Matthew 10

Matthew 10:1

இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது துவங்குகிறது.

தன பன்னிர்ரெண்டு சீடர்களையும் ஒன்றாக அழைத்தார்

“தன் பன்னிரண்டு சீடர்களையும் அழைப்பித்தார்”

அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்

அவைகளைத் துரத்தினார்

“அசுத்த ஆவிகளைப் போகப்பண்ணினார்”

எல்லா வகையான வியாதியும் எல்லா வகையான நோயும்

“ஒவ்வொரு வியாதி மற்றும் ஒவ்வொரு நோய்.” “வியாதி” மற்றும் “நோய்” என்ற வார்த்தைகள் மிகவும் ஒற்றுமையானவைகள். முடியுமானால் இரண்டு வார்த்தைகளாக மொழிபெயர்க்கலாம். “நோய்” ஒருவனை வியாதிப்படுத்துகிறது. “வியாதி” என்பது நோயினால் வரும் உடல் பெலவீனம்.

Matthew 10:2

இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது.

முதல்

வரிசையில், பதவியில் அல்ல

சீலத்தான்

சாத்தியமான அர்த்தங்கள்: 1. “சீலத்தான்” அல்லது 2. “முனைப்பு மிக்கவன்.” முதல் அர்த்தம், யூதர்களை ரோமர்களின் ஆட்சியிலிருந்து விடுவிக்க விரும்பும் ஒரு குழுவின் அங்கத்தினன் என்று காட்டுகிறது. மறு மொழிபெயர்ப்பு: “தேசபக்தி உள்ளவன்” அல்லது “தேசியவாதி” அல்லது “விடுதலைப் போராட்ட வீரன்.” இரண்டாம் அர்த்தம், தேவன் காணப்பட முனைப்பு கொண்டவன் என்று காட்டுகிறது. மறு மொழிபெயர்ப்பு: “உணர்ச்சிகரமானவன்.”

ஆயக்காரனாகிய (வரிவசூலிப்பவன்) மத்தேயு

“ஆயக்காரனாக இருந்த மத்தேயு”

அவரைக் காட்டிக்கொடுத்த

“இயேசுவைக் காட்டிக்கொடுத்த”

Matthew 10:5

இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது.

இந்த பன்னிரெண்டு பேரை இயேசு அனுப்பினார்

“இயேசு இந்த பன்னிரண்டு மனுஷரை அனுப்பினார்” அல்லது “இந்த பன்னிரண்டு பேரைத் தான் இயேசு

அனுப்பினார்”

அனுப்பினார் பிரத்தியேகமான வேலைக்காக இயேசு அவர்களை வெளியே அனுப்பினார். “வெளியே அனுப்பினார்” என்ற வார்த்தை “அப்போஸ்தலர்கள்” என்ற பெயர்ச்சொல்லுக்கு வினைச்சொல்லின் வடிவமாக இருக்கிறது.

அவர்களுக்கு அவர் போதித்தார்

“அவர்கள் செய்ய வேண்டியதை அவர்களுக்குச் சொன்னார்.” அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார்” என்று இதை மொழிபெயர்க்கலாம்.

காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டார்

முழு இஸ்ரவேல் தேசத்தையும் தங்கள் மேய்ப்பனிடமிருந்து வழி தப்பிப்போன ஆடுகளுக்கு ஒப்பிடும் உருவகமாகும்.

இஸ்ரவேல் வீட்டார்

இந்தக் கூற்று இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. “இஸ்ரவேல் ஜனங்கள்” அல்லது “இஸ்ரவேலின் சந்ததி” என்று இதை மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் போகும் போதும்

“நீங்கள்” என்ற பிரதிப் பெயர்ச்சொல் பன்னிரண்டு சீடர்களைக் குறிக்கிறது.

பரலோக ரரஜ்யம் சமீபமாய் வந்திருக்கிறது

மத்தேயு 3:1,2இல் இந்த கருத்தை மொழிபெயர்த்ததைப் போல் மொழிபெயர்க்கவும்.

Matthew 10:8

இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது.

