Matthew 9

Matthew 9:1

இயேசு பக்கவாதமுள்ள ஒரு மனிதனை குணமாக்கும் சம்பவத்தைச் சொல்லும் பகுதியைத் துவக்குகிறது

இயேசு படகில் ஏறினார்

இயேசு படகில் ஏறினார்

சீடர்கள் இயேசுவோடு சென்றிருக்கலாம்.

ஒரு படகு

மத்தேயு 8:23இல் உள்ள அதே படகாககக் கூட இருக்கலாம். குழப்பத்தைத் தவிர்க்க மட்டும் இதனைக் குறிப்பிடவும்.

அவருடைய சொந்த ஊருக்கு வந்தார்.

“அவர் தங்கியிருந்த பட்டணத்திற்கு”

இதோ

இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.

அவர்கள் ... அவர்களுடைய

முடக்குவாதம் உள்ளவனை யேசுவிடம் கொண்டு வந்தவர்கள். முடக்குவாதம் உள்ளவனையும் உள்ளடக்கி இருக்கலாம்.

குமாரன்

அம்மனிதன் இயேசுவினுடைய சொந்தக் குமாரன் அல்ல. இயேசு அவனிடம் சாந்தமாகப் பேசினார். இது குழப்புகிறது என்றால், “என் நண்பனே” அல்லது “வாலிபனே”என்று மொழிபெயர்க்கவும்.

உன்னுடையப் பாவங்கள் மன்னிக்கப்பட்டது

“தேவன் உன் பாவங்களை மன்னித்தார்” அல்லது “நான் உன் பாவங்களை மன்னித்தேன்”

Matthew 9:3

இயேசு பக்கவாதமுள்ள ஒரு மனிதனை குணமாக்கும் சம்பவத்தைச் சொல்லும் பகுதியைத் தொடர்ந்து சொல்லுகிறது.

இதோ

இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.

அவர்களுக்குள்ளே

“அவர்களுக்கே” அவர்களுடைய மனதில், அல்லது “ஒருவருக்கொருவர்” தங்கள் வாயினால் என்று அர்த்தம் கொள்ளலாம்.

பரிசேயர்கள் தேவன் மட்டுமே செய்யக்கூடும் என்பவைகளைத் தானும் செய்ய முடியும் என்று உரிமைக்கொண்டாடினார்.

அவர்களின் நினைவுகளை அறிந்திருந்தார்

இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையிலோ அல்லது அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை கண்டதாலோ இயேசு அவர்கள் நினைத்துக்கொண்டிருந்ததை அறிந்திருந்தார்.

ஏன் உங்கள் மனதில் தீமையை நினைத்துக்கொண்டிருகிறீர்கள்?

இந்த கேள்வியை இயேசு அவர்களை கடிந்து கொள்ளும்படி பயன்படுத்தினார்.

நீங்கள் ... உங்களுடைய

பன்மை

தீமை

இது சமூகநெறித் தீமை அல்லது துன்மார்க்கம், ஒரு சிறிய தவறல்ல.

எது சுலபமானது ...?

இயேசு இந்தக் கேள்வியினால், அவனுடைய பாவங்களே அவன் முடக்குவாதனாய் இருப்பதற்குக் காரணம் என்றும், அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டால் அவன் நடக்க முடியும் என்றும் பரிசேயர்கள் நினைத்து இருந்ததினால், அவர்களுக்கு தான் அவனை சுகமாக்குவதனால் பாவங்களையும் மன்னிக்க அவரால் கூடும் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்பதிற்காக, நினைப்பூட்டினார்.

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” அல்லது “எழுந்து நட” என்று சொல்வதா, எது சுலபமானது?

“’உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது’ என்று சொல்வது சுலபமா?” அல்லது “’எழுந்து நட’ என்று சொல்வது சுலபமானதோ?’” உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. இது 1. “நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்” (UDB) 2. தேவன் உன் பாவங்களை மன்னிக்கிறார்” என்று அர்த்தப்படும். “உன்னுடைய” என்பது ஒருமையில் உள்ளது.

