Matthew 5

Matthew 5:1

அதிகாரங்கள் 5

7 ஒரே சம்பவம். இயேசு மலை மேல் ஏறி தன் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

அவர் தன் வாயைத் திறந்தார்

“இயேசு பேசத் தொடங்கினார்”

அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்

“அவர்களுக்கு” என்ற வார்த்தை சீடர்களைக் குறிக்கிறது.

ஆவியில் எளிமை

“தேவன் தங்களுக்குத் தேவை என்று அறிந்தவர்கள்”

துயரப்படுகிறவர்கள்

இம்மக்கள் சோகமாக இருக்கக் காரணங்கள்: 1. உலகத்தின் பாவநிலை அல்லது 2. அவர்களுடைய சுயப்பாவங்கள் அல்லது 3. ஒருவருடைய மரணம். துயரப்படுகிறதற்கானக் காரணத்தை உங்கள் மொழியானது வேண்டினாலொழிய சொல்லவேண்டாம்.

அவர்கள் ஆறுதல் அடைவார்கள்

மறு மொழிபெயர்ப்பு: “தேவன் அவர்களை ஆறுதல்படுத்துவார்.”

Matthew 5:5

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

நீதியின் மேல் பசி, தாகம்

“உண்பதிலும் குடிப்பதிலும் உள்ள விருப்பம் நேர்மையாக வாழவும் விருப்பம்.” அவர்கள் நிரப்பப்படுவார்கள்

“தேவன் அவர்களை நிரப்புவார்.”

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்

“இருதயத்தில் சுத்தமுள்ள மக்கள்”

அவர்கள் தேவனை பார்ப்பார்கள்

“அவர்கள் தேவனோடு வாழ அனுமதிக்கப்படுவார்கள்” அல்லது”தேவன் அவர்களைத் தன்னோடு வாழ அனுமதிப்பார்.”

Matthew 5:9

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

சமாதானம் பண்ணுபவர்கள்

இவர்கள் மற்றவர்கள் தங்களுக்குள் சமாதானமாய் இருக்க உதவுபவர்கள்.

தேவனுடைய மகன்கள்

இவர்கள் தேவனுடைய சொந்தப் பிள்ளைகள்

துன்பப்படுத்தப்படுபவர்கள்

மறு மொழிபெயர்ப்பு: “மற்றவர்களால் நேர்மையாக நடத்தப்படாதவர்கள்”

நீதியினிமித்தம்

“ஏனென்றால் தேவன் அவர்கள் செய்ய வேண்டும் என்று விரும்புவதை அவர்கள் செய்கிறார்கள்”

பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது

“தேவன் பரலோக ராஜ்ஜியத்தில் அவர்கள் வாழ அனுமதித்து இருக்கிறார்.”பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது அல்ல; ஆனால், தேவன் தம்முடைய பிரசன்னத்தில் வாழ உரிமைக்கொடுத்தார்.

Matthew 5:11

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

என்னிமித்தம் பொய்யாய் உங்களுக்கு எதிராக

“என்னை நீ பின்பற்றுவதால் உன்பேரில் உண்மையல்லாததை” அல்லது “என்னை பின்பற்றுவதைத் தவிர நீ எதுவும் செய்யாமல் அதற்கு தகுதியற்றவனாய் இருந்தபோதும்”

களிகூர்ந்து மகிழக்கடவாய்

“களிகூரு”, “மகிழ்ந்திரு” இரண்டும் ஒன்றையே சொல்லுகிறது. இயேசு தன்னை க் கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் களிகூர மட்டும் அல்ல முடியுமானால் இன்னும் சந்தோஷமாய் இருக்க விரும்புகிறார்.

Matthew 5:13

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

நீங்கள் உலகத்திற்கு உப்பாயிருக்கிறீர்கள்

“நீங்கள் உலகத்திலுள்ள மக்களுக்கு உப்பாயிருக்கிறீர்கள்” அல்லது “உணவிற்கு உப்பு எப்படியோ, உலகத்திற்கு நீங்கள் அப்படி.” இது 1. “உப்பானது உணவை சுவையாக்குவதைப்போல், நீங்கள் உலகத்திலுள்ள மக்கள் நல்லவர்களாகும் பொருட்டு அவர்களை பாதிக்க வேண்டும்” 2. “உப்பு உணவை பதப்படுத்துவது போல் நீங்கள் உலக மக்கள் கெட்டுப்போவதிலிருந்து காப்பீர்கள்” என்று அர்த்தம் கொள்ளலாம்.