நீங்கள்...உங்களுடைய

பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்

பொன்னையோ, வெள்ளியையோ, அல்லது செம்பையோ சேர்க்கவேண்டாம்

“பொன்னையோ, வெள்ளியையோ, அல்லது செம்பையோ சேர்க்கவேண்டாம்”

சேர்த்து

“பெறு,” “ஏற்றுக்கொள்,” அல்லது “எடு”

பொன், வெள்ளி, அல்லது செம்பு

இந்தப் பொருள்களிலிருந்து காசுகள் செய்யப்படுகின்றது. இந்த அட்டவணை பணத்திற்கான உருவகமாகும். இந்தப் பொருள்கள் உங்கள் பகுதிகளில் தெரியப்படாதவைகள் என்றால், “பணம்” என்றே மொழிபெயருங்கள்.

பைகள்

இது “கச்சைகள்” அல்லது “பணக்கச்சைகள்,” என்று அர்த்தப்படும். பணத்தைக் கொண்டுபோகப் பயன்படும் எதற்குவேண்டுமானாலும் இந்த வார்த்தைப் பயன்படும். கச்சை துணியிலிருந்தோ அல்லது தோலிலிருந்தோ செய்யப்பட்ட நீளமான பட்டை ; இடுப்பைச் சுற்றிக் கட்டுவர். இவை பெரும்பாலும் அகலமாக இருந்தததால் மடித்து பணத்தைக் கொண்டுபோகப் பயன்படுத்துவர்.

பிரயாணப் பை

பிரயாணத்தின் போது பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லப் பயன்படும் ஏதேனும் பையாக இருக்கலாம். அல்லது ஒருவனால் உணவையோ அல்லாதோ பணத்தையோ சேர்த்துவைக்கப் பயன்படுபவையாக இருக்கலாம்.

இரண்டு அங்கிகள்

மத்தேயு 05:40இல் உபயோகப்படுத்தின அதே வார்த்தையை “அங்கிகளுக்குப்” பயன்படுத்தவும்.

கூலியாள்

“வேலையாள்”

உணவு

“அவனுக்கு என்னத் தேவையோ”

Matthew 10:11

இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது.

நீங்கள்...உங்களுடைய

இந்தப் பிரதிப் பெயர் பன்னிரண்டு சீடர்களைக் குறிக்கிறது.

எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கையில்

எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கையில்

“ஒரு பட்டணத்திலோ அல்லது கிராமத்திலோ நீங்கள் பிரவேசிக்கும்போது” அல்லது “நீங்கள் பிரவேசிக்கும் ஒவ்வொரு பட்டணத்திலும் அல்லது கிராமத்திலும்”

பட்டணம்...கிராமம்

“பெரிய கிராமம்...சிறிய கிராமம்” அல்லது “பெரிய பட்டணம்...சிறிய பட்டணம்.” மத்தேயு 09:35இல் கூறப்பட்டுள்ள அதே வார்த்தைகள் தான் இவைகள்.

நீங்கள் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்

“பட்டணத்தை அல்லது கிராமத்தையோ விட்டுப்போகும் வரை அந்த மனிதனின் வீட்டிலே தங்கி இருங்கள்”

ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது, அதை வாழ்த்துங்கள்

“ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது, அதில் வாழும் மக்களை வாழ்த்துங்கள்.” “அக்காலத்தில் பொதுவான வாழ்த்துதல் என்னவென்றால் “இந்த வீட்டிற்கு சமாதானம் உண்டாவதாக!”

அந்த வீடு தகுதியானது.

“அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் உங்களை நன்றாக வரவேற்றார்கள்” (UDB) அல்லது “அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் உங்களை நன்றாக கவனித்தார்கள்”

உங்கள் சமாதானம் அதன் மீது வரட்டும்

“உங்கள் சமாதானம் அதன் மீது வரட்டும்” அல்லது “அந்த வீட்டில் வசிப்பவர்கள் சமாதானத்தோடு வாழ்வார்கள்” (UDB யைப் பார்க்கவும்)

உங்கள் சமாதானம்

அந்த வீட்டின் மனிதர்மீது தேவன் கொண்டுவரவேண்டுமென்று அப்போஸ்தலர்கள் கேட்ட சமாதானம்

தகுதியில்லை என்றால்

“உங்களை அவர்கள் நன்றாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்” (UDB) அல்லது “உங்களை ஒழுங்காக கவனிக்கவில்லை என்றால்”

உங்கள் சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பி வரட்டும்

இந்த இரண்டு அர்த்தங்களில் ஒரு அர்த்தம் இது கொள்ளலாம். 1. அந்த வீடு தகுதியில்லை என்றால், தேவன் அவர்களின் சமாதானத்தை அல்லது ஆசீர்வாதங்களை அவர்களின் வீட்டிற்கு போகாமல் பார்த்துக்கொள்வார். (UDB), அல்லது 2. அந்த வீடு தகுதி இல்லை என்றால், அப்போஸ்தலர்கள் எதையாவது செய்து, அதாவது தேவனிடம் அவர்களின் சமாதானத்தின் வாழ்த்துதலை கனப்படுத்தாதேயும் என்று கேட்கலாம். வாழ்த்துதலை திரும்பப்பெற்று கொள்ளவதைச் சொல்ல உங்கள் மொழியில் வழி இருக்குமானால், இங்கு உபயோகிக்கவும்.