ஆயினும் நீ அறிந்துகொள்ளும்படி

“நான் உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன்.” “உங்களுக்கு” பன்மையில் உள்ளது.

உன்னுடைய ... உன்னுடைய

ஒருமை

உன் வீட்டுக்குப் போ

இயேசு அவன் வேறெங்கும் போக வேண்டாம் அவனைத் தடுக்கிறார். அவன் தன வீட்டுக்குப் போக அவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கிறரர்.

Matthew 9:7

இயேசு முடக்குவாதம் உள்ள மனிதனை குணமாக்கும் சம்பவம் இது முடிக்கிறது. பின்பு இயேசு ஒரு வரி வசூலிப்பவனை தன் சீடனாய் இருக்க அழைக்கிறார்.

துதி

மத்தேயு 5:15, 16 இல் பயன்படுத்தின அதே வார்த்தையை பயன்படுத்தவும்.

இப்படிப்பட்ட அதிகாரம்

பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்லும் அதிகாரம்

மத்தேயு ...அவனுக்கு...அவன்

சபைப் பாரம்பரியம் மத்தேயு இந்த சுவிசேஷத்தின் ஆசிரியர் என்று சொல்லுகிறது. ஆனால் இந்த குறிப்புகள் பிரதிப் பெயர்ச்சொற்களாகிய அவனுக்கு, அவன் என்பவைகளை எனக்கு, நான் என்று மாற்றுவதற்கு எந்தக் காரணமும் கொடுக்கவில்லை

அவர் அவனிடம் சொன்னார்

“இயேசு மத்தேயுவிடம் சொன்னார்”

இயேசு அவ்விடம் விட்டு கடந்து போனார்.

இந்தச் சொற்றொடர் “இதோ” என்ற வார்த்தையோடு ஆரம்பிக்கும் சம்பவத்தை (மத்தேயு 09:07 ; 9:8) அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் இதை செய்யக்கூடிய வழி இருக்குமானால் செய்யவும்.

கடந்து போவது

என்பதைக் குறிக்க பொதுவான வார்த்தையைப் பயன்படுத்தவும். இயேசு மலை மீது ஏறினாரா அல்லது மலையிலிருந்து இறங்கினாரா அல்லது கப்பர்நகூமுக்குப் போனாரா அல்லது அங்கிருந்து தூரப்போனாரஎன்பது தெளிவில்லை.

அவன் எழுந்து அவரைத் தொடர்ந்து போனான்

ஒரு சீடனாய் “மத்தேயு எழுந்து இயேசுவைப் பின் தொடர்ந்தான்” (UDB யைப் பார்க்கவும்), இயேசுவின் அடுத்த சேருமிடத்திற்கல்ல.

Matthew 9:10

வரிவசூலிக்கும் மத்தேயுவின் வீட்டில் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது.

வீடு

இது ஒருவேளை மத்தேயுவின் வீடாய் இருக்கலாம் (UDB யைப் பார்க்கவும்). ஆனால் அது இயேசுவின் வீடாய்க் கூட இருக்கலாம் (“இயேசுவோடும் அவர் சீடர்களோடும் உணவுப்பந்திருந்தார்கள்)

இதோ

“இதோ” என்ற வார்த்தை இந்த சங்கதியில் வரும் புதிய மனுஷர்களை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய ஒரு வழி இருக்கலாம். ஆங்கிலத்தில் “ஒரு மனிதன் இருந்தான், அவன் ...” சொல்லப்பட்டிருக்கிறது.

பரிசேயர்கள் அதைக் கண்டபோது

“இயேசு ஆயக்காரரோடும் (வரிவசூலிப்பவர்கள்) பாவிகளோடும் உண்பதைப் பரிசேயர்கள் பார்த்தபோது.”

Matthew 9:12

வரிவசூலிக்கும் மத்தேயுவின் வீட்டில் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது.

இயேசு இதைக் கேள்விப்பட்டபோது

“இதை” என்பது பரிசேயர்கள் இயேசு அவர்களோடு இயேசு ஆயக்காரரோடும் (வரிவசூலிப்பவர்கள்) பாவிகளோடும் உணவு உண்பதைக் குறித்தக் கேள்வியைக் குறிக்கும்.

