இந்தப் பகுதி எவ்வாறு இயேசு யோவானின் சீடர்களுக்கு பிரதியுத்திரம் சொன்னார் என்பதைச் சொல்லத் துவங்குகிறது.
இந்தப் பதம் ஒருப் பகுதியின் துவக்கத்தைக் குறிக்கிறது. ஒரு பகுதியின் துவக்கத்தைக் குறிக்க உங்க மொழியில் ஒரு வழி இருக்குமானால், நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். “பின்பு” அல்லது “அதற்குப் பின்பு” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
“போதித்தல்” அல்லது “கட்டளைக்கொடுத்தல்” என்று இவ்வார்த்தையை மொழிபெயர்க்கலாம்.
இது இயேசுவின் தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிரண்டு சீடர்களைக் குறிக்கிறது.
“அந்த நேரத்தில்.” இதை கழித்துவிடலாம். (UDB)
மறு மொழிபெயர்ப்பு: “சிறைச்சாலையிலிருக்கும் யோவான், கேள்விப்பட்டபோது” அல்லது “சிறைச்சாலையிலிருக்கும் யோவானுக்கு ஒருவன் சொன்னபோது”
யோவான் ஸ்நானகன் தன்னுடைய சொந்த சீடர்களை இயேசுவுக்கான செய்தியோடு அனுப்பினான்.
“அவர்” என்ற பிரதிப்பெயர் ஏசுவைக் குறிக்கிறது.
“வரப்போகிறவர்” அல்லது “நாங்கள் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்” என்று மொழிபெயர்க்கலாம். இது மேசியா என்பதற்கு மறைமுகமாகச் சொல்லும் சொல் ஆகும். (“கிறிஸ்து,” UDB)
“நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.” “நாங்கள்” என்ற பிரதிப்பெயர் யோவானின் சீடர்களை மாத்திரமல்ல எல்லா யூதர்களையும் குறிக்கும்.
யோவான் ஸ்நானகனின் சீடர்களுக்கு இயேசுவின் பதிலை இது நிறைவு செய்கிறது.
“யோவானிடம் சொல்லுங்கள்”
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசத்துவங்குகிறார்.
இயேசு, யோவான் எப்படிப்பட்டவன் என்று மனுஷர் நினைக்கும்படி செய்ய, இந்த பதத்தை மூன்று பதில் எதிர்பாரா கேள்விகளில் பயன்படுத்தினார். “நீங்கள் பார்க்கவா போனீர்கள்...?நிச்சயம் இல்லை!” அல்லது “நிச்சயம் நீங்கள் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை...!” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
“நீளமான, புல் வகைச் செடி”
“விலைஉயர்ந்த ஆடைகளை உடுத்துகிறது.” செல்வந்தர்கள் இது போல உடுத்துவார்கள்.
இந்த வார்த்தை “இதோ” என்று அடிக்கடி மொழிபெயர்க்கப்படும். பின்வருபவற்றிற்க்கு அதிக அழுத்தம் தருகிறது. மறு மொழிபெயர்ப்பு: “உண்மையில்”
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதை தொடர்கிறார்.
யோவான் ஸ்நானகனைக் குறித்த பதில் எதிர்பாராக் கேள்விகளின் தொகுப்பை இது தொடர்கிறது.
இந்த பன்மை பிரதிப்பெயர் “நீங்கள்” இரண்டு தடவையுமே மக்கள் கூட்டத்தைத்தான் குறிக்கிறது.
“ஒரு சாதாரண தீர்க்கதரிசி அல்ல” அல்லது :ஒரு சாதாரண தீர்க்கதரிசியைக் காட்டிலும் முக்கியமான”
“இது” என்பது யோவான் ஸ்நானகனைக் குறிக்கிறது.
“இவன்” என்ற பிரதிப்பெயர் அடுத்த சொற்றொடரில் உள்ள “என்னுடைய தூதுவன்” என்பதைக் குறிக்கிறது.
மல்கியா தீர்க்கதரிசியிடமிருந்து இயேசு மேற்கோள் காட்டுகிறார். என்னவென்றால் மல்கியாவிலுள்ள (3:1)அந்த தூதுவன் யோவானே என்று.
பிரதிப் பெயர்கள் “நான்” மற்றும் “என்னுடைய” தேவனைக் குறிக்கிறது. இந்த பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனத்தை எழுதியவர் தேவனை மேற்கோள் காட்டுகிறார்.