உப்பு சாரமற்றுப்போனால்

இது 1. “உப்பு செய்ய வேண்டியதை செய்யாமல் தன் வல்லமையை இழக்குமானால்” அல்லது 2. “உப்பு சாரம் அற்று போனால்”

எவ்வாறு மறுபடியும் சாரமாக்கப்படும்?

“எவ்வாறு மறுபடியும் உபயோகமாக்கப்படும்?” அல்லது “அது மறுபடியும் உபயோகப்பட வேறே வழி இல்லை.”

மனிதரால் மிதிக்கப்படுவதற்கும் வெளியிலே கொட்டப்படுவதற்கும்

“மனிதர்கள் நடந்து செல்லும் சாலைகளில் கொட்டப்படுவதற்கு மாத்திரமே பயன்படும்”

நீங்கள் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறீர்கள்

“நீங்கள் உலகத்திலுள்ள மக்களுக்கு ஒளியை போன்றவர்கள்.”

மலை மேல் இருக்கும் பட்டணம் மறைந்திருக்க மாட்டாது

“மலை மேல் இருக்கும் பட்டணத்தின் ஒளியானது இரவில் மறைந்திருக்க மாட்டாது” அல்லது”மலை மேலுள்ள பட்டணத்தின் விளக்குகளை ஒவ்வொருவரும் காண்பார்கள்”

Matthew 5:15

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

மக்கள் விளக்கைக் கொளுத்தவும் மாடார்கள்

“மக்கள் விளக்கைக் கொளுத்தவும் மாடார்கள்”

விளக்கு

இது ஒரு திரியுள்ள எரிப்பான் ஒலிவ எண்ணெயும் உள்ள ஒரு சின்ன கிண்ணம். முக்கியமான விஷயம் என்னவென்றால் அது ஒளி தந்தது.

கூடையின் கீழ் வை

“கூடையின் கீழ் விளக்கை வைக்க.” விளக்கை கொளுத்தி யாரும் வெளிச்சம் காணாத வண்ணம் அதைக் கூடையின் கீழ் வைத்தால் முட்டாள்தனமானது என்று கூறுகிறது.

Matthew 5:17

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

ஒரு எழுத்தாகிலும் அல்லது ஒரு எழுத்தின் உறுப்பாகிலும்*

“ஒரு எழுத்தாகிலும் அல்லது ஒரு எழுத்தின் உறுப்பாகிலும்” அல்லது “முக்கியமல்லாத யாதொரு நியப்பிரமாணங்களானாலும்”

வானம் மற்றும் பூமி

“தேவன் படைத்த ஒவ்வொன்றும்”

எல்லாம் நிறைவேற்றி முடிந்தது

“நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் தேவன் செய்து முடித்தார்,”

Matthew 5:19

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இந்தக் கட்டளைகளில் சிறிதான யாதொன்றையும் மீறுகிறவர்

“இந்தக் கட்டளைகளில் யாதொன்றிற்கும் கீழ்ப்படியாதவர், சிறிதான யாதொன்றிற்கும் கூட”

சிறியவன் என்று அழைக்கப்படுவான்

“தேவன் இவர்கள் முக்கியமில்லாதவர்கள் என்று சொல்லுவார்.”

சிறியவன்

“சிறிதளவே முக்கியத்துவம்”

அவர்களுக்கு போதிக்கிறவன்

தேவனுடைய எதாவது கட்டளைகளை போதிக்கிறவன்

பெரியவன்

“மிகவும் முக்கியமானவன்”

நீங்கள் ... உங்களுடைய ... நீங்கள்

இவை பன்மையில் உள்ளது

Matthew 5:21

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். “நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்கள்”மற்றும் “நான் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்பவைகள் பன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது. “கொலை செய்யாதிருப்பாயாக” என்பது ஒருமையில் சொல்லப்பட்டிருந்தாலும் பன்மையில் மொழிபெயர்க்கப்படவேண்டும்.

ஆனால் நான் சொல்லுகிறேன்

இந்த “நான்” அழுத்தி சொல்லப்பட்டிருகிறது. இது இயேசுவானவர் சொன்னவைகள் தேவனுடைய கட்டளைகளுக்கு நிகராக முக்கியமானவைகள் என்று காட்டுகிறது. இந்த பதத்தை அழுத்தி காண்பிக்க மொழிபெயருங்கள்.

