Matthew 28

Matthew 28:1

இயேசுவின் கல்லறைக்கு மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் சென்ற நாளும், நேரமும் என்ன ?

வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், அவர்கள் இயேசுவைப் பார்க்க கல்லறைக்கு போனார்கள்.

Matthew 28:2

கல்லறையின் வாசலில் இருந்த கல் எப்படி புரண்டது ?

கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திரங்கிவந்து, வாசலிலிருந்த கல்லை புரட்டிபோட்டான் .

Matthew 28:4

தேவதூதனைக் கண்ட காவலர்கள் என்ன செய்தனர் ?

காவலாளர் தேவ தூதனைக் கண்டு பயந்ததினால், செத்தவர்கள் போலானார்கள்.

Matthew 28:5

இரண்டு ஸ்திரீகளிடம் தேவதூதன் இயேசுவைக் குறித்து என்ன சொன்னான் ?

தேவதூதன் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார், அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்கு போகிறார் என்றான்.

Matthew 28:7

இரண்டு ஸ்திரீகளிடம் தேவதூதன் இயேசுவைக் குறித்து என்ன சொன்னான் ?

தேவதூதன் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார், அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்கு போகிறார் என்றான்.

Matthew 28:8

இரண்டு ஸ்த்ரிகள், சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது என்ன சம்பவித்தது ?

அந்த ஸ்திரீகள் இயேசுவை சந்தித்து, அவர் பாதங்களை தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

Matthew 28:9

இரண்டு ஸ்த்ரிகள், சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது என்ன சம்பவித்தது ?

அந்த ஸ்திரீகள் இயேசுவை சந்தித்து, அவர் பாதங்களை தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

Matthew 28:11

காவலர்கள் கல்லறையில் சம்பவித்ததை பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்ததும், அவர்கள் செய்தது என்ன ?

பிரதான ஆசாரியர்கள், சேவகர்களுக்கு வேண்டியப் பணத்தை கொடுத்து, இயேசுவின் சீஷர்கள் அவனை களவாய் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்ல சொன்னார்கள்.

Matthew 28:13

Matthew 28:17

கலிலேயாவிலே இயேசுவை சந்தித்த சீஷர்கள் என்ன செய்தனர் ?

சீஷர்கள், இயேசுவை பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.

Matthew 28:18

என்ன அதிகாரம் அவருக்குக் கொடுக்கபட்டிருப்பதாக இயேசு சொன்னார் ?

இயேசு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

Matthew 28:19

எந்த நாமத்தினாலே சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுக்கும்படி இயேசு சொன்னார் ?

இயேசு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்க தமது சீஷர்களுக்கு கட்டளைக்கொடுத்தார்.

Matthew 28:20

இயேசு தமது சீஷர்களிடம் இறுதியாக கூறியது என்ன ?

உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனேகூட இருப்பேன் என்று இயேசு சொன்னார்.