Matthew 1

Matthew 1:1

வசனங்கள் 1

17 இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களை அட்டவணை இடுகிறதது.

தாவீதின் குமாரன், ஆபிரகாமின் குமாரன்

மாற்று மொழிபெயர்ப்பு: "ஆபிரகாமின் சந்ததியாயிருந்த, தாவீதின் சந்ததி." ஆபிரகாமின் சந்ததிக்கும் அவரின் சந்ததி தாவீதுக்கும், மற்றும் தாவீதுக்கும் அவரின் சந்ததி இயேசுவுக்கும் இடையே பல தலைமுறைகள் இருந்தது. "தாவீதின் குமாரன்" என்ற பதம் மத்தேயு: 9:27 லிலும் மற்ற இடங்களிலும் தலைப்பாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இங்கு இயேசுவின் குடும்ப சரித்தரத்தைக் குறிப்பதாக இருக்கிறது.

ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன்

மாற்று மொழிபெயர்ப்பு: "ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பனனான்" அல்லது "ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்ற மகன் இருந்தான்" அல்லது "ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்ற பெயருடைய மகன் இருந்தான்."நீங்கள் ஒரு குறிப்பிட்ட முறையைத் தேர்ந்தெடுத்து, அட்டவணை முழுவதற்கும் பயன்படுத்தினால் இதைப் படிப்பவர்களுக்குத் தெளிவாகப் புரியும்.

தாமார்

பெயர்களுக்கு ஆண் மற்றும் பெண் பாலினங்களை அடையாள படுத்தும் மொழிகள், அவளுடைய பெயருக்கு பெண் பாலினத்தை பயன்படுத்த வேண்டும்.

Matthew 1:4

இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் குடும்ப அட்டவணை தொடர்கிறது. மத்தேயு 1:2

3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்.

"சல்மோன் போவாசின் தகப்பன், போவாசின் தாய் ராகாப்" அல்லது "சல்மோனும் ராகாபும் போவாசின் பெற்றோர்கள்."

போவாஸ் ரூத்தினிடத்தில் ஓபேதை பெற்றான்.

"போவாஸ் ஓபேதின் தகப்பன், ஓபேதின் தாய் ரூத்," அல்லது "போவாசும் ரூத்தும் ஓபேதின் பெற்றோர்கள்."

ராகாப் ... ரூத்

ஆண் மற்றும் பெண் பாலின பெயர் குறிப்பு உள்ள மொழிகள் அவற்றை இவர்களுடைய பெயர்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.

தாவீது சாலமோனை உரியாவின் மனைவியினிடத்தில் பெற்றான்.

"தாவீது சாலமோனின் தகப்பன், சாலமோனின் தாய் உரியாவின் மனைவி" அல்லது "தாவீதும் உரியாவின் மனைவியும் சாலோமோனின் பெற்றோர்கள்."

உரியாவின் மனைவி

"உரியாவின் விதவை"

Matthew 1:7

இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் குடும்ப அட்டவணை தொடர்கிறது. மத்தேயு 1:2

3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.

ஆசா

சில நேரங்களில் அவன் பெயர் "ஆசாப்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

யோராம் உசியாவின் தகப்பன்

உண்மையில் யோராம் உசியாவின் தாத்தாவின் தாத்தா, அதினால் "தகப்பன்", "முன்னோர்" (UDB) என்று மொழிபெயர்க்கப்படலாம்.

Matthew 1:9

இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் குடும்ப அட்டவணை தொடர்கிறது. மத்தேயு 1:2

3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்

ஆமோன்

இது சில நேரங்களில் "ஆமோஸ்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

யோசியா எகோனியாவின் தகப்பன்

உண்மையில் யோசியா எகோனியாவின் தாத்தா.

பாபிலோனுக்கு சிறைபட்டுபோன காலத்தில்

"பாபிலோனுக்கு போக கட்டாயப்படுத்தப்போது" அல்லது "பாபிலோனியர்கள் அவர்களை பாபிலோனில் வாழும்படி செய்தபோது." யார் பாபிலோனுக்கு சென்றார்கள் என்று உங்கள் மொழியில் குறிப்பிடுவது அவசியம் என்றால் "இஸ்ரவேலர்கள்" அல்லது "யூதாவில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள்" என்று சொல்லலாம்.

Matthew 1:12

இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் குடும்ப அட்டவணை தொடர்கிறது. மத்தேயு 1:2

3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.

சிறைபிடிப்பிற்குப்பின்

மத்தேயு 1 : 11 றில் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.

சலாத்தியேல் செருபாபேலின் தகப்பன்

சலாத்தியேல் உண்மையில் செருபாபேலின் தாத்தா

Matthew 1:15

இயேசு கிறிஸ்துவின் குடும்ப சரித்திரம் தொடர்கிறது. மத்தேயு 01:01;1:2

3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.