உடலில் வலிமை உள்ளவர்கள்

“திடகாத்திரமாய் இருப்பவர்கள்.”

வைத்தியர்

“மருத்துவர்” (UDB)

வியாதியாய் இருப்பவர்களுக்கு இதுமாதிரி ஒருவர் தேவை

“வியாதியாய் இருப்பவர்களுக்கு மருத்துவர் தேவை”

நீங்கள் போய் இது என்ன என்று கற்றுக்கொள்ள வேண்டும்

“இதன் அர்த்தத்தை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்”

நீங்கள் போக வேண்டும்

பிரதிப் பெயர் “நீங்கள்” என்பது பரிசேயர்களைக் குறிக்கிறது.

Matthew 9:14

யோவான் ஸ்நானகனின் சீடர்கள் ஏன் இயேசுவின் சீடர்கள் உபவாசிப்பதில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.

கல்யாணத்திற்கு வந்தவர்கள் துக்கமாய் இருக்கலாமா...அவர்களுக்கு?

கல்யாணத்திற்கு வந்தவர்கள் மணவாளன் அவர்களோடு இருக்கையில் உபவாசிக்க வேண்டுமென்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள்.

கல்யாணத்திற்கு வந்தவர்கள்

இயேசுவின் சீடர்களுக்கு இது உருவகமாகும்.

மணவாளன் அவர்களோடு இருக்கும்போது...மணவாளன் அவர்களை விட்டு எடுத்துக்கொள்ளப்படுவார்

“மணவாளன்” இயேசுவாகும். அவர் இன்னும் உயரோடு இருக்கிறார். “இன்னும்” சீடர்களோடு “இருக்கிறார்”.

மணவாளன் அவர்களை விட்டு எடுத்துக்கொள்ளப்படுவார்

“வேறொருவன் மணவாளனை எடுத்துக்கொண்டு செல்வார்.” கொள்ளப்படுவதைச் சொல்லும் உருவகம் இதுவாகும்.

துக்கமாயிருக்க

“வருந்துவது...சோகமாயிருப்பது” (UDB)

Matthew 9:16

யோவானின் சீடர்கள் கேட்டக் கேள்விக்கு இயேசு தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருந்தார்.

ஒருவனும் பழைய துணியின்மேல் புதுத் துணியைப் போடமாட்டான்.

பழைய பாரம்பரியத்தை மட்டும் தெரிந்தவர்கள் புதியவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆடை

“உடுப்பு”

மறைக்கப்பயன்படும் துணி

கிழிந்த துணிமீது மறைக்கப் பயன்படும் “புதிய துணி”

Matthew 9:17

யோவானின் சீடர்கள் கேட்டக் கேள்விக்கு இயேசு தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருந்தார்.

பழையத் துருத்தியில் புதுத் திராட்ச ரசம் ஊற்றவும் மாட்டார்கள்.

யோவானின் சீடர்களின் கேள்விக்கு (நாமும் பரிசேயர்கள் மட்டும் ஏன் அடிக்கடி உபவாசிக்க வேண்டும், ஆனால் உங்கள் சீடர்கள் மட்டும் ஏன் அப்படி செய்வதிலை? ) பதிலாக சொல்லப்பட்ட உருவகமோ # அல்லது உவமானமோ இதுவாகும்

போடமாட்டார்கள். “ஊற்றவும் மாட்டார்கள்” (UDB) அல்லது “மனுஷர் போடவும் மாட்டார்கள்”

புது திராட்ச ரசம்

“திராட்ச பானம்.” இது புளிக்காத ரசத்தைக் குறிக்கிறது. திராட்சைப் பழம் உங்கள் இடத்தில் இல்லாதது என்றால், உங்கள் பகுதிகளில் உள்ள பொதுவான பழத்தின் பெயரைக் பயன்படுத்தவும்.

பழைய துருத்திகள்

பல முறை உபயோகப்படுத்தப்பட்ட துருத்தியைக் குறிக்கிறது.

துருத்திகள்

மிருகத்தின் தோல்களிலிருந்து செய்யப்பட்ட பைகள் இவை. இவை “திராட்ச ரசப்பைகள்” அல்லது “தோல் பைகள்”என்றும் அழைக்கப்படும் (UDB).