Matthew 10:14

இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது. 10:1.

உங்களை ஏற்றுக்கொள்ளாமலும் அல்லது கவனியாமலும் இருக்கிறவர்கள்

“அந்தப் பட்டணத்தார் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது கவனிக்கவில்லை என்றாலோ”

நீங்கள்...உங்களுடைய

பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்

உங்கள் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து

“உங்கள் செய்திக்கு செவிகொடுத்து” (UDB) அல்லது “நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதற்கு செவிகொடுத்து”

பட்டணம்

மத்தேயு 10:11 இல் இதை மொழி பெயர்த்ததைப் போலவே மொழிபெயர்க்கவும்.

உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறி

“உங்கள் கால்களில் உள்ள அந்த வீட்டின் தூசியை அல்லது அந்தப் பட்டணத்தின் தூசியை உதறி.” இது, தேவன் அந்த வீட்டின் அல்லது அப்பட்டணத்தின் மக்களை தள்ளினார் என்பதற்கான அடையாளமாகும். (UDB யைப் பார்க்கவும்)

இது தாங்கக்கூடியதாய் இருக்கட்டும்

“பாடு குறைவாய் இருக்கட்டும்”

சோதோம் கொமோரா நாடு

“தேவன் பரத்திலிருந்து அனுப்பப்பட்ட அக்கினியால் அழித்த சோதோம் கொமோரா பட்டணங்களில் வாழ்ந்தவர்கள்,”

அந்தப் பட்டணம்

அப்போஸ்தலர்களையோ அல்லது அவர்களுடைய செய்தியை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பட்டணத்து மக்கள்.

Matthew 10:16

இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.

இதோ

“இதோ” என்ற வார்த்தை பின்வருபவற்றை அழுத்திச் சொல்லுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: “பார்” அல்லது “கவனி” அல்லது “நான் சொல்லப்போவதற்கு கவனம் செலுத்து” (UDB யைப் பார்)

நான் உங்களை அனுப்புகிறேன்

இயேசு அவர்களை ஒரு பிரத்தியேகமான ஒரு வேலைக்கு அனுப்புகிறார்.

ஒநாய்களின் மத்தியில் ஆடுகளைப் போல

இயேசு தான் அனுப்பும் சீடர்களை தாக்கக்கூடிய காட்டு விலங்குகள் மத்தியில் பாதுகாப்பில்லாமல் செல்லும் தற்காப்பு இல்லாத விலங்குகளுக்கு ஒப்பிடுகிறார்.

ஆடுகளைப் போல

தற்காப்பற்ற

ஓநாய்களின் மத்தியில்

“ஆபத்தான ஒநாய்கள் போலுள்ள மக்கள் மத்தியில்” அல்லது “ஆபத்தான மிருகங்கள் நடப்பதைப் போல நடப்பவர்கள் மத்தியில்” அந்த உருவகத்தைக் குறிப்பாய்ச் சொல்லவும்.

பாம்புகளைப் போல வினாவுள்ளவர்களையும் புறாக்களைப் போல கபடற்றவர்களாயும்

குறிப்பிடவில்லைஎன்றால் நலமாயிருக்கும் உருவகங்கள்: “கபடற்றவர்களாகவும்நேர்மையானவர்களாகவும் இருப்பது போல் விவேகத்தோடும் எச்சரிக்கையோடும் நடந்துகொள்ளுங்கள்.

உங்களை ஒப்புக்கொடுக்கும் மனிதர்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்

“ஜாக்கிரதையாய் இருங்கள், ஏனென்றால் மனுஷர் உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.”