மரியாள், இவரிடதிலிருந்து இயேசு பிறந்தார்

மரியாள், இவரிடதிலிருந்து இயேசு பிறந்தார் என்ற வாக்கியம் செய்வினையில் "மரியாள் இயேசுவைப் பெற்றாள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

பாபிலோனுக்கு சிறைபிடிப்பு

மத்தேயு 1 : 11 றில் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.

Matthew 1:18

இயேசுவின் பிறப்பிற்கு வழிவகுத்த சம்பவங்களின் கணக்கை இது துவக்குகிறது. உங்கள் மொழியில் தலைப்பு மாற்றதை குறிக்க வழி இருக்குமானால் இங்கு பயன்படுத்தவும்.

மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்ய நிச்சயிக்கபட்டாள்

மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்ய நிச்சயிக்கபட்டாள். "திருமணம் செய்ய உறுதி செய்யப்பட்டாள்" (UDB) "திருமணத்திற்கு தீர்மானிக்கப்பட்டாள்." பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணங்களை ஒழுங்குபடுத்துவது இயல்பான ஒன்று.

அவர்கள் கூடி வரும் முன்னே

"அவர்கள் உடல் உறவு வைக்குமுன்" என்று அர்த்தமாம்.

அவள் கர்ப்பம் அடைந்திருக்கக் காணப்பட்டாள்

"அவள் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறாள் என்பதை உணர்ந்தார்கள்"

பரிசுத்த ஆவியானவரால்

பரிசுத்த ஆவியானவர் மரியாள் குழந்தையை பெறும்படி பெலப்படுத்தினார்.

Matthew 1:20

இயேசுவின் பிறப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகளை சொல்லும்படி இது தொடர்கிறது.

தோன்றினார்

சடிதியில் ஒரு தூதன் யோசேப்பினிடத்தில் வந்தார்

தாவீதின் குமாரன்

இந்த காரியத்தில், "

னுடைய குமாரன்" என்பது "

னுடைய சந்ததி". தாவீது யோசேப்பபினுடைய தகப்பன் அல்ல, ஆனால் யோசேப்பின் முன்னோன்.

அவளில் கருதரித்திருக்கிறவர் பரிசுத்த ஆவியானவரால் கருத்தரித்திருக்கிறது

"பரிசுத்த ஆவியானவர் கருத்தரித்த குழந்தையால் மரியாள் கர்ப்பம் அடைந்தாள்."

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்

கர்த்தரே தூதனை அனுப்பியதால், குழந்தையானது ஆண் என்று தூதன் அறிந்திருந்தான்.

நீ அவரைப் பெயரிட்டு அழைப்பாய்

இது ஒரு கட்டளை: "அவர் பெயரை கூப்பிடு" அல்லது "அவற்றுக்கு பெயர் கொடு" அல்லது “பெயர் சூட்டு"

அவர் அவரின் மக்களை காப்பார்

"அவரின் மக்கள்" என்பது யூதர்களைக் குறிக்கிறது

Matthew 1:22

இயேசுவின் பிறப்பு நிறைவேறும் என்று உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை மத்தேயு மேற்கோள் காட்டுகிறார்.

ஆண்டவரால் தீர்க்கதரிசியின் மூலமாக சொல்லப்பட்டதை

இதை நேர்மறையில் "வெகுகாலத்திற்கு முன்பு ஆண்டவர், ஏசாயா தீர்க்கதரிசியினிடம் எழுத சொன்னது" என்று குறிப்பிடலாம்.

இதோ

மாற்று மொழிபெயர்ப்பு: "பார்" அல்லது "கவனி" அல்லது "நான் என்ன சொல்கிறேன் என்பதற்கு கவனம் செலுத்துங்கள்."

கன்னிகை கர்ப்பம் தரித்து ஒரு மகனைப் பெறுவாள்

இந்த வசனம் ஏசாயா புத்தகத்திலிருந்து நேரிடையாக எடுக்கப்பட்டிருகிறது. ஏசாயா 7:14

Matthew 1:24

இந்தப் பகுதி இயேசுவின் பிறப்பிற்கு வழிவகுக்கும் சம்பவங்களுக்கு வித்திடுகிறது.

கட்டளையிடப்பட்டது

தூதன் அவனிடம் மரியாளை தன் மனைவியாக எடுத்துக்கொள்ளவும் அவருக்கு இயேசு என்று பெயரிடும்படியகவும் சொன்னார் (20

21).

அவளோடு உடலுறவு கொள்ளவில்லை

அவளோடு உறங்காதே

"அவளோடு உடல் உறவு வைக்கவில்லை"

அவரை இயேசு என்று அழைத்தான்

"யோசேப்பு தன் மகனுக்கு இயேசு என்று பெயரிட்டான்"