Matthew 1

Matthew 1:1

இயேசு கிறிஸ்துவின் வம்சவரலற்றில் இரண்டு முன்னோர்கள் அட்டவணையிடப்பட்டதால் அவர்கள் முக்கியமானவர்களா ?

அட்டவணையிடப்பட்ட முதல் இரண்டு முன்னோர்கள் தாவீது மற்றும் ஆபிரகாம்..

Matthew 1:16

வம்ச வரலாற்றில் அட்டவணையிடப்பட்டடுள்ள மனைவியின் பெயர் யார்? ஏன்?

யோசேப்பின் மனைவியாகிய மரியாளளிடத்தில் இயேசு பிறந்ததினால் அவளும் அட்டவணையிடப்படுள்ளாள்.

Matthew 1:18

மரியாளை யோசேப்பு சேர்த்துகொள்ளும் முன்பு அவளுக்கு சம்பவித்தது என்ன ?

யோசேப்பு, மரியாளை சேர்த்துகொள்ளும் முன்னே பரிசுத்த ஆவியினால் கர்பவதியனாள்.

Matthew 1:19

மரியாள் கர்பவதியாய் இருக்கிறாள் என்று யோசேப்பு அறிந்ததும் என்ன செய்ய மனதாயிருந்தான் ?

யோசேப்பு, மரியாளை ரகசியமாய் தள்ளிவிட மனதாயிருந்தான்.

Matthew 1:20

யோசேப்பு தன் மனைவியாகிய மரியாளை தன்னிடமாய் சேர்த்துக்கொள்ள காரணம் என்ன ?

தேவதூதன் யோசேப்புக்கு சொப்பனத்திலே தோன்றி சேர்த்துக்கொள்ளும்படி கூறினான் ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியினால் கர்பவதியாருந்தாள்.

Matthew 1:21

ஏன் யோசேப்பு அந்த குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டான் ?

யோசேப்பு அந்த குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டான் ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.

Matthew 1:23

பழைய ஏற்பாடு தீர்க்கதரிசி கூறியதில் இங்கே நடந்தது என்ன ?

பழைய ஏற்பாடு தீர்க்கதரிசி கூறியதாவது, ஒரு கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள்அவர் இம்மானுவேல் என்று அழைக்கபடுவார். இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

Matthew 1:25

யோசேப்பு ஏன் இயேசு பிறக்கும் வரை மிகவும் கவனமாயிருந்தான் ?

இயேசு பிறக்கும் வரை யோசேப்பு, மரியாளை சேராமல் மிகவும் கவனமாயிருந்தான்.