துருத்தி வெடித்துப்போகும்

புது ரசம் புளித்துப் பெருகும் போது, அவைகள் விரிய முடியாமல் கிழிந்துத் திறக்கும்.

அழிந்தது

“கெட்டுவிட்டது” (UDB)

புதுத் துருத்திகள்

“புதியத் துருத்திகள்” அல்லது “புதிய ரசப்பைகள்.” இது உபயோகப்படுத்தப்படாத துருத்திகளைக் குறிக்கிறது.

Matthew 9:18

யூதத் தலைவனின் மகளைக் குணமாக்குவதைப்பற்றிய கணக்கு இங்கு துவங்குகிறது. இந்தக் காரியங்கள் யோவான் சீடர்கள் உபவாசத்தைக் குறித்து கேட்ட கேள்விக்கு இயேசு சொன்ன பதிலை இது குறிக்கிறது. இதோ “இதோ” என்ற வார்த்தை இந்த சங்கதியில் வரும் புதிய மனுஷர்களை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய ஒரு வழி இருக்கலாம். அவரை தலைக் குனிந்து வணங்கி யூத கலாச்சாரத்தில் ஒருவருக்கு மரியாதை செலுத்தும் முறை இப்படியே. வந்து அவள் மீது உம் கையை வையும் அப்பொழுது அவள் பிழைப்பாள் இது யூதத் தலைவனுக்கு இயேசுவுக்கு தன் மகளை பிழைக்கச் செய்யும் சக்தி இருக்கிறது என்று நம்பினான் என்பதைக் காட்டுகிறது. அவர் சீடர்கள் இயேசுவின் சீடர்கள்

Matthew 9:20

யூதத் தலைவனின் மகளை குணமாக்க சென்று கொண்டிருக்கும்போது எவ்வாறு மற்றொரு பெண்ணை குணமாக்கினார் என்பதை விவரிக்கிறது.

இதோ

“இதோ” என்ற வார்த்தை இந்த சங்கதியில் வரும் புதிய மனுஷர்களை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய ஒரு வழி இருக்கலாம்.

மிகுந்த ரத்தப் போக்கு இருந்தது

“மிகக்கடுமையாக ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.” அந்நேரம் அதற்கானது இல்லையென்றாலும் அவளுடைய கருப்பையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்திருக்கலாம். சில கலாச்சாரங்கள் இந்த நிலைமையை குறிக்க சாந்தமான வேறொரு வழி இருக்கலாம்.

அவர் துணியைத் தொட்டால்தான், நான் சுகமாவேன்

அவர் உடுப்பு அவளை சுகமாக்கும் என்று அவள் நம்பவில்லை. இயேசு அவளை சுகமாக்குவார் என்று நம்பினாள்.

உடுப்பு

“அங்கி”

ஆனால்

“பதிலாக.” அவள் நடக்கும் என்று நம்பினது நடக்கவில்லை.

மகள்

அப்பெண் இயேசுவின் உண்மையான மகளல்ல. இயேசு அவளிடல் சாந்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். இது குழப்பமாய் இருக்கிறது என்றால், “வாலிபப் பெண்ணே” என்று மொழிபெயர்க்கவும். அல்லது கழித்து விடவும்.

Matthew 9:23

யூதத் தலைவனின் மகளை குணமாக்கும் செய்தியை விவரிக்கிறது.

தலைவனின் வீடு

இது யூதத் தலைவனின் வீடு.

புல்லாங்குழல்

இது காற்றை ஒரு முனைப்பகுதியில் ஊதி இசைக்கும் ஒரு நீளமான உள்ளே குழிவு உள்ள இசைக்கருவி ஆகும்.

குழல் ஊதுபவர்கள்

“குழல் ஊதும் மக்கள்”

தூரம் போங்கள்

உங்கள் மொழியில் இருக்குமானால் பன்மையைப் பயன்படுத்தவும் ஏனென்றால் இயேசு அனேகரோடு பேசிக்கொண்டிருந்தார்.