“உனக்கு முன்பாக” அல்லது “உனக்கு முன்பாகப் போவதற்கு.” “உனக்கு” என்ற பிரதிப்பெயர் ஒருமையில் உள்ளது, ஏனென்றால் தேவன் மேசியாவிடம் நேர்முகமாகப் பேசுகிறார்.
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதைத் தொடர்கிறார்.
“பெண்கள் பெற்று எடுத்தவர்களுள்” அல்லது “இதுவரை வாழ்ந்த எல்லா மனிதரும்” (UDB)
மறு மொழிபெயர்ப்பு: “யோவான் ஸ்நானகன் பெரியவன்”
தேவன் ஸ்தாபிக்கும் ராஜ்ஜியத்தின் பகுதி. மறு மொழிபெயர்ப்பு: “பரலோக ராஜ்ஜியதினுள் பிரவேசித்தவர்கள்”
“யோவானிலும் அதிக முக்கியத்துவம் உள்ள”
“யோவான் பிரசங்கம் பண்ணத்துவங்கின நேரம் துவங்கி”
சாத்தியமான அர்த்தங்கள் 1. வன்முறையாளர்கள் வன்முறையாக அதை கையாளுகிறார்கள் (UDB) அல்லது 2. “பரலோக ராஜ்யத்தின் கீழ் உள்ளவர்களை துன்பப்படுத்துகிறவர்களும், வன்முறையாளர்களும் பலவந்தம்பண்ணி அதைப் பிடிக்கப்பார்க்கிறார்கள்” அல்லது 3. “பரலோக ராஜ்ஜியம் முன்னேறி வல்லமையாய் சென்று கொண்டிருக்கிறது; அதனால் வல்லவர்கள் அதில் பங்காளர்களாக விரும்புகிறார்கள்.”
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதைத் தொடர்கிறார்.
மோசேயின் நியாயப்பிரமாணம்
“யோவான் ஸ்நானகன்”
“நீங்கள்” என்ற பிரதிப்பெயர் கூட்டத்தில் உள்ள மக்களைக் குறிக்கிறது.
“இது” யோவான் ஸ்நானகனைக் குறிக்கிறது. இந்த சொற்றொடர் ஆகுபெயராகும். இந்த ஆகுபெயர் யோவான் ஸ்நானகன் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி எலியாவுக்கு ஒத்திருக்கிறார் என்கிறது.
சில மொழிகளில் இரண்டாம் நபர் இலக்கணத்தை உபயோகிப்பது எளிமையாக இருக்கலாம்: “கேட்கிறதற்கு காதுள்ளவர்கள் கேட்கக்கடவர்கள்.”
“கேட்கிற யாராயினும்”, அல்லது “என்னை கேட்கிற யாராயினும்”
“அவன் நன்றாகக் கேட்கட்டும்” அல்லது “நான் சொல்வதற்கு அவன் கவனம் செலுத்தட்டும்”
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதைத் தொடர்கிறார்.
இது பதில் எதிர்பாராக் கேள்வியின் துவக்கம். இயேசு, அக்கால மனிதரையும் சந்ததியில் பிள்ளைகள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் ஒப்புமையை அறிமுகப்படுத்த இதை பயன்படுத்தினார். ஒரு பதில் எதிர்பாரா கேள்வியைக் கொண்டு துவங்குகிறார்.
இந்த உருவகம் 1. இயேசு “புல்லாங்குழல் ஊதினார்,” யோவான் “துக்கித்தான்,” ஆனால் “இன்றைய சந்ததி” நடனமாடவும் அழவும் மறுக்கிறது. கீழ்ப்படிதலுக்கான உருவகங்கள், அல்லது 2. “மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தாங்கள் கூட்டின சட்டங்களுக்கு கீழ்ப்படியாத மக்களை பரிசேயர்களும் மதத் தலைவர்களும் விமர்சித்தார்கள்” என்று அர்த்தப்படலாம்.
“இப்பொழுது வாழும் மக்கள்” அல்லது “இந்த மக்கள்” அல்லது “இந்த சந்ததியின் மக்களே” (UDB)
இது மக்கள் தங்கள் பொருட்களை விற்க வரும் ஒரு பெரிய திறந்த வெளி மைதானம்.
“நாங்கள்” சந்தையில் உட்கார்ந்துள்ள பிள்ளைகளைக் குறிக்கிறது. “நீங்கள்” என்பது “இந்த சந்ததியைக்” குறிக்கிறது அல்லது இசையைக் கேட்டும் பதிலளிக்காதவர்களைக் குறிக்கலாம்.
