதளைக் கேட்டு அதை தண்டிப்பார்” அல்லது “தேவன் நினிவேயின் மனுஷரையும்...இந்த சந்ததியையும் பாவத்தின் குற்றவாளிகளாக நியாயம் தீர்ப்பார், ஆனால் அவர்கள் மனம்திரும்பினதினாலும் நீங்கள் திரும்பவில்லை அதனாலும், தேவன் உங்களை மட்டுமே தண்டிப்பார்”

இந்த சந்ததி

இயேசு பிரசிங்கித்துக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த மக்கள்

பெரியவர் ஒருவர்

“மிகவும் முக்கியமான ஒருவர்”

Matthew 12:42

நம்பிக்கை இல்லாத வேதபாரகரையும் பரிசேயர்களையும் இயேசு கடிந்து கொண்டிருந்தார்.

தெற்கிலுள்ள ராணி எழும்புவாள்...இந்த சந்ததியாரோடு...அதைக் குற்றப்படுத்துவாள். மறு மொழிபெயர்ப்புகள்: “தெற்கிலுள்ள ராணி இந்த சந்ததியை குற்றப்படுத்துவாள்...தேவன் அவள் குற்றப்படுத்துதளைக் கேட்டு அதை தண்டிப்பார்” அல்லது

மறு மொழிபெயர்ப்புகள்: “தெற்கிலுள்ள ராணி மக்கள் இந்த சந்ததியைக் குற்றப்படுத்துவார்கள்...தேவன் அவள் குற்றப்படுத்துதளைக் கேட்டு அதை தண்டிப்பார்” அல்லது “தேவன் தெற்கிலுள்ள ராணியையும்...இந்த சந்ததியையும் பாவத்தின் குற்றவாளிகளாக நியாயம் தீர்ப்பார், ஆனால் அவள் சாலமோனைக் கேட்க வந்ததாலும் நீங்கள் எனக்கு செவிகொடுக்கவில்லை அதனாலும், தேவன் உங்களை மட்டுமே தண்டிப்பார்”

தெற்கிலுள்ள ராணி

புறஜாதி ராஜ்ஜியமான சேபாவின் ராணியை இது குறிக்கிறது

பூமியின் கடையாந்தரங்களிலிருந்து அவள் வந்தாள்

“அவள் வெகு தூரத்திலிருந்து வந்தாள்”

இந்த சந்ததி

இயேசு பிரசிங்கித்துக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த மக்கள்

பெரியவர் ஒருவர்

“மிகவும் முக்கியமான ஒருவர்”

Matthew 12:43

நம்பிக்கை இல்லாத வேதபாரகரையும் பரிசேயர்களையும் இயேசு கடிந்து கொண்டிருந்தார்.

தண்ணீரில்லாத இடங்கள்

“வறண்ட இடங்கள்” அல்லது “மக்கள் வாழாத இடங்கள்” (UDB பார்)

அதைக் காணமாட்டார்கள்

“ஒரு இளைப்பாறுதலையும் காணமாட்டார்கள்”

இது சொல்லுகிறது

“அசுத்த ஆவி சொல்லுகிறது”

அந்த வீடு கூட்டப்பட்டு சரியாக வைக்கப்பட்டுள்ளது என்று காண்கிறது

மறு மொழிபெயர்ப்பு: “அசுத்த ஆவி யாரோ அந்த வீட்டை சுத்தமாக கூட்டி எது எங்கு இருக்கவேண்டுமோ அங்கு வைத்து இருக்கிறதைக் கண்டது.”

Matthew 12:46

இயேசுவின் தாயும் சகோதரர்களும் அங்கு வந்தது அவருடைய ஆவிக்குரிய குடும்பத்தைப் பற்றி சொல்ல அவருக்கு ஒரு நல்ல தருணமாக அமைந்தது.

அவர் தாய்

இயேசுவின் மனிதத் தாய்

அவர் சகோதரர்கள்

இது 1. சொந்தக் குடும்பம் அல்லது ஒன்றுவிட்டக் குடும்பத்தின் சகோதரர்கள் என்றோ (UDB பார்) அல்லது 2. நெருங்கிய நண்பர்கள் அல்லது இஸ்ரவேலுக்குள் உள்ள சம்பந்தப்பட்டவர்களாக இருக்கலாம் என்று அர்த்தப்படும்.

தேடுகிறது

“விரும்புகிறது”

Matthew 12:48

இயேசுவின் தாயும் சகோதரர்களும் அங்கு வந்தது அவருடைய ஆவிக்குரிய குடும்பத்தைப் பற்றி சொல்ல அவருக்கு ஒரு நல்ல தருணமாக அமைந்தது.

அவரிடம் சொன்ன அவன்

“யேசுவிடம் அவரது தாயும் சகோதரர்களும் அவரைப் பார்க்கக் காத்து இருக்கிறார்கள் என்று சொன்னவன்”

யார் என்னுடைய தாய்? யார் என்னுடைய சகோதரர்கள்?

மறு மொழிபெயர்ப்பு: “யார் என்னுடைய தாய் மற்றும் சகோதரர்கள் என்று நான் உண்மையாக உங்களுக்கு சொல்லுகிறேன்.”

யாராயினும்

“எவராயினும்”