அந்தச் சிறுமி மரிக்கவில்லை, உறங்கிக் கொண்டிருந்தாள்

இயேசு உறக்கம் என்கிற பிம்பத்தை உபயோகப்படுத்திறார் ஏனென்றால் அவள் மரணம் ஒரு சிறு மணித்துளி மட்டுமே; அவளை எழுப்பப்போகிறார் என்பதையும் அறிந்திருந்தார்.

Matthew 9:25

யூதத் தலைவனின் மகளை குணமாக்கும் சம்பவம் முடிகிறது.

மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பிய போது

“இயேசு மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியப் பிறகு” அல்லது “குடும்பம் அந்த மக்களை வெளியே அனுப்பியப் பிறகு”

எழுந்து

“படுக்கையை விட்டு எழுந்து.” மத்தேயு 08:14, 8:15 இல் உள்ள அதே கருத்து தான்.

இந்த சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று

இந்த ஆள்தத்துவம் மக்களே அச்செய்தியை மற்றவர்களுக்கு சொன்னார்கள் என்பதைச் சொல்லுகிறது. “அந்த முழுப் பிரதேசத்தின் மக்களும் அதைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள்” (UDB) அல்லது “அந்தச் சிறுமி உயிரோடு இருப்பதைப் பார்த்தவர்கள் அந்தப் பகுதியிலுள்ள ஒவ்வொருக்கும் சொல்ல ஆரம்பித்தார்கள்.”

Matthew 9:27

இயேசு இரண்டு குருடர்களைக் குணமாக்கும் சங்கதியை இது துவங்குகிறது.

இயேசு அங்கிருந்து சென்று கொண்டிருக்கும்போது

அந்தப் பகுதியை விட்டு இயேசு போய்க் கொண்டிருந்தார்.

கடந்து சென்றார்

இயேசு மலைக்கு மேலே சென்றாரோ அல்லது கீழே சென்றாரோ தெரியவில்லை. போவதைக் குறிக்கும் பொதுவான வார்த்தையைப் பயன்படுத்தவும்.

தாவீதின் குமாரன்

இயேசு தாவீதின் சொந்தக் குமாரனல்ல, அதனால் “தாவீதின் சந்ததி” என்று மொழிபெயர்க்கலாம் (UDB). ஆயினும், “தாவீதின் குமாரன்” மேசியாவுக்குக் கொடுத்த பெயர்களில் ஒன்றாகும். இயேசுவை இந்தப் பெயர் வைத்து அழைத்துக்கொண்டுமிருந்திருக்கலாம்.

இயேசு வீட்டினுள் வந்தபோது

இது இயேசுவின் வீடாக இருக்கலாம் |(UDB), அல்லது மத்தேயு 9:10 இல் சொல்லப்பட்ட வீடாக இருக்கலாம்.

ஆம், கர்த்தாவே

“ஆம், கர்த்தாவே, நீர் எங்களை குணமாக்க முடியும் என்று நம்புகிறோம்.”

Matthew 9:29

இயேசு இரண்டு குருடர்களை குணமாக்கும் சங்கதியை இது முடிக்கிறது.

அவர்களுடையக் கண்களைத் தொட்டு, பின்பு சொன்னார்

அவர்கள் இவருடையக் கண்களையும் ஒரே நேரத்தில் தொட்டாரா என்பதும், அல்லது தன் வலது கையை பயன்படுத்தி ஒவோருவனைத் தொட்டாரா என்பதும் தெரியவில்லை. இடது கை சுத்தமல்லாத வேலைகளைச் செய்யப் பயன்படுத்துவதால், அவர் தன வலது கையைப் பயன்படுத்தியிருப்பார் என்றே சொல்லலாம். அவர் தொடும் பொழுதே பேசினாரா அல்லது தோட்டப் பிறகு பேசினாரா என்பதும் தெளிவில்லை.

அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது

“தேவன் அவர்கள் கண்களை சுகமாக்கினார்” அல்லது “அந்த இரண்டு குருடர்களுக்கும் பார்க்க முடிந்தது”

ஆனால்

“பதிலாக.” இயேசு சொன்னதை அம்மனிதர்கள் செய்யவில்லை.