இது ஒரு முனையில் காற்றை ஊதி இசைக்கப்படும் ஒரு நீளமான, மத்தியில் காலியான இசைக் கருவி.
“நீங்கள் இசைக்கு நடனம்பண்ணவில்லை”
“நீங்கள் எங்களோடு அழவில்லை”
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதைத் தொடர்கிறார்.
“உணவு உண்ணாமல்.” இதை “அடிக்கடி உபவாசித்து” அல்லது “நல்ல உணவு உண்ணாமல்” என்று மொழிபெயர்க்கலாம் (UDB). யோவான் உணவே உண்டதில்லை என்று அர்த்தமில்லை.
யோவானைக் குறித்து மக்கள் சொன்னதை இயேசு சொல்லுகிறார். இதை எதிர்மறையாக “அவனுக்கு பிசாசு இருக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள்” அல்லது “அவனுக்கு பிசாசு இருப்பதால் அவனைக் குற்றப்படுத்துகிறார்கள்.” என்று சொல்லலாம்.
“அவர்கள்” என்ற பிரதிப்பெயர் இக்கால சந்ததியைக் குறிக்கிறது (வசனம் 16)
இயேசு தான் மனுஷக்குமாரன் என்று அங்கிருந்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்த்தார். “நான், மனுஷக்குமாரன்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவர் மனுஷக்குமாரன் என்பதற்கு மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை இயேசு மேற்கோள் காட்டுகிறார். இதை எதிர்மறையாக, “அவர் பெருந்தீனிக்காரன் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்” அல்லது “நிறைய சாப்பிடுவதால் அவரைக் குற்றப்படுத்தினார்கள்.”
“அவர் பேராசை தீனிக்காரன்” அல்லது “அவர் வழக்கமாக நிறைய சாப்பிடுபவர்”
“குடிப்பவன்” அல்லது “வழக்கமாகக் குடிப்பவன்”
இயேசு இந்த சூழ்நிலைக்கு ஒரு பழமொழியை இடுகிறார். ஏனென்றால், அவரையும் யோவானையும் மறுத்தவர்கள் ஞானமாக செயல்படவில்லை. இது செய்வினை வாக்கியமாக மொழிபெயர்க்கப்படலாம்.
இந்த வெளிக்கூற்றில் ஞானம் ஆள்தத்துவம் உடையதாய்க் காட்டப்படுகிறது. ஞானம் தேவனுக்கு முன்பாக வைக்கப்பட்டதைப் போல் அல்ல ஆனால் நீதியாக்கப்பட்டது போல இங்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
“அவள்” என்ற பிரதிப்பெயர் ஆள்தத்துவம் உடைய ஞானத்தைக் குறிக்கிறது.
இயேசு தான் முன்பு அற்புதங்களைச் செய்த பட்டணத்து மக்களுக்கு எதிராகப் பேசத் துவங்கினார்.
இயேசு இங்கு ஆகு பெயரைப் பயன்படுத்தி தவறு செய்யும் அப்பட்டணத்து மக்களைக் கடிந்துகொள்கிறார்..
“சிறிய பட்டணங்கள்”
இது செய்வினைச் சொல்லோடு “தமது பெரும்பாலான மகத்துவமானக் கிரியைகளை செய்த இடங்கள்” என்று மொழிபெயர்க்கலாம்.
“மகத்துவ வேலைகள்” அல்லது “வல்லமையின் வேலைகள்” அல்லது “அற்புதங்கள்” (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.
“அவர்கள்” என்ற பிரதிப்பெயர் அந்தப் பட்டணங்களில் மனந்திரும்பாத மக்களைக் குறிக்கிறது.
கோராசின் மற்றும் பெத்சாயிதா பட்டணத்தார்கள் தன்னை அங்குக் கேட்டுக்கொண்டிருப்பது போல இயேசு பேசினாலும் அவர்கள் அங்கு இல்லை.
இந்தப் பட்டணங்களின் பெயர்கள் அங்கு வாழ்கிறவர்களுக்கு ஆகுபெயராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
செய்வினை வடிவில், “தீருவிலும் சீதோனிலும் உங்களுக்குள் நான் செய்த மகத்துவமானக் கிரியைகள் நான் நடப்பித்திருந்தேனானால்” என்று மொழிபெயர்க்கலாம்.