கொலை செய் ... கொலை செய்கிறவன் ,இது கொலையைக் குறிக்கிறது, ஆயினும் எல்லா விதமான கொலைகளை அல்ல.

சகோதரன்

இது சொந்த சகோதரனையோ அல்லது அருகில் வசிப்பவரோ அல்ல, சக விசுவாசியைக் குறிக்கிறது.

தகுதியற்ற மனிதன் ... முட்டாள்

சரியாக யோசிக்க முடியாத மக்களுக்கான மானக்கேடு. “தகுதியற்ற மனிதன்” “மூளை இல்லதவனுக்கு,” சமமாகும். “முட்டாள்கள்” தேவனுக்கு கீழ்படியாமை என்னும் எண்ணத்தைச் சேர்க்கிறது.

ஆலோசனைச் சங்கம்

இது அவ்விடத்து ஆலோனைச் சங்கம், எருசலேமிலுள்ள நியாய சங்கம் அல்ல.

Matthew 5:23

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

நீங்கள்

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ”, உன்னுடைய” என்பவைகள் ஒருமையில் உள்ளது, ஆனால் உங்கள் மொழி இவைகளை பன்மையில் மொழிபெயர்க்க தேவைப்படலாம்.

காணிக்கையை செலுத்துகிறது

“உங்கள் காணிக்கையைக் கொடுக்கிறது” அல்லது “உங்கள் காணிக்கைகளைக் கொண்டுவருகிறது”

அங்கு நினைவுகூர்ந்தால்

“பலிபீடத்தண்டையில் நிற்கும்போது நீ நினைவுகூர்ந்தால்”

உனக்கெதிராக உன் சகோதரனுக்கு யாதொரு குறை இருந்தால்

“மற்றொருவன் உன்னால் செய்யப்பட்ட பாதிப்பையோ அல்லது குறையையோ நினைவுகூர்ந்தால்”

முதலாவது உன் சகோதரனோடு ஒப்புரவாகு

“காணிக்கை செலுத்துமுன் உன் சகோதரனோடு சமாதானம் பண்ணு”

Matthew 5:25

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ”, உன்னுடைய” என்பவைகள் ஒருமையில் உள்ளது, ஆனால் உங்கள் மொழி இவைகளை பன்மையில் மொழிபெயர்க்க தேவைப்படலாம்.

எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும்

“முடிவில் உன் எதிராளி உன்னை ஒப்புக்கொடுக்கலாம்” அல்லது “அதனால் உன் எதிராளி உன்னை ஒப்புக்கொடுக்கலாம்”

நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்கலாம்

“நீதிமன்றத்திற்கு உன்னை கூட்டி கொண்டு போகலாம்”

அதிகாரி

நீதிபதியின் தீர்மானங்களை நிறைவேற்ற அதிகாரம் உள்ளவன்

அங்கு

சிறைச்சாலை

Matthew 5:27

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ கேட்டிருக்கிறாய்”, நான் உன்னோடு சொல்லுவது” என்பவைகள் ஒருமையில் உள்ளது, ஆனால் உங்கள் மொழி இவைகளை பன்மையில் மொழிபெயர்க்க தேவைப்படலாம்.

ஒப்புக்கொடு

இந்த வார்த்தை செயல்படுகிறது அல்லது ஏதாகிலும் செய்கிறது என்று அர்த்தப்படும்.

ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன்

இந்த “நான்” அழுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. இது இயேசுவானவர் சொன்னவைகள் தேவனுடைய கட்டளைகளுக்கு நிகராக முக்கியமானவைகள் என்று காட்டுகிறது. இந்த பதத்தை அழுத்தி காண்பிக்க மொழிபெயருங்கள்.

ஓரு பெண்ணை இச்சையோடு ஒருவன் பார்த்தால் அவளோடு ஏற்கனவே இருதயத்தில் விபச்சாரம் செய்தாயிற்று

இந்த உருவகம் ஒரு பெண்ணை இச்சிக்கிறவன், ஒரு பெண்ணோடு விபச்சசாரம் செய்தவனுக்கு இணையாக குற்றவாளியாவான் என்பதைக் காட்டுகிறது.

ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிறவன்

“இன்னொரு பெண்ணை அடைய மனதில் விரும்புகிறவன்”

Matthew 5:29

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ”, உன்னுடைய” என்பவைகள் ஒருமையில் உள்ளது, ஆனால் உங்கள் மொழி இவைகளை பன்மையில் மொழிபெயர்க்க தேவைப்படலாம்.