செய்தியைப் பரப்பி

“அனேக மக்களுக்கு தங்களுக்கு நடந்ததைச் சொன்னார்கள்”

Matthew 9:32

இயேசு தனது சொந்த ஊரின் மக்களை குணமாக்கும் சங்கதியை இது தொடர்கிறது.

இதோ

“இதோ” என்ற வார்த்தை இந்த சங்கதியில் வரும் புதிய மனுஷர்களை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய ஒரு வழி இருக்கலாம்.

ஊமையன்

பேச முடியாதவன்

ஊமையன் பேசினான்

“ஊமையன் பேசத் தொடங்கினான்” அல்லது “ஊமையனாக இருந்தவன் பேசினான்” அல்லது “இனி ஊமையன் அல்லாதவன், பேசினான்”

மக்கள் திகைத்தனர்

“மக்கள் ஆச்சரியப்பட்டனர்”

இதுவரைப் பார்க்கப் படவில்லை

“ஒருபோதும் இது நடக்கவில்லை” அல்லது “இது மாதிரியானதை ஒருவரும் பார்த்ததில்லை.”

பிசாசுகளை அவர் துரத்தினார்

“பிசாசுகள் போகும்படி கட்டாயப்படுத்தினார்.” பிரதிப் பெயர் “அவர்” இயேசுவைக் குறிக்கிறது.

Matthew 9:35

கலிலேயாப் பகுதியில் இயேசு கற்றுக்கொடுத்ததையும், பிரசங்கம் செய்ததையும், குணமாக்கினதையும் சுருக்கமாகச் இந்தப் பகுதி சொல்லுகிறது.

அனைத்துப் பட்டணங்களும்

“அநேகப் பட்டணங்கள்.”

பட்டணங்கள்...கிராமங்கள்

“பெரிய கிராமங்கள்...சின்ன கிராமங்கள்” அல்லது “பெரிய நகரங்கள்...சிறிய பட்டணங்கள்”

எல்லா வகை நோயும் மற்றும் எல்லா வகை வியாதியும்

“ஒவ்வொரு நோய் மற்றும் ஒவ்வொரு நோய்.” “வியாதி” மற்றும் “நோய்” என்ற வார்த்தைகள் மிகவும் ஒற்றுமையானவைகள். முடியுமானால் இரண்டு வார்த்தைகளாக மொழிபெயர்க்கலாம். “நோய்” ஒருவனை வியாதிப்படுத்துகிறது. “வியாதி” என்பது நோயினால் வரும் உடல் பெலவீனம்.

மேய்ப்பனில்லாத ஆடுகள் போல அவர்கள் இருந்தார்கள்

“அம்மக்களுக்கு தலைவனில்லை”

Matthew 9:37

இயேசு, முந்தின பகுதியில், தம்முடைய சீஷர்கள் மக்கள் கூட்டத்தின் தேவைகளுக்கு எவ்வாறு பதில்செய்யவேண்டுமென்று அறுவடையைக் குறித்ததான உருவக அணியைப் பயன்படுத்துகிறார்.

அறுப்பு மிகுதி, ஆனால் கூலிக்காரர்களோ கொஞ்சம்

இந்த உருவணி தேவன்மீதும் மாற்றும் அவருடைய ராஜ்யத்தில் சேர்க்கப்படுவதிலும் நம்பிக்கை உள்ள அநேகரையும், விளைநிலத்தில் வளரும் உணவையும் வேலை ஆட்களுக்கு தேவனைப் பற்றிச் சொல்லுபவர்களையும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கிறது. உருவகம் என்னவென்றால் கொஞ்சம்பேர் மாத்திரமே தேவனைப் பற்றி அநேகருக்குச் சொல்ல இருகிறார்கள்.

அறுப்பு

“முற்றிய உணவை சேர்ப்பது”

கூலிக்காரர்கள்

“வேலை ஆட்கள்”

அறுப்பின் கர்த்தரிடம் ஜெபம் பண்ணுங்கள்

“கர்த்தரிடம் ஜெபம் பண்ணுங்கள். அவர் அறுப்புக்கு அதிகாரியாயிருக்கிறார்.