“நீ” என்ற பிரதிப்பெயர் இங்கு ஒருமையில் உள்ளது.
“அவர்கள்” என்ற பிரதிபெயர் தீரு மற்றும் சீதோன் பட்டணத்தாரைக் குறிக்கிறது.
“அவர்கள் தங்கள் பாவங்களுக்காக வருந்தியது போலக் காட்டப்பட்டு”
“தீருவுக்கும் சீதோனுக்கும் உங்களுக்கு செய்வதைப் பார்க்கிலும் தேவன் நியாயத்தீர்ப்பின் நாளிலே கிருபை செய்வார்” அல்லது “தேவன் உங்களை தீருவையும் சீதொனையும் தண்டிப்பதைப் பார்க்கிலும் உங்களை அதிகமாய் தண்டிப்பார்” (UDB பார்). மறைத்துக் கூறப்பட்டுள்ள தகவல் என்னவென்றால் “நான் அற்புதங்களைச் செய்வதை நீங்கள் கண்டும் என்னை விசுவாசித்து மனந்திரும்பாததினால்.”
“நீ” என்ற பிரதிப்பெயர் ஒருமையில் உள்ளது. அது கோராசினையும் பெத்சாயிதாவையும் குறிக்கிறது.
இயேசு தான் முன்னமே அற்புதங்களைச் செய்த பட்டணத்தாருக்கு எதிராக தொடர்ந்து பேசுகிறார்.
கப்பர்நகூம் பட்டணத்தார் தன்னைக் கவனிப்பது போல இயேசு பேசிக்கொண்டிருக்கிறார்; ஆனால் அவர்கள் அங்கு இல்லை. “நீ” என்ற பிரதிபெயர் இந்த இரண்டு வசனங்களிலும் ஒருமையில் வந்து கப்பர்நகூம் பட்டணத்தாரைக் குறிக்கிறது.
இந்தப் பட்டணங்களின் பெயர்கள் அங்கு வாழ்கிறவர்களுக்கு ஆகுபெயராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இயேசு கப்பர்நகூமின் பட்டணத்தாருடைய ஆணவத்தை பதில் தேவையில்லாக் கேள்வியின் மூலம் கடிந்து கொள்கிறார். செய்வினை வடிவில், “பரலோகம் வரை செல்வீர்களா? அல்லது “தேவன் உங்களை கனப்படுத்துவார் என்று எண்ணுகிறீர்களோ?, என்று மொழிபெயர்க்கப்படலாம்
“கனப்படுத்தப்படுவீர்”
செய்வினை வடிவில், “தேவன் உங்களை பாதாளத்திற்குக் கொண்டுவருவார்.” மொழிபெயர்க்கலாம்.
செய்வினை வடிவில், “நான் சோதோமில் செய்த மகத்துவக் கிரியைகளை உங்களிடத்தில் செய்திருந்தால்” என்று மொழிபெயர்க்கலாம்.
“வல்லமையானக் கிரியைகள்” அல்லது “வல்லமையின் கிரியைகள்”அல்லது “அற்புதங்கள்” (UDB)
“இது” என்றப் பிரதிப்பெயர் சோதோம் பட்டணத்தைக் குறிக்கிறது.
“உங்களுக்கு செய்வதைப் பார்க்கிலும் தேவன் நியாயத்தீர்ப்பின் நாளிலே சோதோமுக்கு கிருபை செய்வார்” அல்லது “தேவன் உங்களை நியாயத்தீர்ப்பின் நாளிலே சோதோமை தண்டிப்பதைப் பார்க்கிலும் உங்களை அதிகமாய் தண்டிப்பார்” (UDB பார்). மறைத்துக் கூறப்பட்டுள்ள தகவல் என்னவென்றால் “நான் அற்புதங்களைச் செய்வதை நீங்கள் கண்டும் என்னை விசுவாசித்து மனந்திரும்பாததினால்.”
இயேசு மக்கள் மத்தியிலிருந்து கொண்டே தனது பரலோக தேவனை நோக்கி ஜெபிக்கிறார்.
இது 1. இயேசு அனுப்பிய சீடர்கள் (மத்தேயு 10:5), திரும்பி வந்தார்கள் (மத்தேயு 12:1); அவர்களில் ஒருவன் கேட்டதற்கு அவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். 2. மனந்திரும்பாத பட்டணங்களுக்கு தான் கூறின நியாயத்தீர்ப்பை முடித்துக்கொண்டிருந்தார்: “இன்னும், இயேசு சொன்னார்.” என்று அர்த்தப்படலாம்.
பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது, உலகத் தகப்பனை அல்ல
இது ஆகுபெயராக மொழிபெயர்க்கப்படலாம். “பரலோகத்திலேயும் பூலோகத்திலேயும் இருக்கும் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் அவர் எஜமானாய்,” அல்லது ஒரேக் கூற்றாக, “பிரபஞ்சத்தின் எஜமான்.”
“இவைகள்” என்பதன் பொருள் விளங்கவில்லை. உங்கள் மொழியில் இவைகள் எவைகள் என்று தெளிவு படுத்துவது அவசியமானால் மாற்று மொழிபெயர்ப்பு சிறந்தது: “ஞானிகளும் கல்விகற்றவர்களும் சத்தியங்களைக் கற்கவிடாமல் அதைப் பேதைகளுக்கு வெளிப்படுத்தினீர்.”
“வெளிப்படுத்தப்பட்டு” என்பதன் எதிர் வினைச்சொல் ஆகும்.
“ஞானிகளும் கல்விமான்களும்.” மறு மொழிபெயர்ப்பு: “தங்களை ஞானிகளும் கல்விமான்கள் என்று எண்ணுபவர்கள்.” (UDB பார்)
“அவைகளை” என்ற பிரதிப்பெயர் “இவைகள்” என்று முன் வசனங்களில் உள்ளதைக் குறிக்கிறது.
இந்த முழு சொற்றொடரும் இந்த எல்லா அர்த்தங்களையும் (“சிறுக் குழந்தைகள்” மற்றும் “கல்லாதவர்கள்” அல்லது “பேதைகள்”) சேர்த்துச் சொல்லும் ஒரே வார்த்தையை மொழிபெயர்க்கிறது. மறு மொழிபெயர்ப்பு: “பேதையான சிறுக் குழந்தைகள்”
ஞானமில்லாத அல்லது கல்லாத அல்லது தாங்கள் ஞானம் அற்றவர்கள் என்றும் கல்லாதவர் என்றும் தெரிந்தவர்களுக்கு உருவகம் இது.
“அப்படி செய்வது நல்லது என்று கண்டீர்”
செய்வினை வடிவில், “என்னுடைய பிதா எல்லாக் காரியங்களையும் எனக்கு ஒப்புவித்தார்” அல்லது “என்னுடையத் தகப்பன் எல்லாவற்றையும் என்னிடம் தந்தார்.”
“பிதா ஒருவரே குமாரனை அறிவார்.” குமாரனை அறிகிறது “தனிப்பட்ட அனுபவத்தால் அறிகிறது” குமாரன் இயேசு தன்னையே படர்க்கை இலக்கணத்தில் குறிப்பிடுகிறார். குமாரனைத் தவிர ஒருவனும் தகப்பனை அறியான் “குமாரன் ஒருவரே தகப்பனை அறிவார்.” தகப்பனை அறிகிறது “தனிப்பட்ட அனுபவத்தால் அறிகிறது” குமாரன் அவரை வெளிப்படுத்த விரும்பும் யாருக்கும் மறு மொழிபெயர்ப்பு: “குமாரன் தகப்பனை வெளிப்படுத்த விரும்பினால் தான் தகப்பனை யார் என்று மக்கள் அறிந்து கொள்வார்கள்” குமாரன் அவரை வெளிப்படுத்த விரும்புவர்களுக்கு “அவரை” என்ற பிரதிப்பெயர் பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது.
கூட்டத்தோடு பேசுகிறதை இயேசு முடிக்கிறார்
யூத சட்டத்தின் “சுமை” என்ற உருவகத்தைக் குறிக்கிறது.
“உங்களின் சுமையிலிருந்து பாரத்திலிருந்தும் உங்களை இளைப்பாறப்பண்ணுவேன்”
“நீங்கள்” என்ற பிரதிப்பெயர் “வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் எல்லாரையும் குறிக்கிறது.” இந்த உருவகம் “நான் உங்களுக்கு கொடுக்கும் பணியை ஏற்றுக்கொள்ளுங்கள்” (UDB பார்) அல்லது “என்னோடு கூட சேர்ந்து வேலை செய்யுங்கள்.”
“இலகு” என்ற வார்த்தை கனமான என்பதன் எதிர்பதம் ஆகும்.