வலது கண் ... வலது கை

மிகவும் முக்கியமான கண் அல்லது கை, இடது கண் அல்லது கைக்கு எதிர்பட்டிருக்கிறது. “வலது” என்பதை “சிறந்தது” என்று மொழிபெயர்க்கவேண்டும். அல்லது “மட்டும்.”

உன் வலது கண் உன்னை இடறச் செய்யும்மானால்

“உன் வலது கண் உன்னை இடறச்செய்யுமானால்” அல்லது “நீ காண்பதால் பாவம் செய்ய விரும்பினால்.” “இடறல்” “பாவத்திற்கு” உருவகமாகும். இயேசு இதை வேடிக்கையாக பயன்படுத்துகிறார். ஏனென்றால் இடறாமல் இருக்க மக்கள் கண்களையே பயன்படுத்துகின்றனர்.

பிடுங்கிப்போடு

“கட்டாயப்படுத்தி அதை அகற்று” அல்லது “அதை அழித்துவிடு” (UDB). வலது கண் என்று பிரத்தியேகமாக குறிப்பிடப்படவில்லை என்றால், “உன் கண்களைப் பிடிங்கிப்போடு” என்று மொழிபெயர்க்கவும். கண்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்குமானால், “அவைகளைப் பிடிங்கிப்போடு” என்று மொழிபெயர்க்கவும்.

உன்னிலிருந்து அதை எறிந்து போடு

“அதை அகற்று”

உன் உடல் பாகங்களில் ஒன்று அழிய வேண்டும்

“உன் உடலின் ஒரு பகுதியை நீ இழக்கவேண்டும்”

உன் வலது கை

இந்த ஆகுபெயர் முழு மனிதனின் செயல்பாட்டிற்கும் கையை இணைக்கப் பயன்படுத்தப்பட்டிருகிறது.

Matthew 5:31

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

அது... சொல்லப்பட்டது

கர்த்தரே “சொன்னவர்” (UDB). இயேசுவானவர் தாம் கர்த்தரையோ அல்லது கர்த்தருடைய வார்த்தையையோ அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கவில்லை என்பதை எளிமையாக செயல்பாட்டுவினையைப் பயன்படுத்திருக்கிறார்.

தன் மனைவியை அனுப்பிவிடுகிறவன்

விவாகரத்திற்கு இது சுற்றிவழைத்துக் கூறும் சொல் ஆகும்.

கொடுக்கக்கடவன்

இது ஒரு கட்டளை: “அவன் கொடுக்கவேண்டும்.”

ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இயேசு “சொல்லப்பட்டதிலிருந்து” தாம் சொல்வது மாறுபட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார். அழுத்தம் “நான்” என்ற வார்த்தையில் உள்ளது ஏனென்றால் “சொன்னவற்றை” விட தான் மிக முக்கியமானவர் என்பதை சொல்கிறார்.

விபச்சாரம் செய்யப் பண்ணுகிறவன்

சரியாக ஒரு பெண்ணை விவாகரத்து செய்யாதவனே “அவளை விபச்சாரம் செய்ய வைக்கிறான்” (மத்தேயு 5:27 இல் உள்ள “விபச்சாரம் செய்ய தூண்டிய” என்ற பதத்திற்கும் இங்கு பயன்படுத்தின வார்த்தைகளையே பயன்படுத்தவும்). அநேக கலாச்சாரத்தில் அவள் மறு திருமணம் செய்வது சாதரணமாக இருக்கலாம், ஆனால் விவாகரத்து சரியாகச் செய்யப்படவில்லை என்றால், அந்த மறு மணமும் விபச்சாரமே.

Matthew 5:33

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ கேட்டிருக்கிறாய்” என்பதில் உள்ள “நீ”, மற்றும் “நான் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்பவைகள் பன்மையில் உள்ளது, ஆனால், “நீங்கள் சத்தியம் பண்ணாமல்” இதில் உள்ள “நீங்கள்” ஒருமையில் உள்ளது.

சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருகிரீர்கள்

“உங்கள் மதத் தலைவர்கள் உங்களுக்கு சொல்லியிருகிறார்கள், ‘பூர்வத்தாருக்கு தேவன் “சத்தியம் பண்ணவேண்டாம்” என்று சொன்னார்.’” கர்த்தரே “சொன்னவர்.” இயேசுவானவர் தாம் கர்த்தரையோ அல்லது கர்த்தருடைய வார்த்தையையோ அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கவில்லை என்பதை எளிமையாக்க எதிர்மறையை பயன்படுத்திருக்கிறார். ஆனால், உங்களுடையதல்லாததை மற்றவர்கள் உங்கள் வார்த்தைகளை நம்பும்படி பயன்படுத்தவேண்டாம் என்று தன்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்களுக்குச் சொன்னார்.

அது சொல்லப்பட்டது

மத்தேயு 5:31இல் மொழிபெயர்த்தததைப்போல செய்யவும்.

ஆணை ... சத்தியம்...இது 1. தேவனிடமும் மக்களிடமும், தேவன் உங்களிடம் எதிர்பார்கிறதையே செய்வீர்கள் என்பதை சொல்லவும் (UDB). அல்லது 2. நீ பார்த்ததில் உள்ள உண்மையை சொல்லுகிறாய் என்று தேவன் அறிவார் என்று மக்களிடம் சொல்லுங்கள்.

ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

மத்தேயு 5:31, 32 இல் உள்ளதைப்போல மொழிபெயர்க்கவும்.

சத்தியம் பண்ணவேண்டாம் ... வானத்தின் மேலும் ... தேவனுடைய சிங்காசனம் ... பூமியின் மேலும் ... அவரின் பாதப்படி ... எருசலேமின் மேலும் ... மகா ராஜாவின் நகரம்.

இது ஏசாயாவிலிருந்தும் (66:1); சங்கீதத்திலிருந்ததுமான (148:1,2

தேவன்

“மகா ராஜா”) உருவகம். இயேசுவைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் தங்களுடைய பூமியின் அரசர்களின் சிங்கசனத்தையோ, அரசருடைய கீழான பாதபீடத்தையோ அல்லது அவன் வாழும் நகரத்தையோ தங்களுடையதாகக் கருதி தாங்கள் சொல்லும் வார்த்தைகளை உறுதிப்படுத்த நினையாததைப்போல், பரலோகத்தையோ, பூமியையோ, எருசலேமையோ, பயன்படுத்தக்கூடாது.

ஒருபோதும் சத்தியம் பண்ணவேண்டாம்.

உங்கள் மொழியில் கட்டளைகளுக்கு பன்மை வடிவம் இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்துங்கள். “பொய் சத்தியம் பண்ணாமல்” (5:33) என்பது கேட்கிறவனை பொய்யாக சத்தியம் பண்ணவொட்டாமல் சத்தியம் பண்ணலாம் என்பதை அனுமதிக்கிறது. “ஒருபோதும் சத்தியம் பண்ணாதே” என்பது சத்தியம் பண்ணுவதைத் தடுக்கிறது.

சத்தியம் பண்ணாதே

வசனம் 33றை மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்

Matthew 5:36

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார். “ நீ சத்தியம் பண்ணுவாயா” என்பதில் உள்ள “நீ”, மற்றும் “நீ கூடாதே” என்பவைகள் ஒருமையில் உள்ளது. நீங்கள் அவற்றை பன்மையில் மொழிபெயர்க்கலாம். “உங்கள் பேச்சில்”உள்ள “உங்கள்” பன்மையில் உள்ளது.

தேவனுடைய சிங்காசனம், பாதபீடம், பூமிக்குரிய வீடு ஆகியவற்றின் மீது சத்தியம் பண்ண இவைகள் தங்களுடையது அல்ல என்று தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இயேசு மத்தேயு05:33, 5:34

35 இல் சொன்னார். இங்கு, அவைகளுடைய தலைகளும் அவர்களுடையது அல்ல என்பதையும் சொல்லுகிறார்.

சத்தியம்

வசனம் 5:33,34ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்

உங்கள் பேச்சு ‘உள்ளதை, உள்ளதென்றும்’ என்றும், அல்லது ‘இல்லதை, இல்லதென்றும்’ இருக்கக் கடவது.

“’ஆம்’ என்று நீங்கள் நினைத்தால் ‘ஆம்’என்று சொல்லவும், ‘இல்லை’ என்று நினைத்தால் ‘இல்லை’ என்று’ சொல்லுங்கள்.”

Matthew 5:38

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார்.

சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டீர்கள்

வசனம் 5:33ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்

நீங்கள் கேள்விப்பட்டீர்கள்

“நீ” ஒருமையில் உள்ளது

கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்

மற்றவர்கள் தங்களுக்கு செய்வதை அவர்களுக்கு திரும்ப செய்ய மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆயினும் பாதிப்புக்கு சமமாக.

ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

வசனம் 5:31,32ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்

பொல்லாதவன்

“ஒரு பொல்லாத மனிதன்” அல்லது “உங்களைக் காயப்படுத்துபவன்”

உன் வலது கன்னத்தில் யாரேனும் அறைந்தால், திருப்பி

இவையெல்லாம் பன்மையில் உள்ளது.

அறைந்தால் ... உன் வலது கன்னம்

இயேசுவின் கலாச்சாராத்தில் ஒரு மனிதனின் பக்கவாட்டில் அடிப்பது அவமானமாகும். கண், கை, போல “வலது” கன்னம் இடதைவிட முக்கியமாக கருதப்படுகிறதினால் அதை அறைதல்... மிகவும் மோசமான அவமானமாகும். அடித்தல்

இந்த வினைச்சொல் திறந்திருக்கும் கையின் பின் பக்கத்தை வைத்து அறைந்ததை காட்டுகிறது.

அவனுக்கு மற்றதையும் காட்டு

“அவன் மற்ற கன்னத்திலும் அறையட்டும்.”

Matthew 5:40

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார். எல்லா “நீ” ,“உன்னுடைய” மற்றும் “விடு”, “போ”, “கொடு”, “திரும்பாதே” என்ற கட்டளைகள் ஒருமையில் உள்ளது. இவைகளை பன்மையில் மொழிபெயர்க்கலாம்.

வஸ்திரம் .... அங்கி

“வஸ்திரம்” என்பது கனமான சட்டையை போல உடலை ஒட்டி அணியப்படுவது. “அங்கி” வஸ்திரத்தை விட மதிப்புடையது. பின் வஸ்திரத்தின் மேல் உஷ்ணத்திற்காக இரவில் அணியப்படுவதாகும்.

அவனை விடு ... வைத்துக்கொள்ள

“அவனுக்குக் கொடு”

யாராயினும்

எந்த மனிதனும் ஒரு மைல்

ஒரு மைல்

ஆயிரமுழம், ஒரு ரோம போர் சேவகன் மற்றவனைத் தன் சுமையை அடுத்தவனை சுமக்க வைக்க சட்டத்தில் இடமுண்டு.

அவனோடு

இது உன்னை தன்னோடு வரும்படி கட்டாயம் பண்ணுபவனைக் குறிக்கும்.

அவனோடு இரண்டு

“அவன் கட்டாயப்படுத்தும் ஒரு மைல் தூரம் போ, பின்னர் இன்னொரு மைல் கூடப்போ”

Matthew 5:43

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார். “நீ சிநேகித்து ... உன் சத்துருவை பகைப்பாயாக” என்பது மட்டும் ஒருமையில் உள்ளது. ஆனால் பன்மையில் மொழிபெயர்க்கவும். மற்ற “நீங்கள்” என்ற பதமும் “நேசி”, “ஜெபி” என்ற கட்டளைகள் பன்மையில் உள்ளது.

சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்

வசனம் 5:33ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்

“அயலான்” என்றச் சொல் அதே சமுதாயத்தின் உறுப்பினர்களையும் அல்லது நன்றாக கவனிக்க விரும்பும் மக்கள் குழுவையும் குறிக்கிறது. வெறுமனே அருகில் வசிப்பவர்களை இது குறிக்கவில்லை. இதை நீங்கள் பன்மையில் மொழிபெயர்த்தல் வேண்டும்.

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

வசனம் 5:31, 32 ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்

உங்கள் தகப்பனுக்கு மகன்களாக இருப்பீர்கள்

“உங்கள் தகப்பனுடைய குணாதிசயம் உங்களுக்கு இருக்கலாம்”

Matthew 5:46

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார். “நீங்கள்”, “உங்களுடைய” என்பவைகள் பன்மையில் உள்ளது.

வாழ்த்து

இது, கேட்பவன் நலமாக இருக்க விரும்புவதைக் காண்பிக்கும் ஒரு பொதுவான வார்த்தையாகும்.

இந்த வசனங்களில் உள்ள நான்கு கேள்விகளும் பதிலை எதிர்பார்க்கவில்லை. UDB இல் அவற்றை வாக்கியங்களாக எப்படி மாற்றலாம் என்று காண்பிக்கிறது.