எச்சரிக்கையாய் இருங்கள்

“விழிப்பாயிரு” அல்லது “கவனமாயிரு” அல்லது “மிகவும் எச்சரிக்கையோடு”

உங்களை ஒப்புக்கொடுத்து

யூதாஸ் ஏசுவுக்கு செய்தததைக் குறிக்க இந்த வார்த்தையைத் தான் பயன்படுத்தினர் (UDB). மறு மொழிபெயர்ப்பு: “உங்களைக் காட்டிக்கொடுத்து”, அல்லது “உங்களை விட்டுக் கொடுத்து” அல்லது “உங்களைக் கைது செய்யப்படவும் தீர்ப்பு செய்யப்படவும் வைத்து.”

ஆலோசனைச் சங்கம்

அர்த்தம் என்னவென்றால், சமுதாயத்தில் அமைதியை காக்கும் அவ்விடத்தின் மதத் தலைவர்கள் அல்லது மூப்பர்கள். மறு மொழிபெயர்ப்பு: “நீதிமன்றங்கள்”

சாட்டையினால் உங்களை அடித்து

“சாட்டையினால் உங்களை அடித்து”

நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்

“அவர்கள் உங்களைக் கொண்டுவருவார்கள்” அல்லது “உங்களை இழுத்துக் கொண்டு வருவார்கள்.”

என்னிமித்தம்

“நீங்கள் எனக்கு சொந்தமானபடியால்” (UDB) அல்லது “நீங்கள் என்னைப் பின்பற்றுவதால்”

அவர்களுக்கும் புறஜாதிகளுக்கும்

“அவர்களுக்கும்” என்ற பிரதிப் பெயர் “ஆளுநர்களை மற்றும் அரசர்களை அல்லது குற்றம் சாட்டும் யூதர்களைக்” குறிக்கிறது.

Matthew 10:19

இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது..

அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும் போது

“அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும் போது. இங்கு உள்ள “அவர்கள்” மத்தேயு 10:16, 17 இல் உள்ள அதே “மக்கள்” தான். ”

உங்களை ஒப்புக்கொடுத்து

மத்தேயு 10:16, 17 இல் மொழிபெயர்த்ததைப் போல செய்யவும்.

நீங்கள்

“நீங்கள்” மற்றும் “உங்களுடைய” என்னும் பிரதிப் பெயர்கள் இந்த பகுதி முழுவதிலும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தான் குறிக்கிறது.

சங்கடப்படாதிருங்கள்

“கவலைப்படாதிருங்கள்”

நீங்கள் என்ன அல்லது எப்படி பேசுவீகள் என்று

“எப்படி பேசுவீர்கள் அல்லது என்ன சொல்லப்போகிறீர்கள் என்று.” இந்த இரு கருத்தும் ஒன்றி “நீங்கள் சொல்லப்போவது” என்று சொல்லப்படலாம்.

அந்த மணிநேரத்தில்

“அந்த நேரத்தில்”

உங்கள் பிதாவின் ஆவியானவர்

வேண்டுமென்றால், “பரலோகத்திலிருக்கும் பிதாவின் ஆவியானவர்” என்று மொழிபெயர்க்கலாம் அல்லது அப்பக்கத்தின் கீழே இது பூமியின் தகப்பனுடைய ஆவியையல்ல இது தேவனுடைய ஆவியானவர் என்று ஒரு குறிப்பை எழுதவும் .

உங்களுக்குள்ளே

“உங்கள் மூலமாக”

Matthew 10:21

இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.

சகோதரன் தன் சகோதரனையும் தகப்பன் தன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்

மறு மொழிபெயர்ப்பு: “சகோதரர்கள் தங்கள் சகோதரரகளையும் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகயையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்.”

ஒப்புக்கொடுத்து

மத்தேயு 10:16, 17 இல் இவ்வார்த்தையை மொழிபெயர்த்ததைப் போலவே மொழிபெயர்க்கவும்.

எதிராக எழுந்து

“எதிராக கலகம்” (UDB) அல்லது “விரோதமாகத் திரும்பி”

அவர்களை மரணத்திற்கு ஏற்படுத்தி

“அவர்களைக் கொல்லுவதற்கு வைத்து” அல்லது “அதிகாரிகள் அவர்களைக் கொல்லுவதற்கு வைத்து”

நீங்கள் எல்லாராலும் வெறுக்கப்படுவீர்கள்

மறு மொழிபெயர்ப்பு: “எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்” அல்லது “அனைத்து மனுஷரும் உங்களை வெறுப்பார்கள்”

நீங்கள்...நீங்கள்...நீங்கள்...நீங்கள்

பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்

என்னுடைய நாமத்தினிமித்தம்

“என்னிமித்தம்” அல்லது “நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளதால்” (UDB)

நிலைத்திருக்கிற யாராயிருந்தாலும்

“விசவாசமாய் நிலைத்திருக்கும் யாராயினும்”

அந்த மனிதன் இரட்சிக்கப்படுவான்

மறு மொழிபெயர்ப்பு: “தேவன் அந்த மனிதனை விடுவிப்பார்”

அடுத்ததிற்கு விரைந்து சென்று

“அடுத்த பட்டணத்திற்கு விரைந்து செல்லவும்”

வந்துவிட்டார்

“வந்தடைந்தார்”

Matthew 10:24

இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.

