பரிசேயரும், சதுசேயரும் இயேசுவிடம் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை காட்டவேண்டும் என்றார்கள் .
இயேசு அவர்களுக்கு யோனா தீர்கதரிசியின் அடையாளத்தைக் கொடுப்பதாக சொன்னார்.
இயேசு பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மவைக்குறித்து எச்சரிக்கயாய் இருக்கவேண்டும் என்றார்.
பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி இயேசு சொன்னார் .
இயேசு சீஷர்களிடத்தில், மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று கூறுகிறார்கள் என்று கேட்டார்.
ஜனத்தில் சிலர் இயேசுவை யோவான் என்றும், சிலர் எலியா என்றும் வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்றார்கள் .
பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
பிதா அவனுக்கு வெளிப்படுதினதினால் பேதுரு அதை அறிந்திருந்தான்.
பரலோகராஜ்யத்தின் திறவுகோலை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்படிருக்கும், பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கபட்டிருக்கும் .
நாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும், பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு மூன்றுநாளில் எழுந்திருக்கவும் வேண்டும் என்பதை சீஷர்களுக்கு சொல்ல தொடங்கினார்.
இயேசு, பேதுருவைப் பார்த்து எனக்குப் பின்னாக போ சாத்தானே என்றார் .
ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்து என்னைப் பின்பற்றக் கடவன் என்றார் .
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திகொன்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன.
அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்கு பலனளிப்பார் என்றார்.
இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பார்கள் என்றார்.