Matthew 18

Matthew 18:3

நாம் பரலோகராஜ்யம் செல்வதற்கு என்ன செய்யவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

நீங்கள் பரலோகராஜ்யம் செல்வதற்கு மனத்திரும்பி பிள்ளையைப் போல் மாறவேண்டும் என்றார்.

Matthew 18:4

எவன் பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்றார் ?

பிள்ளையைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவன் பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்று இயேசு சொன்னார்.

Matthew 18:6

இயேசுவில் விசுவாசமாய் இருக்கிற சிறியருக்கு இடறல் உண்டாக்குகிறவனுக்கு சம்பவிப்பது என்ன ?

என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லை கட்டி, சமுத்திரத்தின் ஆழத்தில் அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.

Matthew 18:8

நமக்கு இடறல் உண்டாக்குகிறதை என்ன செய்யும்படி இயேசு சொன்னார் ?

நமக்கு இடறல் உண்டாக்குகிறதை பிடுங்கி எரிந்து போடும்படி இயேசு சொன்னார்.

Matthew 18:9

நமக்கு இடறல் உண்டாக்குகிறதை என்ன செய்யும்படி இயேசு சொன்னார் ?

நமக்கு இடறல் உண்டாக்குகிறதை பிடுங்கி எரிந்து போடும்படி இயேசு சொன்னார்.

Matthew 18:10

ஏன் சிறியரை அற்பமாய் எண்ணவேண்டாம் என்று இயேசு சொன்னார் ?

சிறியரை அற்பமாய் என்ன வேண்டாம் ஏனெனில் அவர்களுக்குரிய தேவ தூதர்கள் எப்போதும் பிதாவை தரிசிக்கிறார்கள் என்றார்.

Matthew 18:12

காணாமற்போகிற ஆட்டை தேடுகிறவன் எப்படி பிதாவுக்கு ஒப்பாவான் ?

இந்த சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுபோவது பிதாவுக்கு சித்தமல்ல என்றார்.

Matthew 18:14

காணாமற்போகிற ஆட்டை தேடுகிறவன் எப்படி பிதாவுக்கு ஒப்பாவான் ?

இந்த சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுபோவது பிதாவுக்கு சித்தமல்ல என்றார்.

Matthew 18:15

உன் சகோதரன் உனக்கு விரோதமாய் குற்றம் செய்தால், நீ என்ன செய்ய வேண்டும் ?

முதலாவது, நீ அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து .

Matthew 18:16

உன் சகோதரன் செவிகொடாமற்போனால், இரண்டாவதுமுறை என்ன செய்ய வேண்டும் ?

இரண்டாவது, இரண்டு மூன்று சாட்சிகளை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.

Matthew 18:17

உன் சகோதரன் செவிகொடாமற்போனால், இறுதியாக என்ன செய்ய வேண்டும் ?

இறுதியாக சபைக்கும் அவன் செவிகொடமற்போனால் அவன் அயலான் போலவும், ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக.

Matthew 18:20

இரண்டு அல்லது மூன்றுபேராவது அவர் நாமத்தினால் கூடுபவர்களுக்கு என்ன உறுதி கூறினார் ?

இரண்டு அல்லது மூன்றுபேராவது என் நாமத்தினால் எங்கே கூடினாலும் அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் .

Matthew 18:21

நம் சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டுமென்று இயேசு சொன்னார் ?

உன் சகோதரனை ஏழு எழுபதுதரம் மன்னிக்க வேண்டும் என்று இயேசு கூறினார் .

Matthew 18:22

நம் சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டுமென்று இயேசு சொன்னார் ?

உன் சகோதரனை ஏழு எழுபதுதரம் மன்னிக்க வேண்டும் என்று இயேசு கூறினார் .

Matthew 18:24

ஊழியக்காரன் தன் எஜமானிடத்தில் என்ன கடன்பட்டவனாயிருந்தான்? அதை திரும்ப செலுத்தினனா ?

ஊழியக்காரன் தன் எஜமானிடத்தில் பதினாயிரம் தாலந்துகள் கடன்பட்டு அதை திரும்ப செலுத்த இயலாதவனாய் இருந்தான் .

Matthew 18:25

ஊழியக்காரன் தன் எஜமானிடத்தில் என்ன கடன்பட்டவனாயிருந்தான்? அதை திரும்ப செலுத்தினனா ?

ஊழியக்காரன் தன் எஜமானிடத்தில் பதினாயிரம் தாலந்துகள் கடன்பட்டு அதை திரும்ப செலுத்த இயலாதவனாய் இருந்தான் .

Matthew 18:27

ஆண்டவன் ஏன் ஊழியக்காரனின் கடனை மன்னித்தான் ?

ஊழியக்காரனின் ஆண்டவன் மனதிரங்கி,அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்தான் .

Matthew 18:28

ஊழியக்காரன் தன்னிடம் நூறு வெள்ளிப்பணத்தைக் கடன் பட்டிருந்த உடன்வேலைக்காரனை என்ன செய்தான் ?

அந்த ஊழியக்காரன் தன்னிடம் கடன்பட்ட உடன்வேலைகாரனிடம் பொறுமையாய் இராமல், அவனை காவலில் போடுவித்தான் .

Matthew 18:30

ஊழியக்காரன் தன்னிடம் நூறு வெள்ளிப்பணத்தைக் கடன் பட்டிருந்த உடன்வேலைக்காரனை என்ன செய்தான் ?

அந்த ஊழியக்காரன் தன்னிடம் கடன்பட்ட உடன்வேலைகாரனிடம் பொறுமையாய் இராமல், அவனை காவலில் போடுவித்தான் .

Matthew 18:33

ஆண்டவன் தன் ஊழியக்காரனிடத்தில் அவன் உடன்வேலைகாரனுக்கு என்ன செய்திருக்கவேண்டுமென்றார் ?

ஆண்டவன் தன் ஊழியக்காரனை நோக்கி உன் உடன்வேலைகாரனுக்கு நீ இறங்கி இருக்கவேண்டும் என்றான் .

Matthew 18:34

ஆண்டவன் தன் ஊழியக்காரனுக்கு திரும்ப செய்தது என்ன ?

ஆண்டவனிடத்தில் தன் ஊழியக்காரன் பட்ட கடனைக் கொடுத்துத் தீருமட்டும் அவனை உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புவித்தான்.

Matthew 18:35

நாம் தன் சகோதரன் குற்றங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால் பிதா என்ன செய்வதாக இயேசு சொன்னார் ?

நீங்களும் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்று இயேசு சொன்னார்.