ஒரு சீடன் தன் குருவைவிட பெரியவனல்ல

இது ஒரு பொதுவான உண்மையாகும். இது ஒரு சீடனையோ குருவையோ குறித்ததல்ல. குருவைவிட ஒரு சீடன் “முக்கியமானவனல்ல,” இது ஒருவேளை அவனுக்கு குருவைவிட்ட “அதிகம் தெரியாமல் இருக்கலாம்” அல்லது “பெரியப் பதவி இல்லாமலிருக்கலாம்” அல்லது “சிறந்தவனாக இல்லாமலிருக்கலாம்.” மறு மொழிபெயர்ப்பு: “ஒரு சீடன் எப்பொழுதும் அவன் குருவைவிட முக்கியத்துவம் குறைந்தவன்” அல்லது “ஒரு குரு தன் சீடனைவிட முக்கியமானவர்.”

வேலைக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லை

“வேலைக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லை.” இது ஒரு பொதுவான் உண்மையாகும், எஜமானையோ அடிமையையோ குறிக்கும் சொற்றொடர் அல்ல. மறு மொழிபெயர்ப்பு: “ஒரு வேலைக்காரன் தன எஜமானைவிட ஒருபோதும் பெரியாவனல்ல” அல்லது “எஜமான் எப்பொழுதும் தன் வேலைக்காரனைவிட பெரியவன்.”

வேலைக்காரன்

“அடிமை”

எஜமான்

“உரிமையாளன்”

தன் குருவைப் போல் இருப்பதே ஒரு சீடனுக்கு போதுமானது

“தன் குருவைப் போல் இருப்பதை எண்ணி திருப்தியாய் இருக்க வேண்டும் .”

அவன் குருவைப் போல

“அவன் குரு அறிந்தவற்றை அறிந்து” அல்லது “அவன் குருவை போலவே இருந்து.”

வேலைக்காரன் தன எஜமானைப் போல

“வேலைக்காரன் தன எஜமானைப் போல முக்கியத்துவம் பெறுவதில் திருப்தி அடையவேண்டும்”

பெயல்செபூலின் வீட்டின் எஜமானை அவ்வாறு அழைத்தார்களானால், அவன் வீட்டாரை எவ்வளவு அதிகம்

இயேசு தரக்குரைவாய் நடத்தப்பட்டார், அதுபோல இயேசுவின் சீடர்களும் அவ்வாறே நடத்தப்படவும் அல்லது அதிலும் மோசமாக நடத்தப்பட்டவும் எதிர்ப்பார்க்க வேண்டும் (UDB).

அவர் அழைத்தார்களானால்

மறு மொழிபெயர்ப்பு: “மனுஷர் அவ்வாறு அழைத்ததினால்.”

வீட்டு எஜமான்

“வீட்டு எஜமான்” என்பதை இயேசு தனக்கான உருவகமாகப் பயன்படுத்துகிறார்.

பெயல்செபூல்

மூலபாஷையில் இந்த வார்த்தை 1. “பெயல்செபூல்” என்று அப்படியே மொழிபெயர்க்கலாம் அல்லது 2. சொல்லவருகின்ற அர்த்தமாகிய “சாத்தான்” என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் வீட்டாரை

“அவன் வீட்டாரை” என்ற உருவகத்தை தனது சீடர்களைக் குறிக்க இயேசு உபயோகப்படுத்துகிறார்.

Matthew 10:26

இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.

அவர்களுக்கு பயப்படாதிருங்கள்

“அவர்களுக்கு” என்ற பிரதிப்பெயர் இயேசுவை பின்பற்றுகிறவர்களைத் தவறாக நடத்துபவர்களைக் குறிக்கிறது.

வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை, அறியக்கூடாத ரகசியம் இல்லை

இந்த இணைப்போக்கு “மனுஷர் மறைப்பதை தேவன் வெளிப்படுத்துவார்” என்று மொழிபெயர்க்கலாம்.

நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள், உங்கள் காதுகளில் மெதுவாக நீங்கள் கேட்கிறதை வீட்டுக் கூரையிலிருந்து பிரசித்தம் பண்ணுங்கள்.

இந்த இணைப்போக்கு “உங்களுக்கு நான் இருளில் சொல்வதை மனுஷருக்கு பகலில் சொல்லுங்கள், உங்கள் காதுகளில் மெதுவாக கேட்பதை வீட்டுக் கூரையிலிருந்து பிரசித்தம் பண்ணுங்கள்” என்று மொழிபெயர்க்கலாம்.

நான் உங்களுக்கு இருளில் சொல்வதை

“நான் உங்களுக்கு ரகசியமாய் சொல்வதை” (UDB) அல்லது “உங்களுக்கு நான் தனிமையில் சொல்வதை”

பகலில் சொல்லுங்கள்

“வெளிப்படையாக சொல்லுங்கள்” அல்லது “பொது இடத்தில் சொல்லுங்கள்” (UDB யைப் பார்க்கவும்)

உங்கள் காதுகளில் மெதுவாக கேட்பதை

“உங்களுக்கு நான் கிசுகிசுப்பதை”

வீட்டுக் கூரையிலிருந்து பிரசித்தம் பண்ணுங்கள்

“யாவரும் கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லுங்கள்.” இயேசு வாழ்ந்த காலத்தில் வீட்டுக்கூரைகள் தட்டையாக் இருந்தது. எனவே தூரத்திலிருப்பவர்கள்கூட சத்தமாகப் பேசுபவரைக் கேட்க முடியும்.

Matthew 10:28

இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.

ஆத்துமாவையல்லாமல் சரீரத்தை மாத்திரம் கொல்பவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருங்கள்

“மனுஷருக்கு பயப்படாதிருங்கள். அவர்கள் உங்கள் சரீரத்தை கொல்லலாம். ஆனால் அவர்கள் உங்கள் ஆத்துமாவைக் கொல்ல முடியாது.”

சரீரத்தைக் கொல்லுபவர்கள்

சரீர மரணத்தை ஏற்ப்படுத்துபவர்கள். இந்த வார்த்தைகள் ஒருமாதிரியாக இருந்தால், “உங்களைக் கொல்ல” அல்லது மற்றவர்களைக் கொல்ல” என்று மொழிபெயர்க்கலாம்.

சரீரம்

ஒருவனின் தொடக்கூடியப் பகுதி

ஆத்துமாவைக் கொல்ல

மரித்தப்பிறகு மனுஷரைத் துன்புறுத்துவது

ஆத்துமா

மனிதனின் தொடமுடியாதப் பகுதி. சரீரம் மரித்தாலும் வாழும் பகுதி

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறது இல்லையா?

இந்த பதிலை எதிர்பார்க்காதக் கேள்வி “குருவிகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒரு சிறு காசுக்கு இரண்டு குருவிகள் வாங்கலாம். அவைகளுக்கு சிறிதளவே மதிப்புள்ளது.” (UDB)

குருவிகள்

இவைகள் சிறிய மற்றும், விதை தின்னும் பறவைகள். இதை மனிதர் முக்கியமானவைகள் என்று கருதாதக் காரியங்களுக்கு உருவகமாக இங்கு இருக்கிறது.

ஒரு சிறு காசு

இதை அநேகமாக சின்ன காசு என்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு கூலியின் தினசரிக் கூலியில் பதினாறில் ஒரு பங்கே விலைபோகும் செம்புக் காசைக் குறிக்கிறது. “சிறிதளவுக் காசு” என்று மொழிபெயர்க்கப்படலாம்.

அவற்றில் ஒன்று கூட பிதா அறியாமல் தரையில் விழுவதில்லை

இந்த வெளிக்கூற்று “உங்கள் பிதா அறிந்தாலொழிய அவற்றில் ஒன்று கூடத் தரையில் விழாது” அல்லது “உங்கள் பிதா அறிந்திருந்தால் மட்டுமே அவற்றுள் ஒன்று கூட தரையிலே விழும்”

அவற்றுள் ஒன்றுக் கூட

“ஒரு குருவிக்கூட”

தரையில் விழுகிறது

“சாகிறது”

உங்கள் தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது

“உங்கள் தலையில் எத்தனை முடிகள் உள்ளது என்று தேவன் அறிவார்”

எண்ணப்பட்டிருக்கிறது

“கூட்டப்பட்டிருக்கிறது”

குருவிகளைக்காட்டிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்

“குருவிகளைக்காட்டிலும் தேவன் உங்களை மேன்மையாக கருதுகிறார்”

Matthew 10:32

இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.

மனுஷர் முன் என்னை அறிக்கைச் செயகிற யாரும்

என்னுடைய சீடன் என்று சொல்லும் யாராயினும்” அல்லது “மற்றவர்கள் முன்பு என்னை கருதுகிறவன் எனக்கு நேர்மையாய் இருக்கிறான்”

அறிக்கை

“கருதுதல்”

மனுஷர்முன்

“மக்கள் முன்” அல்லது “மற்ற மக்கள் முன்”

பரலோகத்தில் இருக்கும் பிதா

இயேசு பிதாவாகிய தேவனைக் குறித்து பேசுகிறார்.

என்னை மனிதர் முன் மறுதலிக்கிறவன்

என்னை மனிதர் முன் மறுதலிக்கிறவன்

“என்னை மனிதர் முன் விட்டுவிடுகிறவன்” அல்லது “மனிதர் முன் என்னை தள்ளிவிடுகிறவன்” அல்லது “என்னுடைய சீடன் என்று மற்ற மனிதர்முன் அறிக்கை செய்யாதவன்” அல்லது “எனக்கு நேர்மையாய் இருக்கிறேன் என்பதை மறுக்கிறவன்.”

Matthew 10:34

இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.

நினையாதிருங்கள்

“யூகிக்காதிருங்கள்” அல்லது “நீங்கள் நினைக்கக் கூடாது”

பட்டயம்

இந்த உருவகம் 1. கோரச் சாவு (மத்தேயு 10:37, 10:38 இல் உள்ள “சிலுவை” பார்க்கவும்) அல்லது 2. பிரிவை உண்டாக்கும் சண்டை

ஏற்படுத்து

“திருப்புதல்” அல்லது “பிரித்தல்” அல்லது “தனிமைப்படுத்தல்”

தகப்பனுக்கு எதிராக ஒருவன்

“தகப்பனுக்கு எதிராக மகன்”

ஒருவனின் எதிரிகள்

“ஒரு மனுஷனின் எதிரிகள்” அல்லது “ஒரு மனிதனின் மோசமான எதிரிகள்”

அவன் வீட்டாரே

“தன் சொந்த குடும்ப உறுப்பினர்கள்”

Matthew 10:37

இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.

நேசிக்கிறவன்...பாத்திரனல்ல

மறு மொழிபெயர்ப்பு: “நேசிக்கிறவர்கள்...பாத்திரர்கள் அல்ல” அல்லது “நீங்கள் நேசித்தால்...நீங்கள் பாத்திரர்கள் அல்ல.”

எவன்

“யாராயினும்” அல்லது “யார் ஒருவன்” அல்லது “இவனாயினும்” அல்லது “மனுஷர் யார்”

நேசிக்கிற

“நேசம்” என்கிற வார்த்தை “சகோதர சிநேகத்தைக்” குறிக்கிறது அல்லது “ஒரு நண்பனின்” சிநேகத்தைக் குறிக்கிறது. “அக்கறை கொண்டு” அல்லது “அர்ப்பணிப்போடு” அல்லது “பிரியத்தோடு” என்றும் மொழிபெயர்க்கலாம்.

எனக்கு பாத்திரம் அல்ல

“என்னுடயவனாய் இருக்க தகுதியில்லை” அல்லது “என்னுடைய சீடனாய் இருக்கத் தகுதி இல்லை” அல்லது “எனக்கு சொந்தமாய் இருக்க தகுதி இல்லை.” (UDB)

எடுத்துக்கொள்ளாதவன்...இல்லை

மறு மொழிபெயர்ப்புகள்: “எடுத்துக்கொள்ளாதவர்கள்...இல்லை” அல்லது “நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றால்...நீங்கள் இல்லை” அல்லது “நீங்கள் எடுத்துக் கொள்ளாதவரையில்.”

எடுத்துக்கொண்டு...சிலுவை மற்றும் பின்தொடர்ந்து

சாகவும் ஆயத்தமாக இருப்பதற்கான உருவகம் இது. ஒரு பொருளை எடுத்துக் கொண்டு மற்றவர் பின்னே நடந்து சொல்வதைக் குறிக்கும் பொதுவான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

எடுத்துக்கொண்டு

“தூக்கு” அல்லது “எடுத்துக் கொண்டு” மற்றும் சுமந்து”

கண்டடைகிறவன்...இழந்துவிடுவான்...இழக்கிறவன்....கண்டடைவான்

எவ்வளவு குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தவும். மறு மொழிபெயர்ப்பு:“கண்டடைகிறவர்கள்...இழந்துபோவார்கள்...இழந்துபோகிறவர்கள்...கண்டடைவார்கள்” அல்லது “நீங்கள் கண்டடைந்தால்...இழந்துபோவீர்கள்...இழந்துபோகிறவர்கள்...கண்டடைவார்கள்.”

கண்டடைகிறது

“வைத்திருக்கிறது” அல்லது “பாதுகாக்கிறது” என்பதற்கான ஆகுபெயர் ஆகும். மறு மொழிபெயர்ப்பு: “வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது” அல்லது “பாதுகாக்க முயற்சிக்கிறது.”

இழந்து போவார்கள்

அம்மனிதன் மரித்துப்போவான் என்பது இதன் அர்த்தமல்ல. “சத்திய வாழ்வு கிடைக்காது” என்பதற்கான உருவகமாகும்.

இழக்கிறது

மறு மொழிபெயர்ப்பு: “விட்டுவிடுகிறது” அல்லது “விட்டுவிட ஆயத்தமாயிருக்கிறது.”

என்னிமித்தம்

“என்னை நம்புகிறதினால்” (UDB) “என்னால்” அல்லது “என்னிமித்தம்.” மத்தேயு 10:16, 18 இல் உள்ள “என்னிமித்தமாக” என்பதன் அதே கருத்து இதுவாகும்.

கண்டடைவார்கள்

இந்த உருவகம் “சத்திய வாழ்வைக் கண்டடைவார்கள்” என்று பொருள்படும்.

Matthew 10:40

இயேசு தன்னுடைய சீடர்கள் போகும் போது உதவி செய்பவர்களுக்கு அவர் பதில் செய்வார் என்பதை விவரிக்கத் துவங்குகிறார்.

எவன் ஒருவன்

“யாராயினும்” அல்லது “எவனாயினும்” அல்லது “எவனொருவன்” (UDB) என்று மொழிபெயர்க்கப்படலாம்.

வரவேற்கிறது

மத்தேயு 10:14 இல் உள்ள “ஏற்றுக்கொள்கிறது” என்ற வார்த்தையே தான் இதும். “விருந்தாளி போல ஏற்றுக்கொள்ளுதல்”

நீங்கள்

“நீங்கள்” என்றப் பிரதிப் பெயர் இயேசு பேசிக்கொண்டிருக்கும் பன்னிரண்டு சீடர்களைக் குறிக்கும்

என்னை அனுப்பினவரை வரவேற்கிறான்

“என்னை அனுப்பின பிதாவாகிய தேவனை வரவேற்கிறான்”

Matthew 10:42

இயேசு தன்னுடைய சீடர்கள் போகும் பொது உதவி செய்பவர்களுக்கு அவர் பதில் செய்வார் என்பதை விவரிப்பதை முடித்தார்.

கொடுக்கிற யாராயினும்

“கொடுக்கிற எவனாயினும்.”

இந்த முக்கியத்துவமில்லாதவர்களுள் ஒருவனுக்கு, என்னுடைய சீடனாயிருப்பதினால் ஒரு கலசம் தண்ணீர் குடிப்பதற்குக் கொடுத்தால்.

இந்த முக்கியத்துவமில்லாதவர்களுள் ஒருவனுக்கு, என்னுடைய சீடன் என்பதால் ஒரு கலசம் தண்ணீர் குடிப்பதற்குக் கொடுத்தால்

“இந்த சிறியவருள் ஒருவனுக்கு என்னுடைய சீடனாயிருப்பதினால் குடிக்க ஒரு கலசம் குளிர்ந்த நீர் கொடுத்தால்” அல்லது “என்னுடைய சீடர்களுள் மிகச் சிறியவனுக்கு குடிக்க குளிர்ந்த நீர்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.

அவனுடைய பலனை இழந்துபோவதில்லை

“அவனுடைய வெகுமதியைக் கண்டிப்பாகப் பெறுவான்”

இழந்து

“மறுக்கப்பட்டு.” தங்களுடையது எடுத்துக்கொள்ளப்படுவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.